Mileage Bikes: ஒருமுறை டேங்க் ஃபில் பண்ணா போதும்..! 600 கிமீ தூரம் வரை பயணிக்கலாம், பைக்குகளின் லிஸ்ட் இதோ..!
Mileage Bikes: ஒருமுறை எரிபொருள் டேங்கை நிரப்பினாலே, சுமார் 600 கிமீ தூரத்திற்கு நிற்காமல் பயணம் செய்யக்கூடிய பைக்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Mileage Bikes: எரிபொருள் டேங்கை ஒருமுறை நிரப்பினாலே மிக நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடிய, பைக்குகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
டிவிஎஸ் ஸ்போர்ட்:
இந்திய சந்தையில் அதிக மைலேஜ் தரும் பைக்குகளில் டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் வாகனமும் ஒன்று. இது லிட்டருக்கு 75 கிமீ மைலேஜை வழங்குகிறது. 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் பெட்ரோல் டேங்கை ஒருமுறை நிரப்பினாலே, எசுமார் 750 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். இந்த பைக் இந்தியாவில் ரூ.70,773 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பஜாஜ் பிளாட்டினா:
பஜாஜ் பிளாட்டினா பிராண்டின் பிரபலமான பைக்குகளில் ஒன்றாகும். இந்த பைக் லிட்டருக்கு சுமார் 73 கிமீ மைலேஜ் வழங்குகிறது.11 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த வாகனத்தின் எரிபொருள் டேங்கை ஒருமுறை நிரப்பினால், சுமார் 803 கிமீ வரை பயணிக்கலாம். மலிவு விலை மோட்டார் சைக்கிள் ஆன பிளாட்டினா, ரூ.67,808 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஹோண்டா லிவோ:
ஹோண்டா லிவோ பிராண்டின் மிகவும் மலிவான பைக்குகளில் ஒன்றாகும். ரூ.78,500 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்கப்படும் இந்த பைக், லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் வழங்குகிறது. 9 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த வாகனத்தின் எரிபொருள் டேங்கை, ஒருமுறை நிரப்பினால் இடைநிற்றல் இன்றி 666 கிமீ வரை பயணம் செய்யலாம்.
ஹீரோ HF டீலக்ஸ்:
Hero HF டீலக்ஸ் பிராண்டின் அதிக விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாகும். இந்த பைக் லிட்டருக்கு 70 கிமீ மைலேஜை வழங்குகிறது. இதை 9.6 லிட்டர் எரிபொருள் டேங்குடன் இணைத்தால் இந்த பைக் ஒரு ஃபில்லிங்கிற்கு 672 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. இந்த இரு சக்கர வாகனம் ரூ.59,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஹோண்டா SP125:
பட்டியலில் உள்ள மற்ற பைக்களுடன் ஒப்பிடும்போது ஹோண்டா SP125 சிறந்த தோற்றமுடைய வாகனமாகும். இந்த பைக் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் வழங்குகிறது. 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் டேங்கை ஒருமுறை நிரப்பினால், 720 கிமீ தூரம் பயணிக்கும். ஹோண்டா SP125 இன் ஆரம்ப விலை ரூ.86,017 ஆகும்.
ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் XTEC:
ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் லிட்டருக்கு 68 கிமீ மைலேஜை வழங்குகிறது. இது 12L கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை கொண்டுள்ளது. ஒருமுறை அந்த தொட்டியை நிரப்பினாலே சுமார் 816 கிமீ தூரம் நிற்காமல் பயணிக்கலாம். இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.85,178
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்:
மைலேஜ் அடிப்படையில் ஹீரோ ஸ்பிளெண்டர் முக்கிய இடத்தில் நிற்கிறது. இந்த பைக் லிட்டருக்கு 83.2கிமீ மைலேஜை வழங்குகிறது. 9.8 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் டேங்கை நிரப்பினால், ஒரே அடியாக 815 கிமீ தூரம் வரை செல்லும். இது ரூ.75,141 என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.