Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் அமோகமாக இருக்கப்போற ராசிக்காரங்க யாரு..?
Weekly Rasipalan: வாரத்தின் முதல் வேலை நாள் திங்கட்கிழமை இன்று பிறந்து விட்டது. இந்த நிலையில், இந்த வாரம் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே இந்த வாரம் பணியிடத்தில் உங்களுக்கு பணிகள் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். உங்களின் பேச்சிலும், செயலிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். நிலுவையில் உள்ள பண வரவுகள் உங்கள் கைக்கு வரும். உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமையும். வீட்டின் முக்கிய பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். வீடு தொடர்பாக சற்று அலைச்சல் ஏற்படும். வீட்டை புதுப்பிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். துணைவியுடன் நேரத்தை அதிகமாகவே செலவிடும் வாய்ப்பு கிட்டும். இந்த வாரம் உங்களுக்கு பண வரவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு இந்த வாரம் அமோகமாக இருக்கும்
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு வேலைகள் அதிகளவில் இருக்கும். குடும்ப பொறுப்புகள், பணி பொறுப்புகள் என்று நிறைய கடமைகள் உங்களுக்காக காத்திருக்கிறது. உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். அதேசமயம், வியாபார மற்றும் குடும்ப எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் நல்ல லாபம் கிடைக்கும். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே இந்த வாரம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடங்களில் மிகுந்த கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களுடன் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை முதலீடு செய்வதில் மிகவும் எச்சரிக்கை தேவை. காதலர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே அவ்வப்போது சின்ன, சின்ன சண்டைகள் ஏற்படும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே இந்த வாரம் சற்று கடினமாகவே உங்களுக்கு அமையும். மன அழுத்தம், பணப்பிரச்சினை, வீட்டில் சிக்கல் என இந்த வாரம் மாறி, மாறி அமையும். ஆலய வழிபாடு மேற்கொள்வது மிகவும் ஆறுதலாக இருக்கும். விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்களின்போது மிகவும் பொறுமையுடன் இருப்பது உங்களுககு நல்லது ஆகும். அதேசமயம், வர்த்தக ரீதியில் சில வெற்றிகரமான வாய்ப்புகளும் உங்கள் முன் வரும். காதல் துணை மிகுந்த பக்கபலமாக இருப்பார்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். கடின உழைப்பையும், விடா முயற்சியையும் உங்கள் வெற்றிக்காக தருவீர்கள். பணி தொடர்பாக நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகள் கடுமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சிகரமாக அமையும். உடல்நலக் கோளாறுகள் சீராகும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் நிறைந்து காணப்படும். பணியிடங்களில் மேல் அதிகாரிகள் மற்றும் நண்பர்களின் ஆதரவு நிறைவாக கிடைக்கும். உங்களின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நிதி வருவாய் மிகவும் திருப்திகரமாக இருக்கும். இல்லற வாழ்க்கை இனிப்பாக அமையும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். வேலை தொடர்பாக சிறு, சிறு அலைச்சல்கள் இருந்தாலும் பலன் அளிக்கும் விதமாகவே அமையும். மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரிகள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு இன்பமும், துன்பமும் கலந்து இருக்கும். வீட்டில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். அதிக அலைச்சலும், அதிக செலவும் இந்த வாரம் உங்களுக்கு இருக்கும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நிலையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த கோளாறு சரியாகும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களே இந்த வாரம் நீங்கள் திட்டமிட்ட வேலைகள் பாதிக்கப்படலாம். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றங்கள் உத்தரவு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. திடீரென பெரிய செலவு ஏற்படும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் வழக்கத்தை விட போட்டி சற்று கடினமாக இருக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது ஆகும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு நன்மைகள் நிறைந்த வாரம் என்றாலும், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். பயணங்களால் சோர்வு, மன உளைச்சல் ஏற்படலாம். பணிபுரியும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகள், பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை. எதிலும் பொறுமை மிகவும் அவசியம் ஆகும். இல்லற வாழ்வில் சந்தோஷம் உண்டாகும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாகவே அமையும். பணிபுரியும் இடத்தில் நீடித்து வந்த தடை நீங்கும். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களின் போது கூடுதல் கவனம் தேவை. காதலர்களுக்கு இடையே மனக்கசப்ப ஏற்படும். நெருக்கடியான நேரத்தில் வாழ்க்கை துணை மிகப்பெரிய பலமாக இருப்பார்கள்.