Mileage Hybrid Cars: ஒருமுறை டேங்க் ஃபில் பண்ணா போதும்..! 1000 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்: ஹைப்ரிட் கார்களின் லிஸ்ட் இதோ..!
Mileage Hybrid Cars: ஒருமுறை எரிபொருள் டேங்கை நிரப்பினாலே, சுமார் 1000 கிமீ தூரத்திற்கு நிற்காமல் பயணம் செய்யக்கூடிய ஹைப்ரிட் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Mileage Hybrid Cars: எரிபொருள் டேங்கை ஒருமுறை நிரப்பினால், மிக நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடிய, ஹைப்ரிட் கார்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
ஹோண்டா சிட்டி e-HEV:
ஹோண்டா சிட்டி இ-எச்இவி இந்தியாவில் விற்பனையில் உள்ள மிகவும் திறமையான செடான் மாடல் ஆகும். இது ஒரு ஹைபிரிட் 1.5 லிட்டர் இன்ஜினை கொண்டுள்ளது. மின்சார மோட்டார் மற்றும் இ-சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 27.13 கிமீ மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. அதன்படி இதில் உள்ள 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை ஒருமுறை நிரப்பினால், 1,085 கிலோமீட்டர் தூரம் வரை நிற்காமல் பயணம் செய்யலாம். இதன் விலை (சென்னையில் ஆன்-ரோட் விலை)23.61 லட்சத்தில் தொடங்கி 25.92 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா:
மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா விரைவில் இந்தியாவில் விற்பனையாகும், மிகவும் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இது டொயோட்டாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஹைப்ரிட் 1.5 லிட்டர் இன்ஜினை கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 27.97 கிமீ மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. அதன்படி இதில் உள்ள 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை ஒருமுறை நிரப்பினால், இடைநிற்றல் இன்றி 1,258 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். இதன் விலை 10.80 லட்சத்தில் தொடங்கி 20.09 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ்
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மிகவும் வசதியான MPV கார்களில் ஒன்றாகும். இது e- CVT உடன் இணைக்கப்பட்ட ஒரு ஹைப்ரிட் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 23.24 கிமீ மைலேஜ் என கூறப்படுகிறது. இதில் உள்ள 52 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை முழுமையாக நிரப்பினால், 1,208 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதன் விலை 24.63 லட்சத்தில் இருந்து 39.03 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி இன்விக்டோ:
Maruti Suzuki Invicto ஆனது Toyota Innova Hycross உடன் அதன் பிளாட்ஃபார்மை பகிர்ந்து கொள்கிறது. அதில் இடம்பெற்றுள்ள ஹைப்ரிட் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது, லிட்டருக்கு 23.24கிமீ மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள 52 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கை ஒருமுறை நிரப்பினால், 1,208 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். இதன் விலை ரூ.31.40 லட்சத்தில் இருந்து தொடங்கி, ரூ.35.95 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா அர்பன் க்ரூஸர்:
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிகவும் திறமையான மற்றொரு சிறிய எஸ்யூவி ஆகும். இது மாருதி சுசுகி கிராண்ட் விட்டாராவுடன் அதன் பிளாட்ஃபார்மை பகிர்ந்து கொள்கிறது. ஹைப்ரிட் 1.5லி பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 27.97 கிமீ மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. இதில் உள்ள 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கை நிரப்பினால், ஒரே அடியாக 1,258 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். இதன் விலை ரூ.13.87 லட்சம் தொடங்கி ரூ.25.29 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.