மேலும் அறிய

ரூபாய் 1 லட்சம் வரை குறைவு.. i20 முதல் Tiago வரை - ஜிஎஸ்டி எதிரொலியால் இவ்வளவு கம்மியா?

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக கார்களின் விலை ரூபாய் 50 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை குறைந்துள்ளது. எந்த கார் எவ்வளவு குறைந்துள்ளது? என்பதை கீழே காணலாம்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. ஒவ்வொரு பொருளுக்கும் வரியை விதித்ததால் பல பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. 

அதிரடியாக குறைந்த கார்களின் விலை:

இந்த நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜிஎஸ்டி வரியை 5, 12 மற்றும் 40 சதவீதமாக மாற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு பொருட்களுக்குமான புதிய வரியை விதித்துள்ளார். சிறிய ரக கார்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இந்த புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பால் ரூபாய் 50 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை விலை குறைந்துள்ள கார்களின் பட்டியலை கீழே காணலாம்.

1. Hyundai i20 N Line - ரூ.8.88 லட்சம் ( புதிய விலை) -  ரூ 1.10 முதல் ரூபாய் 1.38 லட்சம் வரை குறைவு

2. Maruti Suzuki Swift - ரூ.5.78 லட்சம் ( பு.வி)               - ரூ.71 ஆயிரம் முதல் ரூ.1.06 லட்சம் வரை குறைவு

3. Maruti Suzuki Wagon R - ரூ.5.15 லட்சம் ( பு.வி)         - ரூ.64 ஆயிரம் முதல் ரூபாய் 84 ஆயிரம் வரை குறைவு

4. Tata Tiago - ரூ.4.45 லட்சம் ( பு.வி)                             - ரூ.64 ஆயிரம் முதல் ரூ.84 ஆயிரம் வரை குறைவு

5.Maruti Suzuki Brezza - ரூ.8.39 லட்சம் ( பு.வி)           - ரூ.30 ஆயிரம் முதல் ரூபாய் 48 ஆயிரம் வரை குறைவு

1. Hyundai i20 N Line:

கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களின் முதன்மைத் தேர்வாக இருப்பது ஹுண்டாயின் i20 ஆகும். இதன் பழைய விலை ரூபாய் 9.99 லட்சம் முதல் ரூபாய் 12.56 லட்சம் ஆகும். தற்போது இது 18 சதவீத ஜிஎஸ்டிக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் இதன் புதிய விலை ரூபாய் 8.89 லட்சம் முதல் ரூபாய் 11.18 லட்சமாக மாறியுள்ளது. இதனால், பழைய விலையில் இருந்து ரூபாய் 1.10 லட்சம் முதல் ரூபாய் 1.38 லட்சம் வரை குறைந்துள்ளது.

ரூபாய் 1 லட்சம் வரை குறைவு.. i20 முதல் Tiago வரை - ஜிஎஸ்டி எதிரொலியால் இவ்வளவு கம்மியா?

2. Maruti Suzuki Swift:

பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்பும் பலரின் முதன்மைத் தேர்வாக இருப்பது Maruti Suzuki Swift ஆகும். இதன் தொடக்க விலை 6.49 லட்சம் முதல் 9.65 லட்சம் வரை இருந்தது. ஆனால், தற்போது புதிய ஜிஎஸ்டி வரி ( 18) விதிப்பின் கீழ் வந்துள்ளதால் இதன் விலை ரூபாய் 5.78 லட்சம் முதல் ரூபாய் 8.59 லட்சமாக மாறியுள்ளது. இதனால், ரூபாய் 71 ஆயிரம் முதல் ரூபாய் 1.06 லட்சம் வரை விலை குறைந்துள்ளது. 

ரூபாய் 1 லட்சம் வரை குறைவு.. i20 முதல் Tiago வரை - ஜிஎஸ்டி எதிரொலியால் இவ்வளவு கம்மியா?

3. Maruti Suzuki Wagon R:

நெருக்கடியான சாலைகளிலும், நகர்ப்புறங்களிலும் ஓட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட கார் இந்த Maruti Suzuki Wagon R ஆகும். இதன் விலை ரூபாய் 5.79 லட்சம் முதல் ரூபாய் 7.62 லட்சம் ஆகும். தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் இதன் விலை ரூபா் 64 ஆயிரம் முதல் ரூபாய் 84 ஆயிரம் வரை குறைந்துள்ளது. இதனால், இனி இந்த கார் ரூபாய் 5.15 லட்சம் முதல் ரூபாய் 6.78 லட்சத்திற்கே விற்கப்பட உள்ளது.

ரூபாய் 1 லட்சம் வரை குறைவு.. i20 முதல் Tiago வரை - ஜிஎஸ்டி எதிரொலியால் இவ்வளவு கம்மியா?

4. Tata Tiago:

டாடா நிறுவனத்தின் முக்கியமான படைப்பாக இருப்பது Tata Tiago. இந்த காருக்கு தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதன் விலை ரூபாய் 5 லட்சம் முதல் 8.55 லட்சமாக இருந்தது. தற்போது இது 18 சதவீத ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் இனி ரூபாய் 4.45 லட்சம் முதல் ரூபாய் 7.61 லட்சம் வரை விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால், ரூபாய் 55 ஆயிரம் முதல் ரூபாய் 94 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது.

ரூபாய் 1 லட்சம் வரை குறைவு.. i20 முதல் Tiago வரை - ஜிஎஸ்டி எதிரொலியால் இவ்வளவு கம்மியா?

5. Maruti Suzuki Brezza:

மாருதி நிறுவனத்தின் தரமான படைப்பு Maruti Suzuki Brezza. இதன் விலை ரூபாய் 8.69 லட்சம் ஆகும். இந்த கார் 18 சதவீதத்திற்கான வரி விலக்கில் வராத காரணத்தால் 40 சதவீத வரியின் கீழ் வந்துள்ளது. இதன் விலை ரூபாய் 8.69 லட்சம் முதல் ரூபாய் 13.98 லட்சம் வரை இருந்தது. புதிய ஜிஎஸ்டி வரிக்கு பிறகு இதன் விலை ரூபாய் 8.39 லட்சம் முதல் ரூபாய் 13.50 லட்சமாக மாறியுள்ளது. இதனால், ரூபாய் 30 ஆயிரம் முதல் ரூபாய் 48 ஆயிரம் வரை இதன் விலை குறைந்துள்ளது.

ரூபாய் 1 லட்சம் வரை குறைவு.. i20 முதல் Tiago வரை - ஜிஎஸ்டி எதிரொலியால் இவ்வளவு கம்மியா?

மேலே கூறிய அனைத்து கார்களும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் விரும்பும் கார்கள் ஆகும். இதனால், இந்த கார்களின் விலை குறைந்தது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
AVM Saravanan: ஓட்டுக்காக வரவில்லை.. எல்லாம் அன்பு தான்.. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!
AVM Saravanan: ஓட்டுக்காக வரவில்லை.. எல்லாம் அன்பு தான்.. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப்பை அலறவிடும் கிம் ஜாங் உன்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப்பை அலறவிடும் கிம் ஜாங் உன்
Embed widget