மேலும் அறிய

Hyundai Compact EV: ஹுண்டாயின் 2வது மின்சார SUV, இந்தியா மேட் காம்பேக்ட் மாடல் - ரூ.10 லட்சத்தில் 500KM ரேஞ்ச்

Hyundai Compact EV: இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹுண்டாயின் இரண்டாவது மின்சார காரின் சுவாரஸ்யமான தகவல்களை இங்கே அறியலாம்.

 Hyundai Compact EV: இந்தியாவிற்கான ஹுண்டாயின் இரண்டாவது மின்சார கார், காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

ஹுண்டாயின் இரண்டாவது மின்சார கார்:

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ப்ராண்டின் முதல் மின்சார கார் மாடலாக, க்ரேட்டாவை கடந்த ஆண்டு ஹுண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இரண்டு ஆண்டுகள் கழித்து 2027ம் ஆண்டின் தொடக்கத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தென்கொரிய நிறுவனத்தின் இரண்டாவது மின்சார கார் சந்தைப்படுத்தப்பட உள்ளது. காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் சந்தைப்படுத்தப்பட உள்ள இந்த கார் தொடர்பான 5 சுவாரஸ்யமான தகவல்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.

ஹுண்டாய் காம்பேக்ட் EV - 5 சுவாரஸ்யமான தகவல்கள்

1. போர்ன் எலெக்ட்ரிக் கார்

ஹுண்டாயின் க்ரேட்டா மின்சார எடிஷனானது இன்ஜின் அடிப்படையிலான வாகன பிரிவிலிருந்து மாற்றப்பட்டது. ஆனால், புதிய காம்பேக்ட் எஸ்யுவி ஆனது அடிப்படையிலேயே மின்சார வாகனமாக வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட உள்ளது. E-GMP எனப்படும் பிரத்யேகமாக மின்சார காருக்காக வடிவமைக்கப்பட்ட ப்ளாட்ஃபார்மில் இந்த கார் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் புதிய காரின் டிசைனில் ஹுண்டாய் நிறுவனத்திற்கு தாராளமான சுதந்திரம் கிடைக்கிறது. இன்ஜின் அடிப்படையிலான வாகனத்தை காட்டிலும் அதிக இடவசதியை ஏற்படுத்தி தர முடியும்.

2. கரடுமுரடான வெளிப்புற டிசைன்

ஹுண்டாயின் காம்பேக்ட் மின்சார எஸ்யுவி ஆனது பாரம்பரியமான எஸ்யுவியின் தன்மைகளை கொண்டிருக்கும். அதில் பாக்ஸி தோற்றம், அதிகப்படியான க்ரவுண்ட் க்ளியரன்ஸ், உயர்த்தப்பட்ட ரூஃப் ரெயில்கள், சதுர வடிவிலான ஜன்னல்கள் ஆகியவை அடங்கும். வாகனத்தின் முழுமையான நீளத்திற்கும் பாதுகாப்பிற்காக கருப்பு நிற க்ளாடிங், ஃபாக்ஸ் ஸ்கிட் ப்ளேட்கள் ஆகியவை இதன் கரடுமுரடான தோற்றத்தை மேலும் மேம்படுத்தலாம்.  

3. பிக்சல் லைட்டிங் எலிமெண்ட்ஸ்

சந்தையில் உள்ள ஹுண்டாயின் ஒவ்வொரு புதிய மின்சார கார் மாடலை போன்றே, விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய காம்பேக்ட் காரும் எதிர்கால தோற்றத்திற்காக பிக்சல் லைட்டிங் எலிமெண்ட்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் ப்ராண்டின் H எனும் லெட்டரானது மையப்பகுதியில் உள்ள நான்கு புள்ளிகளானது மார்ஸ் கோட் அடிபப்டையில் பிரதிபலிக்கும். இதே நடைமுறை பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகளிலும் பின்பற்றப்பட்டுள்ளது. இது லோ மற்றும் ஹை பீம்களில் இருந்து தனியே பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் ஒருங்கிணைந்த விளக்குகள் தனித்துவமான இந்த லைட்டிங் அம்சத்தை பெற்றிருக்கும்.

Hyundai Compact EV: ஹுண்டாயின் 2வது மின்சார SUV, இந்தியா மேட் காம்பேக்ட் மாடல் - ரூ.10 லட்சத்தில் 500KM ரேஞ்ச்

4. புதிய காக்பிட் டிஸ்பிளே

ஹுண்டாயின் இந்த காம்பேக்ட் மின்சார காரின் மூலம், ப்ரண்டின் புதிய காக்பிட் டிஸ்பிளே லே-அவுட்டானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் மெல்லிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஒரு பெரிய டேப்லெட் - ஸ்டைல் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அடங்கும். அவை தனித்தனியாக பொருத்தப்பட்டுள்ளன. முதலாவது டச்ஸ்க்ரீன் 9.9 இன்ச் அளவிலும், இரண்டாவது சுமார் 12.9 இன்ச் அளவிலும் இருக்கும் என கூறப்படுகிறது. இரண்டிலுமே புதியதாக வடிவமைக்கப்பட்ட  ஆண்ட்ராய்ட் ஆட்டோமேடிவ் ஒஎஸ் அடிப்படையிலான சாஃப்ட்வேர் பயன்படுத்தப்பட உள்ளது. 

5. இரண்டு வேரியண்ட்களில் காம்பேக்ட் EV

ஹுண்டாயானது தனது புதிய காம்பேக்ட் மின்சார காரை ஸ்டேண்டர்ட் ரேஞ்ச் மற்றும் எக்ஸ்டெண்டட் ரேஞ்ச் என இரண்டு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம். இரண்டுமே ஒற்றை மோட்டர் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் செட்டப்பை கொண்டிருந்தாலும், வேறுபட்ட மோட்டார் மற்றும் பேட்டரி பேக்கை பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்த விலையில் காரை சந்தைப்படுத்துவதற்காக உள்ளூரிலேயே வடிவமைக்கப்பட்ட பேட்டரி பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக இந்த காரின் ரேஞ்சானது 475 முதல் 500 கிலோ மீட்டர் தூரம் வரை நீளக்கூடும்.

ஹுண்டாய் காம்பேக்ட் EV - விலை, வெளியீடு

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாக வாய்ப்புள்ள இந்த காம்பேக்ட் மின்சார காரின் விலையானது 10 லட்சம் முடல் 13 லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் சந்தையில் இந்த காரானது டாடா பஞ்ச், டாடா நெக்ஸான், சிட்ரோயன் இ-சி3, மஹிந்த்ரா எக்ஸ்யுவி 3எக்ஸ்O ஆகிய கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
Tata Sierra EV Delivery: ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
ஒரே சார்ஜில் 520 கி.மீட்டர் மைலேஜ்... தொடங்கியது Kia Syros EV காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 520 கி.மீட்டர் மைலேஜ்... தொடங்கியது Kia Syros EV காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget