மேலும் அறிய

புல்லட்டுக்கே டஃப் கொடுக்கும் ஜாவா..! கம்பீரமாக போக Jawa 42 FJ வாங்கலாமா?

ராயல் என்ஃபீல்டிற்கு சவால் தரும் இருசக்கர வாகனமாக கருதப்படும் Jawa 42 FJ பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த அப்போதைய ராயல் என்ஃபீல்ட்( புல்லட்) பைக்கிற்கு போட்டியாக அப்போது உலா வந்த பைக் ஜாவா. 

Jawa 42 FJ:

ராயல் என்ஃபீல்ட் தற்போது மீண்டும் தங்களது சந்தையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள நிலையில், ஜாவா நிறுவனமும் தங்களது சந்தையை மீண்டும் பிடிப்பதற்காக பல்வேறு  இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஜாவா-வின் பிரபலமான பைக்காக இருப்பது Jawa 42 FJ. 

இந்த பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம். இந்த பைக்கில் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளது. 

1. 42 FJ Aurora Green Matte - Spoke

2. 42 FJ Aurora Green Matte - Alloy

3. 42 FJ Cosmo Blue Matte and Mystique Copper

4. 42 FJ Deep Black - Matte Red and Matte Black

இந்த 4 வேரியண்ட்கள் இந்த பைக்கில் உள்ளது.

1.42 FJ Aurora Green Matte - Spoke:

ஜாவாவின் இந்த 42 FJ Aurora Green Matte - Spoke பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 18 ஆயிரத்து 919. இதில் டிஸ்க் ப்ரேக்குகள், ஸ்போக் சக்கரங்கள் உள்ளது. ட்யூப் டயர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது பச்சை - சாம்பல் நிறத்தில் உள்ளது. 

2. 42 FJ Aurora Green Matte - Alloy:

இந்த 42 FJ Aurora Green Matte - Alloy பைக் ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரத்து 340க்கு விற்கப்படுகிறது. இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள்  பொருத்தப்பட்டுள்ளது.  ட்யூப்லஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. பச்சை - வெள்ளை நிறத்தில் உள்ளது.

3. 42 FJ Cosmo Blue Matte and Mystique Copper:

ஜாவாவின் 42 FJ Cosmo Blue Matte and Mystique Copper பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரத்து 598 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. நீலம் - சாம்பல், சாம்பல் - அரக்கு நிறத்தில் உள்ளது. 

4. 42 FJ Deep Black - Matte Red and Matte Black:

இந்த 42 FJ Deep Black - Matte Red and Matte Black பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்து 857 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

334 சிசி திறன் எஞ்ஜின்:

இதில் 334 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு 30 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது. 6 கியர்களை கொண்டது. இதன் பெட்ரோல் டேங்கர் 12 லிட்டர் தாங்கும் திறன் கொண்டது. 184 கிலோ எடை கொண்டது. 

அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 1 கியர் கீழே மற்ற 5 கியர்கள் மேலே போட்டு வாகனத்தை ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 360 கிலோமீட்டர் வரை செல்லலாம்.  1 சிலிண்டர், லிக்யூட் கூல்ட், 4 வால்வ்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்புகள்:

டயூல் சேனல் ஏபிஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், ட்வின் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பின்பக்கமும் போடப்பட்டுள்ளது. 50 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 4 வருட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 

நெடுஞ்சாலைகளில் கம்பீரமாக செல்வதற்கு இந்த பைக்கின் வசீகர தோற்றமும், இதன் ஆற்றலும் துணை நிற்கிறது. பழைய ஜாவா இரு சக்கர வாகனங்கள் அதன் சத்தத்திற்காகவே புகழ்பெற்றது. ஆனால், தற்போதைய ஜாவா மற்றும் ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் பழைய வாகனங்களில் இருப்பது போல சத்தங்கள் வருவது இல்லை.

தலைப்பு செய்திகள்

Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Maruti Suzuki Car Offers: ரூபாய் 1.35 லட்சம் வரை தள்ளுபடி.. Alto முதல் Victoris வரை! எந்த காருக்கு எவ்வளவு?
Maruti Suzuki Car Offers: ரூபாய் 1.35 லட்சம் வரை தள்ளுபடி.. Alto முதல் Victoris வரை! எந்த காருக்கு எவ்வளவு?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
Embed widget