மேலும் அறிய
Advertisement
Watch Video | உலக பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது மாசி மாதம் பிரம்மோற்சவம்
சிறப்பு பூஜைகள் செய்து தங்கக்கொடி மரத்தில் காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடியினை கோவில் ஸ்தானகர்கள் ஏற்றி வைத்தனர்
சக்தி பீடங்களில் ஒன்றானதும், உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி ப்லவ ஆண்டு மாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று முதல் கொடி ஏற்றத்துடன் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் துவங்கியது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். / இதைத்தொடர்ந்து உற்சவ காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் லக்ஷ்மி சரஸ்வதி தேவியுடன் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து வெளிப் பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார்.
காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, மூஷிக வாகனத்தில் விநாயகர் பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். pic.twitter.com/qjAnzvMcaq
— Kishore Ravi (@Kishoreamutha) February 7, 2022
சக்தி பீடங்களில் ஒன்றான உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், மாசி மாதம் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று முதல் தொடங்கியது. pic.twitter.com/MCkOWWA4WT
— Kishore Ravi (@Kishoreamutha) February 8, 2022
கோவில் வளாகத்தில் உள்ள தங்கக் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடியினை கோவில் ஸ்தானீகர்கள் வேத மந்திரங்களை ஓலித்தவாறு, மேளதாளங்கள் முழங்க, தங்க கொடி மரத்தில் ஏற்றி வைத்து பிரம்மோற்சவ விழாவை தொடங்கினார்கள்.விழாவில் கோயில் ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர், மேலாளர் செல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மாசி மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு காஞ்சி காமாட்சி அம்மன் திருக் கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும், வண்ண மலர்மாலைகளாளும், செங்கரும்புகளா லும் அலங்கரிக்கட்டிருந்தது. பிரம்மோற்சவ கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
கிரிக்கெட்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion