Bullet Proof Cars: உலகின் மிகவும் பாதுகாப்பான புல்லட் ப்ரூஃப் கார் - டாப் 5 லிஸ்ட் இதோ..!
Bullet Proof Cars: குண்டு துளைக்காத உலகின் சிறந்த கார்களின் அடிப்படை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Bullet Proof Cars: உலகின் மிகவும் பாதுகாப்பான 5 புல்லட் ப்ரூஃப் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆடி ஏ8எல் செக்யூரிட்டி:
Audi A8L செக்யூரிட்டியானது வெடிபொருட்களுக்கு எதிராக VR 10 நிலை பாலிஸ்டிக் பாதுகாப்பு திறனுடன் விற்பனை செய்யப்படுகிறது. வண்டி பஞ்சரானாலும் மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியது. Audi A8L செக்யூரிட்டியானது ஸ்டேண்டர்ட் A8-இன் அனைத்து ஆடம்பர வசதிகளையும் பெறுகிறது மற்றும் S8 இலிருந்து 4.0L ட்வின்டர்போ V8 இன்ஜின் மூலம் 571 bhp மற்றும் 800 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இதன் விலை 15 கோடி ரூபாய் வரை நீள்கிறது.
BMW X5 புரொடக்ஷன் VR6:
BMW X5 Protection VR6 ஆனது வெளிப்புற தோற்றத்தில் ஸ்டேண்டர்ட் X5 போன்று தோற்றமளிக்கும். ஆனால் உட்புறத்தில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. தோட்டாக்களில் இருந்து பாதுகாக்க பாலிகார்பனேட் பொருட்களால் பூசப்பட்ட தடிமனான கண்ணாடி உள்ளது. ட்ரோன் தாக்குதலில் பாதுகாக்கும் ஆர்மர்ட் ரூஃப் விருப்பத்தின் பேரில் வழங்கப்படுகிறது. அதோடு, வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க, பாதுகாப்பு கவசமும் இதில் வழங்கப்படுகிறது. இதன் விலை 94 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
ரேஞ்ச் ரோவர் சென்டினல்:
ரேஞ்ச் ரோவர் சென்டினல் என்பது பிரிட்டிஷ் சொகுசு கார் தயாரிப்பாளரின் முதல் கவச வாகனமாகும். இது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமான வெடிகுண்டு தாக்குதல் மற்றும் ரைபிள் தாக்குதல்களைத் தாங்குவதோடு, IED தாக்குதல்களைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை அதிகபட்சம் 10 கோடி ரூபாய் வரை நீள்கிறது.
ரெஸ்வானி டேங்க்:
Rezvani TANK வாகனமானது குண்டு துளைக்காத கண்ணாடி மற்றும் உடல் கவசம், புகை திரை, பஞ்சரானாலும் ஓடும் டயர்கள், எலெக்ட்ரோ மேக்னெடிக் பியூல் பாதுகாப்பு, தெர்மல் நைட் விஷன் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிஃபைட் டோர் ஹேண்டில்ஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. டாட்ஜ் டெமானில் பயன்படுத்தப்படும் 1000bhp மற்றும் 1200 Nm டார்க்கை உற்பத்தி செய்யும், 6.2L சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட Hemi V8 இன்ஜின் இந்த டேங்கில் இடம்பெற்றுள்ளது. இதன் விலை, ஒரு கோடியே 55 லட்சம் வரை நீள்கிறது.
Mercedes Benz S கிளாஸ் கார்டியன்:
புரொடெக்டட் Mercedes Benz கார்கள் ராணி மற்றும் அதிபர்கள் போன்றவர்கள் பயணிக்க பயன்படுத்தப்படுகின்றன. S- கிளாஸ் கார்ட் காரானது VPAM VR 10 அம்சத்துடன் வருகிறது. இது ஒரு குடிமகன் பெறக்கூடிய மிக உயர்ந்த வாகனம் இதுவாகும். கார் வெடிகுண்டு தாக்குதலை தாங்குவதோடு மற்றும் புல்லட் தாக்குதலில் இருந்து பாதுகாக்க 4 அங்குல தடிமனான கண்ணாடியைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் 610 bhp மற்றும் 830 Nm டார்க் கொண்ட V12 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதன் விலை 10 கோடி ரூபாய் வரை நீள்கிறது.