மேலும் அறிய

Kia Upcoming Hybrids: புதுசா 3 ஹைப்ரிட், ஒரு EV எஸ்யுவியை கன்ஃபார்ம் செய்த கியா - மாடல்கள், ரேஞ்ச், விலை விவரங்கள்

Kia Upcoming Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதியதாக 3 ஹைப்ரிட் மற்றும் ஒரு மின்சார கார் மாடலை கொண்டு வரவுள்ளதாக கியா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

Kia Upcoming Hybrid SUV: இந்திய சந்தைக்கு செல்டோஸ், சொரெண்டோ மற்றும் கார்னிவல் ஆகிய மாடல்களின் ஹைப்ரிட் எடிஷனை கியா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது.

3 ஹைப்ரிட் கார்களை கன்ஃபார்ம் செய்த கியா..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹைப்ரிட் பிரிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கியா நிறுவனம் 3 மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதை உறுதி செய்துள்ளது. அதுவும் 2030ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கார்களும் உள்ளூர் சந்தையில் கிடைக்குமாம். கடந்த ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் இந்தியாவில், மிட்-சைஸ் எஸ்யுவி ஆன செல்டோஸ் ஹைப்ரிட் கார் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அண்மையில் நடந்த நடப்பாண்டிற்கான உற்பத்தியாளர்கள் மாநாட்டில், உள்ளூரில் கியாவின் சொரெண்டோ ஹைப்ரிட் மற்றும் கார்னிவல் ஹைப்ரிட் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதை கியா உறுதிபடுத்தியுள்ளது.

கியாவின் எந்த ஹைப்ரிட் எப்போது அறிமுகம்?

SP3i என்ற கோட்நேமை கொண்டுள்ள செல்டோஸ் ஹைப்ரிட் எஸ்யுவி ஆனது, வரும் 2027ம் ஆண்டு உள்ளூரில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட சொரெண்டோ எஸ்யுவி ஆனது 2027ம் ஆண்டின் இரண்டாவது பாதையில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம். அதன் தொடர்ச்சியாக கார்னிவல் ஹைப்ரிட் எடிஷன் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவிற்கான ஹைப்ரிட் எடிஷன்கள் எப்படி இருக்கும்?

கியா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள ஹைப்ரிட் எஸ்யுவிக்களுக்கான பவர்ட்ரெயின் விவரங்களை இதுவரை வெளியிடவில்லை. அதேநேரம், ஊடக அறிக்கைகளில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஏற்கனவே நன்கு அறியப்பட்ட மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் 4 சிலிண்டர்  நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்த உள்ளதாம். இந்த பவர்ட்ரெயின் செட்-அப் ஆனது குறைந்த கார்பன் உமிழ்வை கொண்டிருப்பதோடு, அதிக எரிபொருள் செயல்திறனையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


Kia Upcoming Hybrids: புதுசா 3 ஹைப்ரிட், ஒரு EV எஸ்யுவியை கன்ஃபார்ம் செய்த கியா - மாடல்கள், ரேஞ்ச், விலை விவரங்கள்

சர்வதேச மாடல்களில் இன்ஜின் அம்சங்கள்:

சர்வதேச சந்தையில் கியா சொரெண்டோ மற்றும் கார்னிவல் ஹைப்ரிட் கார் மாடல்களானது, 1.6 லிட்டர் டர்போ  பெட்ரோல் GDI இன்ஜின் ஆப்ஷனை பயன்படுத்துகிறது. அவை முறையே 59bhp மற்றும் 73-74bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய மோட்டார்களை கொண்டுள்ளன. 7 சீட்டர் எஸ்யுவி ஆனது மோட்டாருடன் சேர்ந்து 227 குதிரை திறன் மற்றும் 350Nm இழுவை திறனை கொண்டுள்ளது. அதேநேரம் எம்பிவி எடிஷனை சேர்ந்த கார்னிவல் மாடலானது மோட்டாருடன் சேர்ந்து 242 குதிரை திறன் மற்றும் 367Nm இழுவை திறனை கொண்டுள்ளது. இரண்டு மாடல்களுமே ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் சிஸ்டத்துடன் 6 ஸ்பீட் ஆட்டோமோடிக் ட்ரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. அதேநேரம், சொரெண்டோ மாடல் ஆல் வீல் ட்ரைவ் கான்ஃபிகரேஷனிலும் கிடைக்கிறது.

கியா ஹைப்ரிட்களின் முக்கிய அம்சங்கள் & போட்டியாளர்கள்

ஹைப்ரிட் பேட்ஜ் மற்றும் சிறிய சாஃப்ட்வேர் அப்டேட்களை தவிர மற்றபடி சொரெண்டோ மற்றும் கார்னிவல் ஹைப்ரிட் எடிஷன்களானது, அதன் இன்ஜின் மாடல்களை அப்படியே பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது.சொரெண்டோ உள்ளூர் சந்தைக்கு முற்றிலும் புதிய மாடலாக இருக்கும்.  இது சுமார் 4.8 மீட்டர் நீளத்தை கொண்டிருக்கும். உள்ளூர் சந்தையில் இந்த கார் விற்பனைக்கு வந்ததுமே விரைவில் சந்தைப்படுத்த உள்ள ஹுண்டாயின் Ni1i, மாருதி கிராண்ட் விட்டாராவின் 7 சீட்டர் எடிஷன், டொயோட்டா ஹைரைடர் மற்றும் ரெனால்ட் டஸ்டர் ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிட உள்ளது.


Kia Upcoming Hybrids: புதுசா 3 ஹைப்ரிட், ஒரு EV எஸ்யுவியை கன்ஃபார்ம் செய்த கியா - மாடல்கள், ரேஞ்ச், விலை விவரங்கள்

கியா சைரோஸ் மின்சார எடிஷன் உறுதி

சைரோஸ் கார் மாடலின் மின்சார எடிஷனையும் உறுதி செய்துள்ள கியா, நடப்பாண்டின் நடுப்பகுதியில் அது விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது. காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷனுக்கு கீழே நிலைநிறுத்தப்பட உள்ளதால், வெகுஜன மின்சார கார் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இன்ஜின் எடிஷனிலிருந்து டிசைனானது சற்றே மாறுபட்டு இருக்கும் என தெரிகிறது. மின்சார எடிஷன் அடிப்படையிலான சாஃப்ட்வேர் அப்டேட்களுடம் கூடுதலாக தனித்துவமானதாக மாற்றும். சைரோஸ் மின்சார எடிஷனின் பவர்ட்ரெயின் மற்றும் ப்ளாட்ஃபார்மானது ஹுண்டாய் இன்ஸ்டெர் உடன் பகிர்ந்துகொள்ளப்படும் என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Maruti Suzuki Car Offers: ரூபாய் 1.35 லட்சம் வரை தள்ளுபடி.. Alto முதல் Victoris வரை! எந்த காருக்கு எவ்வளவு?
Maruti Suzuki Car Offers: ரூபாய் 1.35 லட்சம் வரை தள்ளுபடி.. Alto முதல் Victoris வரை! எந்த காருக்கு எவ்வளவு?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Embed widget