Ather 450 Apex: வெளியானது அபெக்ஸ் 450 மாடல் - ஏதர் நிறுவனத்தின் அதிவேக ஸ்கூட்டர், புதுசா என்ன இருக்கு? விலை என்ன?
Ather 450 Apex: ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் புதிய 450 அபெக்ஸ் மாடல் மின்சார ஸ்கூட்டர், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Ather 450 Apex: ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் புதிய 450 அபெக்ஸ் மாடல் மின்சார ஸ்கூட்டரின் விலை, இந்திய சந்தையில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Ather 450 Apex மாடல்:
ஏதர் நிறுவனம் அடுத்தடுத்து பல்வேறு டீசர்களை வெளியிட்டு, வாடிக்கையாளர்கள் மத்தியில் அபெக்ஸ் 450 மாடல் தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இன்று நண்பகல் தனது புதிய அபெக்ஸ் 450 மாடல் மின்சார ஸ்கூட்டரை ஏதர் எனர்ஜி நிறுவன, இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தின் அதிவேகமான ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த மாடலின் விலை, ஒரு லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலானது தற்போதைய ஃபிளாட்ஃபார்மை எவ்வளவு தூரம் பாதுகாப்பான தெர்மோடைனமிக்ஸ் வரம்புக்குள் தள்ள முடியும் என்பதன் உச்சமாக இருக்கும் என ஏதர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
The 450 Apex, our 10th Anniversary special edition scooter, is officially here!
— Tarun Mehta (@tarunsmehta) January 6, 2024
We've seen your love for the 450 platform, and to celebrate our 10-year journey, we crafted the 450 Apex –the pinnacle of performance and design in the 450 Series.
Speaking of Performance – the 450… pic.twitter.com/SIZXGHeTx0
பேட்டரி விவரம்:
450 அபெக்ஸ் மாடல் 3.7kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது. ஆனால் புதிய மறுஉற்பத்தி செய்யப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் காரணமாக, புதிய மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 157 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என கூறமுடிகிறது. 450 அபெக்ஸில் உள்ள மோட்டார் அதிகபட்ச ஆற்றலாக 7kW உற்பத்தி செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இ-ஸ்கூட்டர் மட்டுமே ஏதரின் வரிசையில் வார்ப்+ பயன்முறையைப் பெறுகிறது. இதன் மூலம் புதிய ஸ்கூட்டரானது மணிக்கு 0-40 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டும். 450X உடன் ஒப்பிடும்போது புதிய ஸ்கூட்டரானது 40-80 கிலோ மீட்டர் வேகத்தை விரைவாக எட்டிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கிமீ வேகத்தை அடையக்கூடிய ஒரே Ather EV 450 அபெக்ஸ் மாடல் மட்டுமே ஆகும். 450 அபெக்ஸில், பிரேக்கைத் தொடாமல் இ-ஸ்கூட்டரின் வேகத்தைக் குறைக்க, ஆக்ஸிலரேட்டரை 15 டிகிரி பின்னோக்கித் திருப்பலாம். ஆற்றலை சேமிக்க உதவும் இந்த அம்சத்திற்கு 'மேஜிக் ட்விஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
450 அபெக்ஸ் வடிவமைப்பு:
450 அபெக்ஸ் மாடலானது 450 மாடலின் ஃபிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது என்பதால், இருக்கை உயரம், வீல்பேஸ், டயர் அளவுகள் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை 450Xல் இருப்பதை போன்றே உள்ளது. அபெக்ஸில் புதிய பாதுகாக்கப்பட்ட அம்சமாக இணைக்கப்பட்ட பெல்ட் டிரைவ் சிஸ்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் அனைத்து ஏதர் மாடல்களிலும் இருக்கும் என்றாலும், தற்போதைய மாடல்களில் எதிலும் இது இடம்பெறவில்லை. வடிவமைப்பை பொருத்தவரையில் ஒட்டுமொத்த தோற்றமும் ஒரே மாதிரியாக இருந்தாலும், 450 அபெக்ஸ் அதன் பாடி பேனல்களுக்கு சிறப்பு இண்டியம் நீல நிறத்தை பெற்றுள்ளது. பின்புறமானது பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் சேஸைக் காட்டுகிறது.
விலை விவரம்:
3.7kWh பேட்டரி கொண்ட ஏதர் 450 அபெக்ஸின் ரூ.1.89 லட்சம் என்ற விலை, ப்ரோ பேக் கொண்ட டாப்-ஸ்பெக் 450Xஐ விட ரூ.21,000 அதிகம் ஆகு, ஆனால், இந்த புதிய மாடலை வணிக நோக்கத்திற்காக உருவாக்கவில்லை எனவும், தங்களின் ஈடுபாட்டின் விளைவாகவே உருவாக்கியுள்ளதாகவும் ஏதர் நிறுவன இணை நிறுவனர் தருண் மேத்தா தெரிவித்துள்ளார். 450 அபெக்ஸின் உற்பத்தி தேவைக்கேற்ப மட்டுப்படுத்தப்படும் மற்றும் அக்டோபர் 2024 வரை மட்டுமே அபெக்ஸை உற்பத்தி செய்ய ஏதர் திட்டமிட்டுள்ளது. முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், மார்ச் 2024ல் அபெக்ஸ் மாடலின் டெலிவரி தொடங்க உள்ளது.