மேலும் அறிய

FORD CHENNAI: போராட்டத்தை கைவிட்ட ஃபோர்டு ஊழியர்கள்.. பின்னணியில் நடந்தது இதுதான்?

34 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த மகிழுந்து உற்பத்தி செய்யும், சென்னை ஃபோர்டு தொழிற்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதாகக்கூறி, தொழிற்சாலையை வரும் ஜூன் மாதத்துடன் நிரந்தரமாக மூடப்போவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளதால், அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர்.

FORD CHENNAI: போராட்டத்தை கைவிட்ட ஃபோர்டு ஊழியர்கள்.. பின்னணியில் நடந்தது இதுதான்?
 
நோ எலக்ட்ரிக் வாகனங்கள்
 
இந்நிலையில் கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொழிலாளர்கள் தங்களுடைய தொழிற்சாலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்படுகிறதா, என உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் இந்த போராட்டத்தை தொடர்ந்து, சென்னை தொழிற்சாலையில் அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

FORD CHENNAI: போராட்டத்தை கைவிட்ட ஃபோர்டு ஊழியர்கள்.. பின்னணியில் நடந்தது இதுதான்?
 
எழுதிக் கொடுத்துவிட்டு நுழையுங்கள்
 
 திடீரென நிர்வாகம் சார்பில் இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என கடந்த மாதம் இறுதியில் எழுதி வாங்குவதற்காக நிர்வாகம் முயற்சி செய்ததிலிருந்து.  தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை, குஜராத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையும் மூடுவதாக அறிவிப்பு செய்த சூழ்நிலையில், குஜராத் அரசு டாடா நிர்வாத்திற்கு கைமாற்றி கொடுத்த வகையில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளது. 
 
34 நாள் போராட்டம்..
 
அதே போல தங்களுடைய வாழ்வாதாரத்தையும் தமிழக அரசு விவகாரத்தில் தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து 34 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 34 நாட்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள்அரசு , நிர்வாகம் ,ஊழியர்கள் ஆகியோர் தரப்புகளில் தனித்தனியே  நடைபெற்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் கொரோனா வைரஸ்  பாதிப்பில் இரண்டாம் இடம் வகுத்து வருகிறது. தொடர் பேச்சுவார்த்தையின் விளைவாக , ஊழியர்களின் ஒரு சில கோரிக்கைக்கு கோரிக்கைக்கு நிர்வாகம் தரப்பில், ஊழியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
 
FORD CHENNAI: போராட்டத்தை கைவிட்ட ஃபோர்டு ஊழியர்கள்.. பின்னணியில் நடந்தது இதுதான்?
 
இதுகுறித்து தொழிற்சாலை ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், 34 நாட்களை கடந்து சென்றிருக்கும் எங்கள் போராட்டமானது  கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது, ஜூலை மாதம் வரை உற்பத்தியை நிர்வாகம் நீடித்துள்ளது. மேலும் யாரேனும் தொழிற்ச்சாலையை வாங்குவதற்கான சாத்தியகூறுகள் தென்படுகிறது. இதுபோக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை, எந்த வித நிபந்தனையும் இல்லாமல் தொழிலாலர்களை ஆலைக்குள் அனுமதிக்க நிர்வாகம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தீர்வு தொகை பேச்சுவார்த்தையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு உள்ளோம் எங்கள் பணிக்கு திரும்ப உள்ளோம் என தெரிவித்தனர்.
 
என்னதான் ஆனது ஃபோர்டு நிறுவனத்திற்கு
 
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 722 கி.மீட்டர் மைலேஜ்.. Bajaj Pulsar N160 4V விலை, தரம் என்ன?
ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 722 கி.மீட்டர் மைலேஜ்.. Bajaj Pulsar N160 4V விலை, தரம் என்ன?
அப்டேட்டாகி வந்த அந்நியன்.. அறிமுகமாகியது ராயல் என்ஃபீல்டின் Continental GT 650 பைக்
அப்டேட்டாகி வந்த அந்நியன்.. அறிமுகமாகியது ராயல் என்ஃபீல்டின் Continental GT 650 பைக்
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Embed widget