மேலும் அறிய

Mahindra Upcoming Cars: ரூ.10 லட்சம் டூ 19 லட்சம் பட்ஜெட்..! 4 புதிய SUV & EV-கள் - மஹிந்த்ராவின் பக்கா ஸ்கெட்ச் - எப்போ?

Mahindra Upcoming Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 4 புதிய எஸ்யுவி மற்றும் மின்சார கார் மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்த மஹிந்த்ரா திட்டமிட்டுள்ளது.

Mahindra Upcoming Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்த மஹிந்த்ரா திட்டமிட்டுள்ள நான்கு கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மஹிந்த்ராவின் புதிய கார் மாடல்கள்

இந்திய சந்தையில் கடந்த ஆண்டு பல பிரீமியம் கார் மாடல்களை அறிமுகப்படுத்திய மஹிந்த்ரா நிறுவனம், தொடர்ந்து புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டுகிறது. அந்த வகையில் அடுத்த ஓராண்டில் மின்சார மற்றும் இன்ஜின் அடிப்படையிலான கார் கார் மாடல்களை அடுத்தடுத்து களமிறக்க முடிவு செய்துள்ளது. அந்த கார் மாடல்களின் தொடக்க விலையானது 10 லட்சத்தில் தொடங்கி 19 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. அவை தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

இன்ஜின் & EV எடிஷனில் 4 புதிய கார்கள்:

1. ஸ்கார்ப்பியோ - என்

மஹிந்திராவின் அடுத்த முக்கிய சந்தைப்படுத்தலாக ப்ராண்டின் மிகவும் விரும்பப்படும் பாடி-ஆன்-ஃப்ரேம் எஸ்யுவியின் இரண்டாம் தலைமுறையான ஸ்கார்பியோ-என் மாடலின் அப்டேடட் எடிஷன் இருக்கும். கடந்த 2022ம் ஆண்டுஜுன் மாதம் முதல்முறையாக சந்தைப்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ-என், போட்டித்தன்மையை தக்கவைப்பதற்காக இந்தக் கோடையின் பிற்பகுதியில் ஒரு சிறிய மறுவடிவமைப்பிற்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளது.


Mahindra Upcoming Cars: ரூ.10 லட்சம் டூ 19 லட்சம் பட்ஜெட்..! 4 புதிய SUV & EV-கள் - மஹிந்த்ராவின் பக்கா ஸ்கெட்ச் - எப்போ?

மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ-என் காரில், மாற்றியமைக்கப்பட்ட முகப்பு விளக்கு மற்றும் டெயில்லைட் க்ராஃபிக்ஸ், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள், புதிய ரேடியேட்டர் க்ரில் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட 18-இன்ச் ஃபைவ்-ஸ்போக் அலாய் வீல்கள் இடம்பெற்று இருப்பது சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உணர்த்துகின்றன. கேபினிலும் கணிசமான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதில் மறுவடிவமைக்கப்பட்ட டேஷ்போர்டு, 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய, ஹாரிசாண்டல் ஏசி வென்ட்கள் ஆகியவை அடங்கும்.

2. இரண்டாவது தலைமுறை மஹிந்த்ரா தார்

கடந்த 2020ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விரிவான ஃபேஸ்லிஃப்ட்டைப் பெற வாய்ப்புள்ளது. இதில் மிகவும் கவனிக்கத்தக்கதாக, புதிய தார் ராக்ஸைப் போன்ற தோற்றமுடைய ஒரு புதிய முன்பக்க முகப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி,  புதிய தாரில் C வடிவ LED பகல்நேரங்களில் ஒளிரக்கூடிய LED முகப்பு விளக்குகள் மற்றும் ஆறு டபுள்-ஸ்லாட் கிரில் இடம்பெறும்.  மேலும்19-இன்ச் வீல் ஆப்ஷனும் வழங்கப்படலாம். புதிய மஹிந்திரா தார் காரின் உட்புறத்திலும் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், வெண்டிலேடட் வசதியுள்ள முன் இருக்கைகள் மற்றும் ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிர்ரர் போன்ற புதிய அம்சங்கள் இடம்பெறலாம்.


Mahindra Upcoming Cars: ரூ.10 லட்சம் டூ 19 லட்சம் பட்ஜெட்..! 4 புதிய SUV & EV-கள் - மஹிந்த்ராவின் பக்கா ஸ்கெட்ச் - எப்போ?

3. விஷன் எஸ் காம்பேக்ட் எஸ்யுவி

அடுத்த ஆண்டு தொடக்கத்தில், மஹிந்திரா நிறுவனம் தனது புதிய NU_IQ ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட ஒரு காம்பாக்ட் எஸ்யூவியான விஷன்.எஸ்-இன் தயாரிப்பு எடிஷனை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இந்த மாடல், XUV 3XO மற்றும் தார் ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியை நிரப்பும் வகையில், ஒரு மோனோகோக் எஸ்யூவியின் சௌகரியம் மற்றும் நேர்த்தியையும், பாடி-ஆன்-ஃப்ரேம் எஸ்யூவி மாடலின் உறுதியான தன்மை மற்றும் சாலையில் வலுவான இருப்பையும் ஒன்றிணைக்க உள்ளது. இது பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோல்-எலெக்ட்ரிக் ஹைப்ரிட் வகைகளில் வழங்கப்படலாம்.


Mahindra Upcoming Cars: ரூ.10 லட்சம் டூ 19 லட்சம் பட்ஜெட்..! 4 புதிய SUV & EV-கள் - மஹிந்த்ராவின் பக்கா ஸ்கெட்ச் - எப்போ?

4. போர்ன் எலெக்ட்ரிக் கார்

அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில், மஹிந்திரா தனது ஐந்தாவது போர்ன் எலெக்ட்ரிக் சீரிஸ் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தலாம். இதற்கு BE 7 அல்லது BE.07 என்று பெயரிடப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மாடல் சுமார் 4.6 மீட்டர் நீளம், 1.9 மீட்டர் அகலம், 1.7 மீட்டர் உயரம் மற்றும் சுமார் 2.8 மீட்டர் வீல்பேஸ் கொண்டிருக்கும். உள்ளூர் சந்தையில் டாடா ஹாரியர் மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 ஆகிய மின்சார கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும். மஹிந்திரா இதை 228 hp/380 Nm மற்றும் 282 hp/380 Nm திறன் கொண்ட சிங்கிள்-மோட்டார் RWD வேரியண்ட்டுகளில், முறையே 59 kWh மற்றும் 79 kWh LFP பேட்டரி பேக்குகளின் உதவியுடன் அறிமுகப்படுத்தலாம். அவை முறையே 530 கிலோமீட்டர் மற்றும் சுமார் 650 கிலோமீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

எலக்ட்ரிக் யூனிக் சைக்கிளில் உலகை சுற்றும் சேலத்து இளைஞர்; ஒற்றை சக்கரம் கொண்ட இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன?
எலக்ட்ரிக் யூனிக் சைக்கிளில் உலகை சுற்றும் சேலத்து இளைஞர்; ஒற்றை சக்கரம் கொண்ட இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன?
அதிக மைலேஜ், இட வசதியும் வேண்டும்? பட்ஜெட்டிலும் வாங்கனும்? மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கான டாப் 7 சீட்டர் கார்கள் பட்டியல் இதோ
அதிக மைலேஜ், இட வசதியும் வேண்டும்? பட்ஜெட்டிலும் வாங்கனும்? மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கான டாப் 7 சீட்டர் கார்கள் பட்டியல் இதோ
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
Renault Kwid Best Variant: தெறிக்கவிடும் ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்; அதுல பெஸ்ட் வேரியண்ட் எதுன்னு தெரியுமா.? ஒப்பீடு இதோ
தெறிக்கவிடும் ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்; அதுல பெஸ்ட் வேரியண்ட் எதுன்னு தெரியுமா.? ஒப்பீடு இதோ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget