மேலும் அறிய

Luxury Cars Price Drop Fact: இந்தியா-ஐரோப்பா ஒப்பந்தத்தால் சொகுசுக் கார்களின் விலை பாதியாக குறையுமா.? உண்மை என்ன.?

India EU FTA: இந்தியா-ஐரோப்பா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், பென்ஸ், BMW சொகுசுக் கார்களின் விலை பாதியாக குறைந்துவிடும் என்று பேசப்படுகிறது. ஆனால், உண்மையான கள நிலவரம் என்ன தெரியுமா.? பாருங்க..

இந்தியா-ஐரோப்பா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பற்றி நிறைய பேசப்பட்டது. அதில் முக்கியமாக, இறக்குமதி செய்யப்பட்ட சொகுசுக் கார்கள் விலை பாதியாக குறையும் என்ற செய்தி ஏராளமானோருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதனால், ஒரு சிறிய SUV விலைக்கு, உங்கள் வாகன நிறுத்துமிடத்தில் BMW காரை நிறுத்த வேண்டும் என்று கனவு கண்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் யதார்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.  அது என்ன.? பார்ப்போம் வாருங்கள்.

BMW X1,  Mercedes-Benz GLC போன்ற கார்களின் விலை குறையாது.!

இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்படி, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரிகள் 10 சதவீதமாகக் குறைக்கப்படும் என்பது உண்மைதான். ஆனாலும், அதில் உள்ள நுணுக்கங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலாவதாக, விலைக் குறைப்பு தொடர்பாக நீங்கள் யோசிக்கும் BMW மற்றும் Mercedes-Benz கார்கள், இந்த ஒப்பந்தத் திட்டத்தின் கீழ் வராது. ஏனென்றால், இந்த ஜெர்மன் சொகுசுக் கார் தயாரிப்பாளர்களால் விற்கப்படும் மொத்த கார்களில், 95 சதவீத கார்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுகின்றன. அதனால், அவற்றின் விலைகள் குறையப் போவதில்லை. அதாவது, BMW X1 அல்லது Mercedes-Benz GLC விலை குறைக்கப்படாது.

விலை குறையும் கார்கள் எவை.?

மாறாக, இந்தத் திட்டத்தின் கீழ் வரும் கார்களில், அதிக விலை கொண்ட ஸ்போர்ட்ஸ் கார்கள் அல்லது இறக்குமதி செய்யப்படும் மிகவும் விலையுயர்ந்த SUV-க்கள் மட்டுமே அடங்கும். அவை எப்படியும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்கப்படுகின்றன. ஆம், அவற்றின் விலைகள் குறையக்கூடும் என்றாலும், அவற்றின் விலை மிகவும் அதிகமாகத் தான் இருக்கும். மேலும், வரிகள் உடனே ஒரே தடைவையாக குறைக்கப்படாது. படிப்படியாகத் தான் குறைக்கப்படும். அவை செயல்படுத்தப்பட பல ஆண்டுகள் ஆகலாம். மேலும், மாற்று விகிதங்களும் சேர்க்கப்படும். பின்னர் வேறுபாடுகள் குறையக்கூடும்.

எனவே, ஆடி RS Q8 மற்றும் AMG மாடல்கள் மற்றும் BMW M மாடல்கள் விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், மிகவும் விலை உயர்ந்த அந்த கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். இந்த விலைக் குறைப்பை, ஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட டிஃபென்டரில் கிடைக்கும். ஆனால், அந்த காரும் விரைவில் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இப்போதே நீங்கள் திட்டமிட்ட காரை வாங்கலாம்

எனவே, இந்த ஒப்பந்தத்தால் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மை குறைவுதான் என்றாலும், உற்பத்தியாளர்கள் CBU இறக்குமதி செய்யப்பட்ட கார்களுடன் அதிக பரிசோதனை செய்யக்கூடிய இந்திய வாகனப் பிரிவை இது திறக்கக்கூடும். எனவே, சில ஆண்டுகளுக்குள், வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டும் கார்கள் இங்கேயே அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதை காணலாம்.

மொத்தத்தில், பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற கார்களின் விலை குறையும் என்று காத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இந்த உண்மையை புரிந்துகொண்டு, இந்திய சந்தையில் உள்ள இந்நிறுவனங்களின் கார்களில், அவர்கள் வாங்க ஏற்கனவே திட்டமிட்ட காரை இப்போதே வாங்கிக் கொள்ளலாம் என்பதே நிதர்சனம்.

 

 

Frequently Asked Questions

இந்தியா-ஐரோப்பா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் சொகுசு கார்களின் விலை குறையுமா?

இந்த ஒப்பந்தத்தால் இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரி 10% குறையும். ஆனால், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் BMW, Mercedes-Benz போன்ற கார்களின் விலை குறையாது.

எந்த வகையான கார்களின் விலை குறைய வாய்ப்புள்ளது?

இந்த திட்டத்தின் கீழ், அதிக விலை கொண்ட ஸ்போர்ட்ஸ் கார்கள் அல்லது இறக்குமதி செய்யப்படும் மிக விலையுயர்ந்த SUV-க்கள் மட்டுமே அடங்கும். அவற்றின் விலைகளும் படிப்படியாகவே குறையக்கூடும்.

BMW X1 அல்லது Mercedes-Benz GLC போன்ற கார்களின் விலைகள் குறையுமா?

இல்லை, இந்த கார்களின் விலைகள் குறையாது. ஏனெனில் இவற்றில் 95% கார்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகின்றன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

இந்த ஒப்பந்தத்தால் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நேரடி நன்மை குறைவு. ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு, அதிக ஆர்வம் காட்டப்படும் கார்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வரலாம்.

தலைப்பு செய்திகள்

Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget