Ola Roadster : அசத்தும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்.. Roadster எனும் புது மின்சார பைக்.. வியக்கவைக்கும் விலை!
Ola Roadster X price: Roadster என்ற பெயரில் பைக்குகளை தயாரித்து வெளியிட உள்ளதாக ஓலா எலக்ட்ரிக் அறிவிப்பு. ஆரம்ப விலையாக 74,999 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தொடர்ந்து இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தயாராகி வருகிறது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், தங்களது முதல் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்துவது குறித்து ஏற்கனவே பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அசத்த வரும் ஓலா எலக்ட்ரிக் பைக்குகள்: இந்த நிலையில், தங்களது முதல் எலெக்ட்ரிக் பைக்கின் முக்கிய தகவல்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. Roadster என்ற பெயரில் பைக்குகளை தயாரித்து வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப விலையாக 74,999 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Roadster, Roadster X, மற்றம் Roadster Pro என மூன்று வேரியண்ட்களில் முதல் Roadster சீரிஸ் வெளியாக உள்ளது. பைக் அறிமுக விழாவில் பேசிய ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், "அடுத்த ஆண்டு தீபாவளி முதல் Roadster Pro பைக்குகள் கிடைக்கும். அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல், Roadster, Roadster X பைக்குகள் கிடைக்கும்.
பைக்கின் விலை என்ன?
3.5kWh மாடல் பைக்கின் விலை 1.04 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4.5kWh மாடலின் விலை 1.19 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6kWh வெர்ஷனின் விலை 1.39 லட்சம் ரூபாயாகும். அதை விட குறைவான விலையில் Roadster X சீரிஸ் பைக்குகள் கிடைக்க உள்ளன.
2.5kWh மாடல் பைக்கின் விலை 74,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3.5kWh மாடல் பைக்கின் விலை 85,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4.5kWh ரக பைக்கின் விலை 99,000 ரூபாய் ஆகும்.
பைக் அறிமுக விழாவில் இதுகுறித்து விரிவாக பேசிய பவிஷ் அகர்வால், "எங்கள் வர்த்தகத்தின் எதிர்காலத்தை இன்று மூன்று நிறுவனங்கள் மற்றும் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் வெளிப்படுத்தி உள்ளோம். நுகர்வோருக்கான ஓலா வணிகத்திற்கான எங்கள் லட்சியம் இந்தியா முழுவதும் குறைவான விலையில் சிறப்பு வாய்ந்த, அணுகக்கூடிய பயண அனுபவங்களை வழங்குவதாகும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், வெறும் கனவாகவே இருந்தது. இன்று, நாங்கள் நாட்டின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாகவும், உலகின் மிகப்பெரிய இரு சக்கர மின்சார வாகன உற்பத்தியாளராகவும் மாறி இருக்கிறோம். சந்தை மதிப்பை பொறுத்தவரையில், உலகளவில் அனைத்து மின்சார வாகன நிறுவனங்களிலேயே நாங்கள் இப்போது ஐந்தாவது பெரிய நிறுவனமாக உள்ளோம்" என்றார்.