தீபாவளி சிறப்பு ரிவ்யூ: எப்படி இருக்கிறது ஃபெராரி ரோமா சூப்பர் கார்?
இது மற்ற ஃபெராரியிலிருந்து மாறுபட்டது என்பதால் புதிய சந்தைகளையும் ஈர்க்க வாய்ப்புள்ளது, அவற்றில் சில ஏற்கெனவே இந்தியாவில் விற்கப்படுகின்றன.
கார்களை விரும்புவதாகக் கூறும் எவருக்கும் ஃபெராரி காரை ஓட்டிப் பார்ப்பது என்னும் ஆசை அவர்களது பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். சமீபத்தில், அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. துபாய் கார்களை விரும்பும் நகரம் என்பது இங்கே மாலை நேர ட்ராபிக்கில் கண்ணுக்குப் புலப்படும் சொகுசுகார்களைப் பார்த்தாலே தெரிகிறது.இந்தச் சொகுசுகார்கள் தேசத்தில் ஒரு ஃபெராரி ரோமா வாகனம் இயற்கையாகவே பொருந்திப் போகிறது.
ஆனால் இது மற்ற ஃபெராரியிலிருந்து மாறுபட்டது என்பதால் புதிய சந்தைகளையும் ஈர்க்க வாய்ப்புள்ளது, அவற்றில் சில ஏற்கெனவே இந்தியாவில் விற்கப்படுகின்றன. ரோமா ரகம் அனைத்து வழக்கமான ஃபெராரிக்கான சிறப்புகள் என்னும் பெட்டிகளையும் டிக் செய்கிறது. அதேசமயம் அன்றாட வாழ்வில் எந்தவிதச் சலசலப்பும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய ரகமாகவும் இது உள்ளது. பார்ப்பதற்கு அழகானது, கச்சிதமானது. ஃபெராரி என்றாலே கோடுகள் நிறைந்த மாடல் என்பதில் இருந்து மாறுபட்டு இதில் குறைவான கோடுகள், புதிய டிசைனைக் கொண்டுள்ளது. அதுவே முந்தைய சில ஃபெராரிகளைப் போல இது இரட்டை டெயில் விளக்குகள் அல்லது எல்இடி ஹெட்லேம்ப்கள் போன்ற சில நல்ல விவரங்களுடன் வளைந்து நுட்பமாக மற்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரோமா, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தினசரி ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அடிப்படை நடைமுறைகளுக்குத் தேவையான தகுதிகளும் இதில் பார்க்க வேண்டியுள்ளது. கார் தாழ்வானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்போது உள்ளே நுழைவது பெரிய பிரச்சினை அல்ல. ஆனால் உள்ளே நுழைந்தவுடன், பெரிய பிரம்மாண்டமே நமக்குக் காத்திருக்கும் எனலாம். மற்ற எந்த ஃபெரார்ரியையும் போல லெதர், அல்காண்ட்ரா, அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் ஆகியவற்றைக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. காருக்கான சாவி கூட லெதரால் மூடப்பட்ட கார்டினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரோமா காரின் உள்வடிவமைப்பில் ஓட்டுநர்கள் பார்ப்பதற்கான ஒரு பெரிய ஒற்றை 16" HD திரை அதே நேரத்தில் மத்தியில் 8.4" HD டிஸ்ப்ளே ஆகியன இடம்பெற்றிருக்கும். மத்தியில் உள்ள டிஸ்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட்/கிளைமேட் கண்ட்ரோல் செயல்பாடுகளுடன் கூடியது. அது மட்டுமின்றி, பயணிகளுக்கு கூடுதல் சொகுசாக 8.8" வண்ண முழு HD தொடுதிரையும் இடம்பெற்றுள்ளது. காக்பிட் வடிவமைப்பைக் கொண்ட கார் என்பதால் உயரமானவர்களும் வசதியாக அமரும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது.
SUV உடன் ஒப்பிடும் போது, ரோமாவை துபாயில் ஓட்டுவது எளிதாக இருந்தது. பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட் வசதி உங்கள் இடத்தைச் சுற்றியுள்ள போக்குவரத்தைப் பற்றி எச்சரிக்கிறது. நீங்கள் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும் மற்றும் குறைந்த வேகத்தில் ஓட்டுவதையும் இது எளிமையாக்குகிறது. என்ஜின் இரட்டை டர்போ V8 வகையைச் சேர்ந்தது. இது 620 குதிரைத்திறன் வேகத்தில் இயங்குகிறது. மேலும் மென்மையான V8 என்ஜின் பொருத்தப்பட்ட வாகனத்தை ஓட்டிப்பார்த்தால் பின்னணி இரைச்சலுடன் நாம் கார் ஓட்டுவது எத்தனைச் சிக்கல் என நமக்குத் புலப்படும். குறிப்பாக இதன் மியூசிக் சிஸ்டம் மற்றும் ஏசி நன்றாகச் செயல்படுகிறது. இந்திய வெப்பத்துக்கு இது பொருத்தமானதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.