Top 5 Sedan: நம்ம ஊர் ரோட்டுக்கு இது தான் சரி, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட செடான்கள் - டாப் 5 மாடல்
Sedan High Ground Clearance: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் கிடைக்கும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட செடான் கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Sedan High Ground Clearance: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் கிடைக்கும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட டாப் 5 செடான் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட செடான்
இந்திய கார் பிரியர்களின் முதன்மையான தேர்வாக செடான் மாடல்கள் இருந்தன. ஆனால், கடந்த ஒரு தசாப்தத்தில் அதனை பின்னுக்கு தள்ளி எஸ்யுவிக்கள் உள்ளூர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவின் மோசமான சாலை வசதிகள் மற்றும் ஆங்காங்கே மலைகளை போன்று அமைக்கப்பட்டு இருக்கும் ஸ்பீட் பிரேக்கர்களை, எந்தவித அச்சமும் இன்றி கடந்து செல்ல அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட எஸ்யுவிக்களே சிறந்தவையாக உள்ளன. குறைந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட செடான் கார்களை மேடு பள்ளங்களில் ஓட்டும்போது, வாகனத்தின் அடிப்பக்கத்தில் பெரும் சேதம் ஏற்படக்கூடும். இருப்பினும், தற்போதும் இந்திய சந்தையில் பாதுகாப்பான அளவில் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட சில செடான்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அப்படி, இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட டாப் 5 செடான்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
5. டாடா டைகோர்:
டாடா நிறுவனத்தின் வழக்கமான டைகோர் கார் மாடல் 170மிமீ கிரவுண்ட் கிளியரன்சையும், சிஎன்ஜி எடிஷன் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்சையும் கொண்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு வெளியான டைகோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மிக பழமையாக செடான் ஆகும். சீரான் இடைவெளியில் தோற்றம் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட இந்த கார், கடந்த 2019ம் ஆண்டில் மின்சார எடிஷனிலும் சந்தைப்படுத்தப்பட்டது. இதில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. டைகோர் கார் மாடலின் விலை ரூ.6 லட்சத்தில் தொடங்கி ரூ.9.55 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 20 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.
4. டாடா டைகோர் EV:
டைகோரின் மின்சார எடிஷன் மேலும் மேம்படுத்தப்பட்டு 172 மிமீ கிரவுண்ட் கிளியரன்சை கொண்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும் முற்றிலும் புதிய மின்சார செடான் இதுவே ஆகும். 21.5Kwh பேட்டரியுடன் சிங்கிள் மோட்டார் பவர் ட்ரெயினை கொண்டுள்ளது. வாகனத்தின் தரைப்பகுதிக்கு கீழே பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால், வாகனத்தின் உயரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோசமான சாலைகளிலும் எளிதாக பயணிக்கலாம். ரூ.12.49 லட்சம் தொடங்கி ரூ.13.75 லட்சம் வரையிலான விலைபட்டியலை கொண்ட இந்த காரானது, முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.ஹோண்டா அமேஸ்:
இந்திய சந்தையில் மாருதியின் டிசைர் கார் மாடலுக்கு கடும் போட்டியாளராக உள்ள அமேஸ், கடந்த ஆண்டின் இறுதியில் ஜெனரேஷனல் அப்டேட்டை பெற்றது. இது டிசையரை காட்டிலும் வலுவான 89bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டிருப்பதோடு மட்டுமின்றி, கூடுதலாக 9 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது. அதாவது அமேஸ் 172 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸை பெற்றுள்ளது. இந்த காரின் விலை ரூ.8.10 லட்சத்தில் தொடங்கி ரூ.11.28 லட்சம் வரை நீள்கிறது. லிட்டருக்கு சுமார் 17 முதல் 18 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
2. ஃபோல்க்ஸ்வேகன் விர்டஸ்:
இந்தியாவில் தங்களது 2.0 திட்டத்தின் அடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு ஃபோல்க்ஸ்வேகன் நிறுவனம் விர்டஸ் கார் மாடலை அறிமுகப்படுத்தியது. உடனடியாக வாடிக்கையாளர்களை கவந்த இந்த வாகனம், சிறந்த விற்பனையை பதிவு செய்த மிட்-சைஸ் செடானாக உள்ளது. காரணம் சக்தி வாய்ந்த டர்போ - பெட்ரோல் இன்ஜின்ஸ், நன்கு கட்டமைக்கப்பட்ட உட்கட்டமைப்புகள், ஏராளமான வசதிக்கான அம்சங்கள் மற்றும் குறிப்பாக 179 மில்லி மீட்டர் என்ற சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டிருப்பதாகும். விற்பனையில் அசத்தும் கியாவின் மிட்-சைஸ் எஸ்யுவி ஆன செல்டோஸை காட்டிலும், 11 மில்லி மீட்டர் மட்டுமே விர்டசின் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாகும். 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல். 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களானது, 6 ஸ்பீட் மேனுவல், 6 ஸ்பீட் ஆட்டோமேடிக்/ 6 ஸ்பீட் மேனுவல், 7 ஸ்பீட் DCT ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. விர்டஸ் கார் மாடலின் விலை ரூ.11.56 லட்சத்திலிருந்து ரூ.19.40 லட்சம் வரை நீள்கிறது. இது லிட்டருக்கு 18 முதல் 21 கிலோ மீட்டர் தூரம் வரையில் மைலேஜ் வழங்குகிறது.
1. ஸ்கோடா ஸ்லாவியா
விர்டஸ் கார் மாடல் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் தால் ஸ்லாவியாவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதே பவர்ட்ரெயின் ஆப்ஷன்களையே ( 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவலை தவிர) அப்படியே தொடர்கிறது. இது ட்ரைவிங் பண்புகள், கிரவுண்ட் கிளியரன்ஸும் ( 179 மில்லி மீட்டர் ) விர்டஸை போன்றே உள்ளது. அதேநேரம், மிகவும் முக்கியமான விலை பிரிவில் மட்டும் விர்டஸை பின்னுக்கு தள்ளி, ஸ்லாவியா ஆதிக்கம் செலுத்துகிறது. அதன்படி, ரூ. 1 லட்சம் வரை குறைந்த விலையில் ரூ.10.49 லட்சம் முதல் ரூ.18.39 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. பயனாளர்களின் கருத்தின்படி, 15 முதல் 18 கிலோ மைலேஜ் வழங்குகிறது.



















