மேலும் அறிய

CNG Cars Under 7 Lakh: மாற்று எரிபொருள்..! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள் - கூடுதல் மைலேஜ் கிடைக்குமா?

Best CNG Cars Under 7 Lakh in India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 7 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும், சிஎன்ஜி கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Best CNG Cars Under 7 Lakh in India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசுகி மற்றும் டாடா நிறுவனங்கள், பட்ஜெட் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து வருகிறது.

சிஎன்ஜி கார்கள்:

கார் என்பது பணக்காரர்களுக்கானது என்பதை தாண்டி, தற்போது நடுத்தர வர்க்கத்தினர் இடையேயான பயன்பாடும் அதிகரித்துள்ளது. அதோடு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று எரிபொருளான, சிஎன்ஜி (Compressed Natural Gas)-யில் இயங்கும் கார்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.  அந்த வகையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 7 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் கார்கள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

Maruti Suzuki Alt0 K10:

Maruti Alto K10 VXi S-CNG மாருதி ஆல்டோ K10 வரிசையில் டாப் எண்ட்  மாடலாக உள்ளத. இதன் விலை ரூ. 5.96 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 33.85 கிமீ/கிலோ மைலேஜ் தருகிறது. Maruti Alto K10 VXi S-CNG மேனுவல் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது Pearl Midnight Black, Granite Grey, Speedy Blue, Earth Gold, Sizzling Red, Silky Silver மற்றும் Solid White ஆகிய 7 வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Maruti Suzuki S-Presso:

Maruti S-Presso LXi S-CNG என்பது அந்நிறுவனத்தின் S-Presso வரிசையில் உள்ள cng மாறுபாடு ஆகும். இதன் விலை ரூ. 5.92 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 32.73 கிமீ/கிலோ மைலேஜ் தருகிறது. Maruti S-Presso LXi S-CNG மேனுவல் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது.  Pearl Starry Blue, Pearl Midnight Black, Metallic Granite Grey, Metallic Silky Silver, Solid Fire Red, Solid Sizzle Orange மற்றும் Solid White ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கிறது.

Maruti Suzuki Celerio:

மாருதி செலிரியோ VXi CNG என்பது மாருதி செலிரியோ வரிசையில் உள்ள cng மாறுபாடு ஆகும்.  இதன் விலை ரூ. 6.74 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில்,  34.43 கிமீ/கிலோ மைலேஜ் வழங்குகிறது. Maruti Celerio VXi CNG மேனுவல் டிரான்ஸ்மிஷனில் கிடைப்பதோடு,  Pearl Midnight Black, Speedy Blue, Caffeine Brown, Glistening Grey, Silky Silver, Solid Fire Red மற்றும் Arctic White ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

Maruti Suzuki Eeco:

Maruti Eeco 5 STAR AC CNG மாருதி Eeco வரிசையில் டாப் எண்ட் மாடலாக உள்ளது.  6.53 லட்சம் விலையிலான இந்த வாகனம் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது.  மெட்டாலிக் ப்ரிஸ்க் ப்ளூ, பேர்ல் மிட்நைட் பிளாக், மெட்டாலிக் க்ளிஸ்டனிங் கிரே, மெட்டாலிக் சில்க்கி சில்வர் மற்றும் சாலிட் ஒயிட் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கபெறும் இந்த கார், 26.78 கிமீ/கிலோ மைலேஜ் வழங்குகிறது.

Maruti Suzuki Wagon R:

 மாருதி வேகன் ஆர் வரிசையில் உள்ள சிஎன்ஜி வேரியண்டான, மாருதி வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ 1.0 சிஎன்ஜி மாடலின் விலை ரூ. 6.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 34.05 கிமீ/கிலோ மைலேஜ் தருகிறது. மாருதி வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ 1.0 சிஎன்ஜி மேனுவல் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது. மேக்மா கிரே, ஜாதிக்காய் பிரவுன், பூல்சைட் ப்ளூ, சில்க்கி சில்வர் மற்றும் சாலிட் ஒயிட் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கிறது. 

TATA TIAGO: 

டாடா நிறுவனத்தின் டியாகோ மாடலில் நான்கு வேரியண்ட்களில் சிஎன்ஜி ஆப்ஷன் கிடைக்கிறது. அதில், XE, XM ஆகிய இரண்டு வேரியண்ட்களின் விலை முறையே 6.55 மற்றும்6.9 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை 26.49 கிமீ/கிலோ மைலேஜ் தருகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget