Popular cars: இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான விலை - ஆனாலும் பிரபலமான டாப் 3 கார் மாடல்கள்
cars costing above Rs 10 lakh: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான விலையில், மிகவும் பிரபலமான கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
![Popular cars: இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான விலை - ஆனாலும் பிரபலமான டாப் 3 கார் மாடல்கள் Most popular cars costing above Rs 10 lakh automobile news in tamil Popular cars: இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான விலை - ஆனாலும் பிரபலமான டாப் 3 கார் மாடல்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/07/755ff35b8cf81d1bfcd57cee99866b311709795873991732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
cars costing above Rs 10 lakh: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான விலையில், ஹுண்டாயின் கிரேட்ட மிகவும் பிரபலமான கார் மாடலாக உள்ளது.
ரூ.10 லட்சம் பட்ஜெட்டிலான கார்கள்:
இந்தியாவில் கார் பயனாளர்கள் தங்களது இரண்டாவது காருக்காக அதிக தொகையை செலவிடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உள்நாட்டு சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார்களில் குறிப்பிட்ட மாடல்களின் விலை, 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலையை கொண்டிருந்தும், விற்பனையில் அசத்தும் கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Hyundai Creta:
கிரேட்டா கார் மாடல் ஹூண்டாய்க்கு தொடர்ந்து ஒரு பெரிய விற்பனையாளராக இருந்து வருகிறது. அந்த நிறுவனம் சார்பில் இதுவரை அதிகம் விற்பனையான சிறந்த காராகவும் உள்ளது. வென்யூ மற்றும் எக்ஸ்டெர் போன்ற ஹுண்டாயின் மலிவான எஸ்யூவிகளை விட அதிகம் விற்பனையாகிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் கிரேட்டா கடந்த மாதம் 15,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி மிகப்பெரிய அளவில் பங்களிப்பை அளித்துள்ளது. புதிய கிரேட்டாவானது புதிய தோற்றத்துடன் புதிய 1.5லி டர்போ பெட்ரோல் இன்ஜின் ADAS போன்ற கூடுதல் அம்சங்களுடன் அண்மையில் தான் அறிமுகமானது.
Maruti Grand Vitara:
கிராண்ட் விட்டாரா மாருதி நிறுவனத்தின் மற்றொரு வெற்றிகரமான மாடலாகும். பிரீமியம் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் தனக்கான இடத்தை பிடித்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே கிராண்ட் விட்டாரா விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது. ஒரு லேசான ஹைப்ரிட் மற்றும் முழு ஹைப்ரிட் என இரண்டு கார்களிலும் தானியங்கி விருப்பங்களுடன் வருகிறது. அதே நேரத்தில் AWD மாறுபாட்டையும் பெறுகிறது. கிராண்ட் விட்டாராவில் இரண்டு வேரியண்ட்களில் மைல்ட் ஹைப்ரிட் விற்பனையில் ஆதிக்கம் செலுத்துகிறது.
Mahindra Scorpio and Scorpio N:
ஸ்கார்பியோ மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான பிராண்ட் பெயராக இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்கார்பியோ N அறிமுகத்தால், அந்த புகழ் விண்னை முட்டியுள்ளது. முந்தைய ஸ்கார்பியோ அதன் அழகைத் தொடர்வதோடு, தனக்கான வாடிக்கையாளர் பட்டாளட்தையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில் புதிய ஸ்கார்பியோ N சிறிய SUV வாங்குபவர்களை குறிவைக்கிறது. இந்த மாடல் ஆனது 2.0லி டர்போ பெட்ரோல் மற்றும் 2.2லி டீசல் இன்ஜின்கள் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன்களை கொண்டுள்ளன.
Toyota Innova:
இந்தியாவில் அறிமுகமான முதல் நாளில் இருந்தே மிகவும் பிரபலமான மற்றொரு பிராண்ட் இன்னோவா ஆகும். பலதரப்பட்ட பயன்பாட்டிற்கான வாகனங்களை விற்பனை செய்வதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. Innova அதன் முந்தைய Crysta வடிவத்திலும் விற்பனையில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதே நேரத்தில் புதிய Hycross மூலம் மின்சார வாகனத்தையும் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. விலையில் அதிக அதிகரிப்பு இருந்தபோதிலும், இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் விற்பனையில் அசத்துகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)