Hyundai Venue 2025: புக்கிங் ஓபன் ஆகிடுச்சு..! பெருசா, சொகுசான அம்சங்களுடன் புதிய வென்யு - அப்க்ரேடின் விலை அப்டேட்
Hyundai Venue 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட, வென்யு கார் மாடலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

Hyundai Venue 2025: ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட வென்யு கார் மாடலானது விசாலமான இடவசதியை கொண்டுள்ளது.
ஹுண்டாய் வென்யு 2025 புக்கிங் தொடங்கியது:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் நவம்பர் 4ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ள, ஹுண்டாயின் முற்றிலும் புதிய வென்யு கார் மாடலின் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இந்த அடுத்த தலைமுறை எடிஷனுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் ஹுண்டாயின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது டீலர்ஷிப் அலுவலகங்களை அணுகி, தங்களுக்கான காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Hyundai Venue x Deepika Padukone 🚙 @HyundaiIndia #Hyundai
— khanna (@cozybambii) October 24, 2025
pic.twitter.com/iSu3Tando1
ஹுண்டாய் வென்யு 2025 - புதிய HX வேரியண்ட்
ஹுண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களில் முதன்முறையாக HX என்ற பெயருடன் கூடிய ஒரு வேரியண்டை வென்யு மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. பிராண்டின் முன்னோக்கி சிந்திக்கும் அணுகுமுறையை குறிக்கும் விதமாக ஹுண்டாய் எக்ஸ்பீரியன்ஸ் என்பதன் சுருக்கமாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். புதிய ஹுண்டாய் வென்யுவானது HX2, HX4, HX5, HX6, HX6T, HX8 மற்றும் HX10 என 8 பெட்ரோல் வேரியண்ட்களிலும், HX2, HX5, HX5, HX7 மற்றும் HX10 என 4 டீசல் வேரியண்ட்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
ஹுண்டாய் வென்யு 2025 - வடிவமைப்பு விவரங்கள்
புதிய தலைமுறை வென்யு கார் மாடலானது தற்போதைய எடிஷனை காட்டிலும், 48 மில்லி மீட்டர் உயரமாகவும், 30 மில்லி மீட்டர் அகலமாகவும் உள்ளது. இதன் ஒட்டுமொத்த வீல்பேஸும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் காரின் இடவசதி உயர்ந்துள்ளது. காரின் ஒட்டுமொத்த நீளம், அகலம் மற்றும் உயரமானது முறையே 3,955, 1,800 மற்றும் 1,655 மில்லி மீட்டர் ஆக உள்ளது. இந்த சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆனது 2,520 மில்லி மீட்டர் வீல்பேஸை கொண்டுள்ளது.
ஹுண்டாய் வென்யு 2025 - வெளிப்புற அம்சங்கள்
புதிய வென்யுவின் முன்புறமானது மிகப்பெரிய அளவில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய க்ரேட்டாவின் தாக்கத்தில் க்ரில், ட்வின் ஹார்ன் பகல்நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகள், க்வாட் பீம் எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் டார்க் க்ரோம் ரேடியேட்டர் க்ரில் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அதோடு இந்த எஸ்யுவியில் புதியதாக வடிவமைக்கப்பட்ட R16 டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஸ்கல்ப்டட் கேரக்டர் லைன்கள், பாலம் மாதிரியான ரூஃப் ரயில்ஸ் மற்றும் இன் - க்ளாஸ் வென்யு அச்சு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
புதிய வென்யு எடிஷனில் அட்லஸ் வொய்ட், டைடன் க்ரே, ட்ராகன் ரெட் மற்றும் அபிஸ் ப்ளாக் ஆகியவற்றுடன் புதியதாக ஹசெல் ப்ளூ மற்றும் மிஸ்டிக் சபைர் என மொத்தம் ஆறு வண்ண விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக ரூஃபுக்கு அபிஸ் ப்ளாக் உடன் ஹசெல் ப்ளூ அல்லது அட்லஸ் வொய்ட் டூயல் டோன் ஃபினிஷிங்கும் வழங்கப்படுகிறது.
ஹுண்டாய் வென்யு 2025 - உட்புற அம்சங்கள்
காரின் உட்புறத்தில் புதிய க்ரேட்டாவில் இருந்து ஈர்க்கப்பட்ட 12.3 இன்ச் அளவிலான இரட்டை கர்வ்ட் பனோரமிக் டிஸ்பிளேக்கள், ரியர் விண்டோ சன்ஷேட், வென்யு ப்ராண்டிங் உடன் கூடிய டூயல் டோன் லெதர், சுற்றுப்புற ஆம்பியண்ட் லைட்டிங் உடன் கூடிய காஃபி டேபிள் சென்டர் கன்சோல், க்ராஷ் பேட் மீது ஆம்பியண்ட் லைட்டிங், டெரஸோ டெக்ஸர்ட் க்ராஷ் பேட் ஃபினிஷ், ப்ரீமியம் லெதர் ஆர்ம்ரெஸ்ட், D-கட் ஸ்டியரிங் வீல், எலெக்ட்ரிக் 4 வே ட்ரைவர் சீட்ஸ், 2 ஸ்டெப் ரிக்ளைனிங் ரியர் சீட்ஸ், ரியர் ஏசி வெண்ட்ஸ் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்புற பார்க்கிங் சென்சார்களுடன் கூடிய 360 டிகிரி கேமரா, 8 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக், லெவல் 2 ADAS ஆகியவையும் புதியதாக வழங்கப்படுகின்றன. இதுபோக ஏற்கனவே இருக்கும் ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜர், கீ-லெஸ் ர்ண்ட்ரி வித் புஷ் பட்டன் ஸ்டார்ட், 6 ஏர் பேக்குகள், EBD உடன் கூடிய ABS, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டையர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் ஆகியவை அப்படியே தொடருகின்றன.
அதிகரித்த வீல்பேஸ் அனைத்து பயணிகளுக்கும் சிறந்த ஹெட்ரூம், லெக்ரூம் மற்றும் ஷோல்டர் ரூம் வசதியை உறுதி செய்கிறது. பரந்த கதவு திறப்புகள் உள்ளே நுழைவதையும் வெளியே செல்வதையும் எளிதாக்குகின்றன. மேலும், புதிய 2025 ஹூண்டாய் வென்யுவின் கேபின் "கனெக்டட் லைஃப்ஸ்டைல் First Experience" அனுபவத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
ஹுண்டாய் வென்யு 2025 - இன்ஜின் விவரங்கள்
இன்ஜின் அடிப்படையில் எந்தவித மாற்றமும் இன்றி ஏற்கன்வே இருக்கும் 3 ஆப்ஷன்கள் புதிய தலைமுறை வென்யுவில் அப்படியே பின்பற்றப்படுகிறது. அதன்படி, 83PS ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2L பெட்ரோல், 120PS ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.0L டர்போ பெட்ரோல் மற்றும் 116PS ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய1.5L டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவற்றிற்கு 5-ஸ்பீட் மேனுவல், 6-ஸ்பீட் iMT மற்றும் 7-ஸ்பீட் DCT உள்ளிட்ட டிரான்ஸ்மிஷன்களும் தற்போதைய தலைமுறையிலிருந்து அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளன.
ஹுண்டாய் வென்யு 2025 - விலை
வென்யுவின் தற்போதைய எடிஷனின் எக்ஸ் - ஷோரூம் விலை வரம்பானது, ரூ.7.26 லட்சத்தில் தொடங்கி ரூ.12.45 லட்சம் வரை நீள்கிறது. இந்நிலையில் புதிய எடிஷனில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை கருத்தில் கொண்டால், அதன் விலை சற்றே அதிகரிக்க கூடும். அதன்படி, புதிய வென்யுவின் தொடக்க விலை ரூ.8 லட்சம் வரை நீளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நவம்பர் 4ம் தேதி வெளிவரக்கூடும்.






















