மேலும் அறிய

Weekly Rasipalan: காதலர் தின வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!

Weekly Horoscope Tamil(Feb 12 to Feb 17) | வார ராசிபலன்: பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் என்பதை காணலாம்.

Weekly Horoscope in Tamil (February 12 to February 17)

மேஷ ராசி  

மேஷ ராசி வாசகர்களே,  இந்த வாரம் உங்களுக்கு ஒரு அற்புதமான வாரமாக இருக்கப் போகிறது. ராசிநாதன் செவ்வாய் தன்னுடைய உச்ச வீடான மகரத்தில் அமர்ந்திருக்கிறார்.  எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.  தேகம் ஆரோக்கியம் பெறும். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். தொழில் மேன்மை உண்டு.  உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். மொத்தத்தில் இந்த வாரம் உங்களுக்கு ஒரு  அற்புதமான வாரம்.  

 பரிகாரம் :  முருகப்பெருமான் வழிபாடு 

ரிஷப ராசி 

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிநாதன்  சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திலிருந்து  எதிர்பாராத தன வரவை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கப் போகிறார்.  மேலும்  இந்த வாரம்  ராசிநாதன் சந்திரன் உச்ச வீட்டிலும் பயணிக்க போகிறார்.  எனவே  வீடு மனை யோகம் உண்டு.  உங்களுடைய சொல்லுக்கு அதிகாரம் உண்டு.  கஷ்டங்கள் விலகி  மகிழ்ச்சி பொங்கும். 16ம்  தேதி மற்றும் 17ஆம் தேதிகளில்  சந்திரன் உங்களுடைய ராசியிலேயே பயணிப்பதால்  மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள்.  மொத்தத்தில் இந்த வாரம் உங்களுக்கு அற்புதமான வாரமே. 

 பரிகாரம் : துர்க்கை அம்மன் வழிபாடு 

மிதுன ராசி 

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு  எட்டாம் பாவத்தில் பதினொன்றாம் அதிபதி  செல்வதால்  எந்த ஒரு முடிவையும் யோசித்து எடுப்பது நல்லது.  தொழிலில் ஏற்றமான சூழ்நிலைகள் இருந்தாலும், நான்காம் இடத்துக்கு  கேது  உங்களை வீட்டில் இருக்க விடாமல் செய்வார்.  திடீர் தன வரவு உண்டு.  பிள்ளைகளை குறித்த கவலை இருக்கும்.  சற்று செலவுகள் இருந்தாலும் அவை சுபச் செலவுகளாகவே இருக்கும்.  மனதில் குழப்பம் இருக்கலாம்  ஸ்ரீ மகா விஷ்ணுவை வழிபட சங்கடங்கள் தீரும். 

 பரிகாரம் :  பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணு 

 கடக ராசி 

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே, இந்த வாரம் உங்களுக்கு அற்புதமான வாரம் குறிப்பாக உயர் அதிகாரிகளை சந்திப்பது, சமுதாயத்தில் அதிகார பதவியில் இருப்பவர்களோடு நட்பு ஏற்படுவது.  அலுவலகத்தில் மிகப்பெரிய உயர் பதவிகளில் வகிப்பவர்களின்  நட்பு கிடைப்பது  போன்ற நல்ல தரமான செயல்கள் நடைபெற கூடும்.  எனினும்  பத்தாம் இடத்தில் குரு பகவான் இருப்பதால்  புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். யாரை நம்பியும் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.  ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு நல்ல காலம் பிறக்கும். 

 பரிகாரம் :   ஆறுமுகனை வழிபட வேண்டும் 

சிம்ம ராசி 

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே,  உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம்  வர இருக்கிறது.  திங்கள் புதன் செவ்வாய் போன்ற நாட்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.  புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இட வேண்டாம்.   மேலே சொன்ன நாட்களில் பேச்சில் கவனம் தேவை.  நிதானத்தை கடைபிடியுங்கள்.  வீண் பேச்சை குறைப்பது நல்லது.  உடன் வேலை செய்பவர்களுடன் சற்று கவனமாக நடந்து கொள்ளுங்கள். 

 பரிகாரம்:  சந்திராஷ்டம தினம்களில் தண்ணீரில் உப்பை கலந்து ஒரு டம்ளர் குடியுங்கள் 

கன்னி ராசி 

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே,  14ஆம் தேதி 15 ஆம் தேதிகளில்  உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்  தேவையற்ற வீண் அலைச்சல் இருக்கும்.  சந்திராஷ்டம நாட்களில்  எடுத்த காரியங்கள் நடைபெறாமல் போக வாய்ப்பு உண்டு.  குடும்பத்துடன் மனம் விட்டு பேசுவது நல்லது.  யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.  வீடு மனை வாகனம்  போன்றவை சாதகமாக முடியும். 

 பரிகாரம் :  ஆஞ்சநேயர் வழிபாடு 

துலாம் ராசி 

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  பதினாறாம் தேதி 17ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம் செல்வதால் சற்று கவனமாக இருப்பது நல்லது.  குறிப்பாக வாழ்க்கைத் துணையிடம்  சிறிய தகராறு ஈடுபட்டால் கூட அது பெரியதாய் மாறக்கூடும்.  முடிந்தவரை சந்திராஷ்டமதனங்களில் நீங்கள் மௌன விரதம் இருப்பது மிக மிக சிறந்தது.  காரணம் ஆறாம் இடத்தில் ஏற்கனவே ராகு இருக்கிறார்  அவர் சண்டைக்கு தயாராக இருப்பார்.  மேலே சொன்ன சந்திராஷ்டமதனங்களில்  சிறிய தகராறு கூட பெரிய  வம்பாக  மாறக்கூடும்.  இந்த வாரம் சற்று கவனமாக இருங்கள். 

பரிகாரம் :  மகாலட்சுமி வழிபாடு 

விருச்சக ராசி 

அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இது பொன்னான வாரம்.  ராசிநாதன் மூன்றாம் இடத்தில் உச்சம் பெறுகிறார்.  தைரியமாக இருப்பீர்கள்.  உங்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.  எடுத்த காரியத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள்.  உங்களை  உதாசீனப்படுத்தியவர்களுக்கு முன்பாக  நீங்கள் தலைநிமிர்ந்து நிற்கப் போகின்றீர்கள்.  கிட்டத்தட்ட இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு அற்புதமாகவே அமையும்.  எதிர்காலத்தை குறித்து கனவு  காணுவதை விட்டு, விட்டு கடினமாக உழைக்க ஆரம்பிப்பீர்கள்.  பிள்ளைகளை குறித்து கவலை இருக்கும்.  கவலை வேண்டாம் இந்த வாரம் உங்களுக்கு ஏற்றமான வாரமே.

 பரிகாரம்:  குரு பகவான் வழிபாடு 

தனுசு ராசி 

அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரம் ஆக இருக்கப் போகிறது  குடும்பத்தோடு நேரத்தை  செலவிடுவீர்கள்.  உங்கள் வங்கி கணக்கில் சேமிப்பு உயரும். உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும்  எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்  உயர் அதிகாரிகள் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள் .  வேலை இடங்களில் பாராட்டை பெறுவீர்கள்.  குழந்தைகளால் ஆதாயம் உண்டு. 

பரிகாரம் :  முருகப்பெருமான் வழிபாடு 

மகர ராசி  

 அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே  உங்களுடைய ராசியிலேயே செவ்வாய் உச்சம் பெறுகிறார்,   தேக ஆரோக்கியம் கூடும்.  பிள்ளைகள் வழியில் நன்மை உண்டு.  பெரிய விழாக்களை முன்னின்று  நடத்துவீர்கள்.  பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள்.  வீடு, நிலம், வாகனம் போன்றவை உங்களுக்கு சாதகமாக அமையும்.  வீட்டை சீரமைப்பீர்கள்.  இந்த வாரம் உங்களுக்கு ஒரு அற்புதமான வாரம்.

 பரிகாரம் : பெருமாள் வழிபாடு 

கும்ப ராசி

அன்பான கும்ப ராசி வாசகர்களே  ஜென்ம சனி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேலையில்  அழுத்தமான மனநிலையை சில சமயங்களில் சந்திப்பீர்கள்.  தைரியம் கூடும், உற்சாகம் பிறக்கும்.  நீண்ட தூர பிரயாணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.  உறக்கமின்மையால் கஷ்டப்பட்டவர்களுக்கு நல்ல உறக்கம் கிடைக்கும்.  ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிரிகளைப் பந்தாடுவீர்கள்.  இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற இறக்கமான வாரமாகவே அமையும் 

பரிகாரம்: சித்தர் வழிபாடு 

மீன ராசி 

அன்பான  மீனம்  ராசி வாசகர்களே  உங்களுடைய ராசியிலேயே  சந்திரன் பயணம் செய்வதால்,  மற்றவர்களிடம் பேசும் போது சற்று யோசித்துப் பேசுவது நல்லது.  கோபப்படும்படியான சூழ்நிலை வந்தால் கூட  நீங்கள் சற்று அமைதியாக செல்லுங்கள். புதிய காரியங்களை தள்ளிப் போடுவது நல்லது. வேலையில் சக நண்பர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள்.  இந்த வாரம்  நீங்கள் எதிலும் கொஞ்சம் பொறுமையாக செல்வது நல்லது.

பரிகாரம்:  குரு தட்சணாமூர்த்தி வழிபாடு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Embed widget