மேலும் அறிய

Jetour T2 முதல் Jaecoo J7 வரை.. இந்தியாவையே அசத்தப்போகும் 5 upcoming மின்சார கார்கள்!

JSW Motors இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள 5 மின்சார கார்களின் பட்டியலை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் சமீபகாலமாக மின்சார கார்களின் தயாரிப்பில் ஒவ்வொரு கார் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மஹிந்திரா, டாடா, மாருதி சுசுகி என ஒவ்வொரு நிறுவனங்களும் மின்சார கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது JSW Motors நிறுவனமும் மின்சார கார்கள் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.

1.Jetour T2:

இந்த Jetour T2 கார்தான் ஜேஎஸ்டபுள்யூ மோட்டார் நிறுவனம் மீது இந்திய சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. டொயோடோ ஃபார்ச்சுனர் மற்றும் எம்ஜி மெஜஸ்டருக்குப் போட்டியாக இந்த கார் களமிறங்குகிறது. 4 ஆயிரத்து 785 மி.மீட்டர் நீளமும், 2 ஆயிரத்து 6 மி.மீட்டர் அகலமும், 1,875 மி.மீட்டர் உயரமும் கொண்டது இந்த கார். 

2.Jaecoo J5:

ஜேஎஸ்டபுள்யூ மோட்டார்சின் மற்றொரு புதிய மின்சார காராக உருவாகி வருவது Jaecoo J5. இந்த கார் அடுத்தாண்டு ஜனவரியில் சந்தைக்கு வரும் என்று கருதப்படுகிறது. ஹுண்டாயின் கிரெட்டா எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக இந்த கார் சந்தையில் களமிறங்கும் என்று கருதப்படுகிறது. 4 ஆயிரத்து 380 மி.மீட்டர் நீளமும், 1860 மி.மீட்டர் அகலமும், 1650 மி.மீட்டர் உயரமும் கொண்டது இந்த கார்.  இது ஒரு ஹைப்ரிட் காராகவும் சந்தையில் அறிமுகமாக உள்ளது. இந்த கார் ஒரே சார்ஜில் 461 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டதாக உருவாகி வருகிறது.

3.  iCar V23:

இது ஒரு ரெட்ரோ ஸ்டைல் எஸ்யூவி கார் ஆகும். 4 ஆயிரத்து 230மி.மீட்டர் நீளமும், 1915 மி.மீட்டர் அகலமும், 1845 மி.மீட்டர் உயரமும் கொண்டது இந்த கார். சிங்கிள் மோட்டார் ஆர்டபுள்டி மற்றும் டூயல் மோட்டர் ஏடபுள்யூடி வேரியண்ட் கொண்டது இந்த கார் ஆகும். டாடா சியாரா இவி காருக்கு போட்டியாக இந்த கார் அறிமுகமாக உள்ளது. ஒரே சார்ஜில் 360 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டிருக்கிறது. அடுத்தாண்டின் 3ம் காலாண்டில்  இந்த கார் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

4. Chery Q:

இந்த கார் ஒரு சிறிய ரக எஸ்யூவி காராக தயாராகி வருகிறது. எம்ஜி விண்ட்சார் இவி காருக்கு போட்டியாக இந்த கார் தயாராகி வருகிறது. 2028ம் ஆண்டு இந்த கார் சந்தையில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.  இந்த கார் 4 ஆயிரத்து 195 மி.மீட்டர் நீளமும், 1811 மி.மீட்டர் அகலமும், 1574 மி.மீட்டர் உயரமும் கொண்டது ஆகும். ஒரே சார்ஜில் 400 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டதாக இந்த கார் தயாராகி வருகிறது.

5.Jaecoo J7:

மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கார் Jaecoo J7. இந்த காரின் தோற்றமும், இதன் வசீகரத் தோற்றமும், இதன் சிறப்பம்சங்களுமே இதற்கு காரணம் ஆகும். இந்த கார் ஹைப்ரிட் வேரியண்டாக உருவாகி வருகிறது. அடுத்தாண்டு பிற்பாதியில் இந்த கார் சந்தையில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.  கியா செல்டாஸ் ஹைப்ரிட் , ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட் கார்களுக்கு போட்டியாக இந்த கார் தயாராகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Maruti Suzuki Car Offers: ரூபாய் 1.35 லட்சம் வரை தள்ளுபடி.. Alto முதல் Victoris வரை! எந்த காருக்கு எவ்வளவு?
Maruti Suzuki Car Offers: ரூபாய் 1.35 லட்சம் வரை தள்ளுபடி.. Alto முதல் Victoris வரை! எந்த காருக்கு எவ்வளவு?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?

Embed widget