மேலும் அறிய

Upcoming MPV: சுத்தி பாக்க மொத்தமா போகணுமா..! மினி ஊரேனாலும் ஓகே, புதிய எம்பிவிக்கள் - இன்ஜின், EV மாடல்

Upcoming MPV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள எம்பிவி கார்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Upcoming MPV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள 6 எம்பிவி கார் மாடல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தைக்கான எம்பிவி மாடல்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு கார் மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அந்த வரிசையில் காம்பேக்ட், மிட்சைஸ்,  மற்றும் ப்ரீமியம் எம்பிவி பிரிவில் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில், விரைவில் பல கார் மாடல்கள் அடுத்தடுத்து அறிமுகமாகி வருகின்றன. நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுசூகி, ஹுண்டாய், டொயோட்டா, நிசான் மற்றும் சிட்ரோயன் ஆகிய நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களை தயார்படுத்தி வருகின்றன. அப்படி பெரிதும் எதிர்பார்க்கப்படும் 3 வரிசை இருக்கைகளை கொண்ட கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து வரும் 6 எம்பிவிக்கள்:

1. நிசான் காம்பேக்ட் எம்பிவி

ரெனால்ட் கைகரின் CMF-A+ ப்ளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் நிசான் MPV, உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் போட்டித்தன்மை மிக்க விலையில் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம்.  தமிழ்நாட்டில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த MPV, ஏற்கனவே நன்கு அறிமுகமான 1.0 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் மற்றும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின்களை பயன்படுத்தக் கூடும். இது நிசானின் சமீபத்திய வடிவமைப்பு மொழியையும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாம். நிசானின் புதிய ஐந்து இருக்கைகள் கொண்ட C-பிரிவு SUVக்கு முன்னதாக இந்த காம்பேக்ட் எம்பிவி சந்தைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 & 3. மாருதி சுசூகி YMC & டொயோட்டா டெரிவேடிவ்:

மாருதி சுசூகி தனது முதல் முழு மின்சார காரான e Vitara-வை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. தொடர்ந்து எதிர்காலத்தில் இதனை YMC வடிவத்தில் மூன்று வரிசை இருக்கையுடன் சந்தைப்படுத்தவும் திட்டமுள்ளதாம். அதன்படி இந்த மிட்-சைஸ் MPV, பேட்டரிகள் மற்றும் மின்சார மோட்டார்கள் உட்பட e Vitara-வுடன் ஒற்றுமைகளைக் கொண்டிருக்கும். இது குஜராத் தொழிற்சாலையிலிருந்து பல சர்வதேச சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இது கூட்டாண்மை ஒப்பந்த அடிப்படையில் ஒரு டொயோட்டா காரை உருவாக்கக் கூடும். இந்த கார் Urban Cruiser BEV உடன் பல அம்சங்களை பகிர்ந்து கொள்ளக்கூடும்.

4. மாருதி சுசூகி காம்பாக்ட் MPV:

மாருதி சுசூகி நிறுவனம் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளமுள்ள ஒரு MPV-யை உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எர்டிகாவிற்கு கீழே நிலைநிறுத்தப்படலாம். 2027 அல்லது 2028 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஸ்பேசியா மாடலிலிருந்து புதிய எம்பிவி ஆனது அதிக செல்வாக்கைப் பெற வாய்ப்புள்ளதாம். லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் வழங்கும் வகையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வலுவான ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படலாம். இது நடைமுறைக்கு உகந்ததாகவும்,சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாகவும் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

5. ஹூண்டாய் MPV:

சமீபத்திய முதலீட்டாளர்கள் தின விளக்கக்காட்சியின் போது, ​​2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய சந்தைக்கு 26 மாடல்களை அறிமுகப்படுத்தும் தயாரிப்பு உத்தியின் ஒரு பகுதியாக ஏழு புத்தம் புதிய பெயர்ப்பலகைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஹூண்டாய் வெளிப்படுத்தியது. வரவிருக்கும் வெளியீடுகளில், நிறுவனம் இரண்டு வாகனங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தியது - ஒரு புதிய MPV மற்றும் ஆஃப்-ரோடு திறனுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு SUV. இந்த MPV, தற்போது இந்தோனேசியாவில் விற்கப்படும் ஹூண்டாய் ஸ்டார்கேஸரால் ஈர்க்கப்பட்டு, பிரீமியம் மக்களை நகர்த்தும் வாகனமாக நிலைநிhyundaiறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. சிட்ரோயன் இ ஸ்பேஸ்டூரர்:

MG M9 மற்றும் BYD eMax 7 போன்றவற்றுக்கு போட்டியாக நிலைநிறுத்த, சிட்ரோயனின் e-Spacetourer இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படலாம் என்று கூறப்படுகிறது. உலகளவில், இந்த மாடல் இரண்டு ட்ரிம் நிலைகளில் விற்கப்படுகிறது. ஸ்டேண்டர்ட் மற்றும் எக்ஸ்டெண்டர்ட் வீல்பேஸ் கான்ஃபிகரேஷனை வழங்குகிறது. e-Spacetourer-ஐ இயக்குவது 75 kWh பேட்டரி பேக் ஆகு. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 348 கிமீ வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Maduro's Son Vs America: “பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
“பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
Embed widget