MG Cars Discount: மழையை போல கொட்டிய தள்ளுபடி.. ரூ.4 லட்சம் வரை ஆஃபர், ஆஸ்டர் தொடங்கி க்ளோஸ்டர் வரை ஜமாய்
MG Cars Discount: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் கார்களுக்கு, நவம்பர் மாதத்தில் ரூ.4 லட்சம் வரை சலுகை மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

MG Cars Discount: எம்ஜி நிறுவனத்தின் கார்களுக்கு ஆஸ்டர் தொடங்கி க்ளோஸ்டர் வரையிலான கார்களுக்கு நவம்பர் மாதத்தில் சலுகை மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எம்ஜி கார்களுக்கு சலுகை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களது கார் விற்பனையை ஊக்குவிக்கவும், கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களை விற்று தீர்க்கவும், ஒவ்வொரு கார் உற்பத்தி நிறுவனமும் மாதாமாதம் சலுகைகளை வழங்குவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் எம்ஜி நிறுவனத்தின் கார்களுக்கு, நவம்பர் மாதத்தில் ரூ.4 லட்சம் வரை சலுகை மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ப்ராண்டின் ஆஸ்டர், கோமெட் தொடங்கி க்ளோஸ்டர் வரையிலான பலதரப்பட்ட கார்களுன் பலன்களை பெறுகின்றன. இது கையிருப்பு மற்றும் வேரியண்ட்கள் பொறுத்து மாறுபடுகிறது.
1. எம்ஜி கோமெட் கார் - ரூ.56,000
நவ்ம்பர் மாதத்தில் கோமெட் கார் வாங்குபவர்கள் அதிகபட்சமாக 56 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். அதிகபட்சமாக பணத்தள்ளுபடியாக 28 ஆயிரம் ரூபாய், லாயல்டி போனஸ் ஆக 20 ஆயிரம் ரூபாய் மற்றும் கார்ப்ரேட் போனஸ் ஆக 8 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது புதிய 7 KW ACFC வகோமெட்டிற்கு பொருந்தும். அதே புதிய 3 KW AC கோமெட் வேரியண்டிற்கு லாயல்டி போனஸ் ஆக 20 ஆயிரம் ரூபாய் மற்றும் கார்ப்ரேட் போனஸ் ஆக 8 ஆயிரம் என மொத்தம் 28 ஆயிரம் ரூபாயை பயனர்கள் சேமிக்கலாம்.
2. எம்ஜி ஆஸ்டர் கார் - ரூ.35,000
எம்ஜி நிறுவனத்தின் ஆஸ்டர் கார் மாடல் மீது நவம்பர் மாதத்தில் ரூ.35 ஆயிரம் ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் சேமிக்கலாம். நிறுவனத்தின் அறிவிப்பின்படி, லாயல்டி போனஸ் ஆக 20 ஆயிரம் ரூபாய் மற்றும் கார்ப்ரேட் போனஸ் ஆக 15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது ஆஸ்டர் பெட்ரோல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஆஸ்டர் பெட்ரோல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வேரியண்டிற்கும் பொருந்தும்.
3. எம்ஜி ஹெக்டர் கார் - ரூ.90,000
ப்ராண்டின் பிரபலமான எஸ்யுவிக்களில் ஒன்றான ஹெக்டர் மாடலுக்கு, நவம்பர் மாதத்தில் ரூ.90 ஆயிரம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் - மேனுவல் மற்றும் டீசல் மேனுவல் 5 சீட்டர் வேரியண்ட்களுக்கு, எக்ஸ்சேஞ் போனஸ் ஆக ரூ.50,000, லாயல்டி போனஸ் ஆக ரூ.20,000 மற்றும் கார்ப்ரேட் போனஸ் ஆக ரூ.20,000 என ரூ.90 ஆயிரம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதேநேரம், ஹெக்டரின் பெட்ரோல் - ஆட்டோமேடிக் வேரியண்டிற்கு அதிகபட்சமாக 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சலுகை மற்றும் தள்ளுபடிகளை மட்டுமே பெற முடியும். அதாவது எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
4. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார் - ரூ.90,000
ஹெக்டர் ப்ளஸ்ஸின் பெட்ரோல் மேனுவல் மற்றும் டீசல் மேனுவல் (6/7 சீட்டர்) வேரியண்ட்களுக்கும், நவம்பர் மாதத்தில் 90 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எக்ஸ்சேஞ் போனஸ் ஆக ரூ.50,000, லாயல்டி போனஸ் ஆக ரூ.20,000 மற்றும் கார்ப்ரேட் போனஸ் ஆக ரூ.20,000 என ரூ.90 ஆயிரம் அடங்கும். அதேநேரம், ஹெக்டர் ப்ளஸ்ஸின் பெட்ரோல் - ஆட்டோமேடிக் வேரியண்டிற்கு அதிகபட்சமாக 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சலுகை மற்றும் தள்ளுபடிகளை மட்டுமே பெற முடியும். அதாவது எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
5. MG ZS EV - ரூ.1.25 லட்சம்
ZS EV காரின் மீது நவம்பர் மாதத்தில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை எம்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. காரின் தொடக்க நிலை வேரியண்டிற்கு 85 ஆயிரம் பணத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுபோக லாயல்டி மற்றும் கார்ப்ரேட் போனஸ் தலா ரூ.20 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மற்ற வேரியண்ட்களுக்கு லாயல்டி மற்றும் கார்ப்ரேட் போனஸ் தலா ரூ.20 ஆயிரம் என மொத்தம் 40 ஆயிரம் மதிப்பிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
5. MG க்ளோஸ்டர் - ரூ.4 லட்சம்
எம்ஜி நிறுவனம் நவம்பர் மாதத்தில் தனது முதன்மை காரான க்ளோஸ்டருக்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்துள்ளது. 2 வீல் ட்ரைவ் மற்றும் 4 வீல் ட்ரைவ் என இரண்டு வேரியண்ட்களுக்கும் இது பொருந்தும். பணத்தள்ளுபடியாக ரூ.3.5 லட்சமும், எக்சேஞ்ச் போனஸ் ஆக ரூ.50 ஆயிரம் என மொத்தம் 4 லட்சம் பணப்பலனை பயனர்கள் பெற முடியும்.





















