Kia Midsize SUV: குட்டீஸ்லா போதும், இது வீரனுக்கான டைம்..! கியாவின் முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி - முழு விவரம்
Kia Upcoming Midsize SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விக்டோரிஸ் மற்றும் பேயோன் மாடலுக்கு போட்டியாக, கியா நிறுவனம் முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி மாடலை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Kia Upcoming Midsize SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள கியாபுதிய மிட்-சைஸ் எஸ்யுவி குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
கியாவின் புதிய எஸ்யுவிக்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பலதரப்பட்ட எஸ்யுவிக்களை அறிமுகப்படுத்த தென்கொரிய நிறுவனமான கியா மும்முரமாக உள்ளது. அந்த வரிசையில் புதிய 7 சீட்டர் சொரெண்டோ ஹைப்ரிட் எடிஷனானது வரும் செப்டம்பர் 4ம் தேதி விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த வரிசையில் எதிர்காலங்களில் புதிய தலைமுறை சோனெட் மற்றும் கார்னிவல் ஹைப்ரிட் ஆகியவையும் அடுத்தடுத்து இணைய உள்ளன.
கியாவின் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி:
இந்நிலையில் வெளியாகியுள்ள ஊடக தகவல்களின்படி, கியா நிறுவனம் நடுத்தர அளவிலான பி-செக்மென்ட் மாடல் மற்றும் சி-செக்மென்ட் 7-சீட்டர் மாடல் உட்பட இரண்டு புதிய எஸ்யுவிக்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து வருகிறதாம். இந்த புதிய பி-செக்மென்ட் எஸ்யுவி, கியா இந்தியாவின் லைன்-அப்பில் சைரோஸ் மற்றும் செல்டோஸ் ஆகியவற்றுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மறுபுறம், சி-செக்மென்ட் எஸ்யுவி, செல்டோஸ் மற்றும் சொரெண்டோ ஆகிய மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும். இந்த இரண்டு மாடல்களும் 2028-29-க்குள் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
கியா லைன் - அப்பில் புதிய எஸ்யு எங்கே?
வென்யு மற்றும் க்ரேட்டாவிற்கு இடையிலான இடைவெளியை போக்கும் விதமாக, முற்றிலும் புதிய பேயோன் எஸ்யுவியை ஹுண்டாய் அறிமுகப்படுத்த உள்ளது. அதனை பின்பற்றி கியாவும் புதிய மாடலை கொண்டுவரவுள்ளது. இந்த ப்ராண்டின் செல்டோஸ் இப்போது ஒரு ப்ரீமியம் மாடலாக உள்ளது மற்றும் சுமார் 4.5 மீட்டர் நீளம் கொண்டுள்ளது. இது, சைரோஸ் மற்றும் செல்டோஸிற்கு இடையில் சுமார் 4.2 மீட்டர் நீளமுள்ள மற்றொரு மாடலைச் சேர்க்கப் போதுமான இடைவெளியை கொண்டுள்ளது.
புதிய எஸ்யுவி டிசைன் எப்படி?
கியாவின் புதிய எஸ்யுவி குறித்த விவரங்கள் ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் புதிய கியா மாடல் தற்போதுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் ஹுண்டாய் பேயான், 1.5 லிட்டர் நேட்சுரலி-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் காரின் அடிப்பகுதியில் சிஎன்ஜி டேங்க் கொண்ட சிஎன்ஜி எடிஷன் ஆகியவற்றால் இயக்கப்படும். கியா தனது புதிய மிட்-சைஸ் எஸ்யுவியிலும் இதே உத்தியைப் பின்பற்றக்கூடும். மேலும், அடுத்த தலைமுறை கியா சோனெட் உட்பட சிறிய கார்களுக்காக கியா ஒரு புதிய ஹைப்ரிட் அமைப்பை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது . வரவிருக்கும் ,மிட்-சைஸ் எஸ்யுவியும் இந்த ஹைப்ரிட் பவர்டிரெய்னைப் பெறக்கூடும்.
புதிய மிட்-சைஸ் எஸ்யுவி - விலை விவரங்கள்
கியாவின் புதிய தலைமுறை செல்டோஸ் விலை ரூ. 10.99 லட்சம் முதல் ரூ. 21.82 லட்சம் வரை நீண்டு ப்ரீமியம் தரத்தில் ஒரு படி மேலே சென்றுள்ளது. அதேநேரம், சைரோஸ் மாடலின் விலையானது ரூ. 8.42 லட்சம் தொடங்கி ரூ.15 லட்சம் வரை நீண்டுள்ளது. இதானால் இந்த இரண்டு மாடல்களுக்கு இடையே இடையே ஒரு கணிசமான இடைவெளி நிலவுகிறது. அதனை நிரப்பு வகையில் மாருதி விக்டோரிஸ் மற்றும் ஹுண்டாய் பேயோன் போன்ற கார் மாடல்களுக்கு போட்டியாக, கியாவின் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























