மேலும் அறிய

Ola S1 X+ Price Cut: S1 X+ மாடலின் விலையில் ரூ.20 ஆயிரத்தை குறைத்த ஓலா நிறுவனம்! புதிய நிலவரம் என்ன?

Ola S1 X+ Price Cut: S1 X+ மாடல் மின்சார ஸ்கூட்டரின் அறிமுக விலையில் இருந்து 20 ஆயிரம் ரூபாயை குறைத்து, ஓலா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Ola S1 X+ Price Cut: விலை குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து ஓலா நிறுவனத்தின் S1 X+ மாடல் மின்சார ஸ்கூட்டரின் விலை, 89 ஆயிரத்து 999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஓலா மின்சார ஸ்கூட்டர்:

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஓலா எலக்ட்ரிக், அதிகமான விலை நிர்ணயிப்பு நடவடிக்கையால் விற்பனையில் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட  S1 X மற்றும் S1 X+ ஆகிய மாடல்கள் இதற்கு உதாரணமாகும் . இந்நிலையில், "டிசம்பர் டு ரிமெம்பர்" என பெயரில், ஓலா நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டரளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. 

ரூ.20,000 தள்ளுபடி:

இந்நிலையில் தான் யாரும் எதிர்பாராத விதமாக S1 X+ மாடலின் விலையை 20 ஆயிரம் ரூபாய் குறைத்து ஓலா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 999 ரூபாய் ஆக இருந்த அறிமுக விலை தற்போது, 89 ஆயிரத்து 999 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில், இந்த மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் விநியோகம் தொடங்கும் என எதிபார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் முன்பதிவு செய்யப்படும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 2 kWh பேட்டரி கொண்ட S1 X மாடலின் விலையும், 3 kWh பேட்டரி கொண்ட S1 X + மாடலின் விலையும் 89 ஆயிரத்து 999 ரூபாய் ஆக  உள்ளது. எனவே, S1 X மாடல் அதே பழைய விலைக்கு இனி விற்பனை செய்யப்படுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரம்,  3 kWh பேட்டரி திறன் கொண்ட போட்டி நிறுவனங்களின் அனைத்து மாடல்களின் விலையும் சுமார் ரூ. 1.3 லட்சத்திற்கு மேல் உள்ளது. இந்த சூழலில் ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் 40 ஆயிரம் ரூபாய் வரையிலான குறைந்த விலையில் கிடைப்பது, அந்நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

S1 X + பேட்டரி விவரங்கள்:

Ola S1 X+ என்பது S1 Air இன் சற்றே மேம்படுத்தப்பட்ட எடிஷனாகும். சற்று வித்தியாசமான வடிவமைப்பு அழகியலைக் கொண்டுள்ளது. தொடக்கக்காரர்களுக்கு, S1 X வரம்பில் உள்ள மின்சார ஸ்கூட்டர்கள் ஒரு வித்தியாசமான ஹெட்லைட் அமைப்பை கொண்டுள்ளன. இது ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகிறது.

புதிய LCD இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், டச் அல்லாத பேனல் ஆகியவற்றை கொண்டு இருந்தாலும்,  S1 Air, S1 மற்றும் S1 Pro உடன் ஒப்பிடும் போது குறைவான அம்சங்களைக் கொண்டுள்ளது. S1 X+ இல் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் 5-இன்ச் யூனிட் ஆகும், இதில் பல பிரிவுகள் கொண்ட அணுகுமுறை, கீலெஸ் அன்லாக் மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி உள்ளது.  பவர்டிரெய்ன்களைப் பொறுத்தவரை, S1 X+ ஆனது நிலையான 3 kWh பேட்டரியைப் பெறுகிறது, இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கிமீ தூரம் பயணிக்கலாம். மோட்டார் 6 kW உச்ச ஆற்றலைக் கொண்டுள்ளது. இதன் மூலம் மணிக்கு 90  கிமீ  வேகத்தில் பயணிக்க முடிகிறது. Eco, Normal மற்றும் Sports ஆகிய மூன்று ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.

Car loan Information:
Calculate Car Loan EMI

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Nellai Jayakumar : மர்மம் விலக்குமா டார்ச் லைட்? ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்! வலுக்கும் சந்தேகம்KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Today Movies in TV, May 13:  லீவு போட ரெடியா இருங்க - டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
Today Movies in TV, May 13: லீவு போட ரெடியா இருங்க - டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு
சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு
Embed widget