Electric Cars: தினமும் கார்ல ஆஃபீஸ் போக ஆசையா? அப்ப உங்களுக்கான சரியான மின்சார கார் எது தெரியுமா?
Electric Cars: தினசரி பயன்பாட்டிற்கான சரியான 5 மின்சார கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Electric Cars: அலுவலகத்திற்கு செல்வது போன்ற தினசரி பயன்பாட்டிற்கான ஏதுவான, மின்சார கார்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
எம்ஜி காமெட்:
எம்ஜி காமெட் சிட்டி பயன்பாட்டிற்கான ஒரு சிறிய கார் ஆகும். வடிவமைபில் உள்ள அதன் சிறிய பரிமாணங்கள் நெரிசலான நகரங்களில் கூட, மிகவும் வேகமானதாக பயணிக்க உதவுகிறது. இது 17.3 kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 230 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 6.98 லட்சம். இது இந்தியாவில் விற்பனையாகும் மிகவும் மலிவு விலையில் மின்சார காராகும்.
மஹிந்திரா XUV400:
மஹிந்திரா XUV400 கார் சமீபத்தில் அனைத்து புதிய அம்சங்களுடனும் புதுப்பிக்கப்பட்டது. மிகவும் இலாபகரமான தொகுப்பாகவும் உருவெடுத்துள்ளது. இது 34.5 kWh பேட்டரி அல்லது 39.4 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. முதல் பேட்டரி பேக்கில் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 375 கிமீ தூர மைலேஜையும், இரண்டாவது பேட்டரி பேக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 456 கிமீ தூர மைலேஜையும் வழங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.15.49 லட்சம் ஆகும்.
ஹூண்டாய் கோனா
ஹூண்டாய் கோனா பல்வேறு அம்சங்கள் நிறைந்த காம்பாக்ட் SUV ஆகும். இது தினசரி பயணங்களுக்கு சிறந்தது. சிறந்த உருவாக்க தரம் மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகிறது. இதில் உள்ள 39.2 kWh பேட்டரி பேக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 452 கிமீ தூர மைலேஜ் வழங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ 23.84 லட்சம் ஆகும்.
டாடா பஞ்ச் மின்சார எடிஷன்:
Tata Punch.ev என்பது அனைத்து EV இயங்குதளத்திலும் உருவாக்கப்பட்ட டாடாவின் முதல் மின்சார கார் ஆகும். இது 315 கிமீ மைலேஜை வழங்கும் 25 kWh பேட்டரி பேக்கையும் அல்லது 421 கிமீ மைலேஜை வழங்கும் 35 kWh பேட்டரி பேக் ஆப்ஷனையும் கொண்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ 10.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
டாடா டியாகோ மின்சார எடிஷன்:
Tata Tiago.ev ஒரு சிறந்த சிட்டி கார் மாடல் ஆகும். இதில் உள்ள 19.2 kWh பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிமீ மைலேஜையும், 24 kWh பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிமீ தூர மைலேஜயும் வழங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), இது இந்தியாவில் விற்பனையாகும் மிகவும் மலிவு விலை மின்சார வாகனங்களில் ஒன்றாகும்.