Top 5 SUV Cars: எஸ்யுவி கார் வாங்க போறீங்களா?.. இது தான் டாப்-5 லிஸ்ட்.. விற்பனையில் அமோகம்
இந்தியாவில் கடந்த ஜுன் மாதத்தில் அதிகம் விற்பனையான, டாப்-5 எஸ்யுவி கார்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜுன் மாதத்தில் அதிகம் விற்பனையான, டாப்-5 எஸ்யுவி கார்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
எஸ்யுவி-க்கு டிமேண்ட்:
ஆட்டோமொபைல் சந்தையில் இன்றைய தேதிக்கு மிகவும் பிரபலமான வார்த்த என்றால் அது எஸ்யுவி (SUV). sport utility vechile என்பது தான் இதன் அர்த்தம். அதாவது காண்போரை கவரக்கூடிய அழகான வடிவமைப்பு, கூடுதல் சிறப்பம்சங்கள் ஆகிய சாதாரண காருக்கே உரித்தான அனைத்து அம்சங்களும் இடம்பெறுவது மட்டுமின்றி, மோசமான சாலைகளில் கூட எளிமையான பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஸ்போர்ட்ஸ் வாகனங்களுக்கான திறன்களையும் கொண்டது தான் எஸ்யுவி. இந்த கார்களுக்கான தேவை தான், தற்போது இந்திய சந்தையில் பலமடங்கு அதிகரித்துள்ளது. இதை உணர்ந்த பல முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் அடுத்தடுத்து, புதுப்புது எஸ்யுவி மாடல் வாகானங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜுன் மாதம், அதிகம் விற்பனையான டாப் 10 எஸ்யுவி-க்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா:
இந்திய காம்பேக்ட் எஸ்யுவி மாடல்கள் பிரிவில் பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும், ஹூண்டாய் கிரெட்டா மாடல் எஸ்யுவி-க்கள் பிரிவில் தொடர்ந்து பிரபலமாகவும், விற்பனையில் முன்னிலை வகித்தும் வருகிறது. அதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஹூண்டாய் கிரெட்டா மாடல் 14 ஆயிரத்து 447 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 13,790 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.
டாடா நெக்ஷான்:
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் எஸ்யுவி மாடலாக உள்ளது டாடா நெக்சான் மாடல். இந்த மாடல் ஜூன் 2023 மாதத்தில் மட்டும் 13 ஆயிரத்து 827 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆயிரத்து 295 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது..
ஹூண்டாய் வென்யூ:
ஹுண்டாய் வென்யூ மாடலில் ஜூன் மாதத்தில் மட்டும் 11 ஆயிரத்து 606 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இதன் மூலம் வருடாந்திர அடிப்படையில் 12.4 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 10, 312 யூனிட்கள் மட்டுமே விற்பனயாகி இருந்தன.
டாடா பன்ச்:
மைக்ரோ எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் மாடலாக டாடா பன்ச் உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 990 யூனிட்கள் டாடா பன்ச் மாடலில் விற்பனையாகி உள்ளன. இது வருடாந்திர அடிப்படையில் 5.5 சதவீதம் அதிகம் ஆகும். கடந்தாண்டு ஜுன் மாதம் 10,414 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.
மாருதி சுசுகி பிரேஸ்ஸா:
டாப் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள மாருதி சுசுகி பிரேஸ்ஸா மாடலில் மட்டும் கடந்த மாதத்தில் 10 ஆயிரத்து 578 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இதன் மூலம் பிரெஸ்ஸா எஸ்யுவி மாடல் வருடாந்திர அடிப்படையில் 140 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமான மாருதி சுசுகி பிரேஸ்ஸா மாடல் கார்கள் விற்பனையாகியுள்ளன.
இந்த வரிசையில், மாருதி சுசுகி கிராண்ட் விடாரா, மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ், கியா சோனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யுவி 700 ஆகிய கார் மாடல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.