மேலும் அறிய

ஆடிப்பெருக்கு திருவிழா: காவிரி, கொள்ளிடம் ஆற்றில் குவிந்த மக்கள்..!

திருச்சி அம்மா மண்டபம், காவிரி, கொள்ளிடம் ஆற்றின் படித்துறையில் ஆடிப்பெருக்கை பொதுமக்கள் கோலகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரி வரும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு விழாவை ஆற்றங்கரைகளில் கொண்டாட காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் வீடுகளில் உள்ள காவிரி குடிநீர் குழாய்க்கும், ஆழ்குழாய் கிணற்றிலும் பூஜை செய்து வழிபட்டனா். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா அன்று காவிரி படித்துறைகள் களை இழந்து காணப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக திருச்சியில் அம்மா மண்டபம், கருடமண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் ஆடிப்பெருக்குவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

                                                                                                                                                                                                                                         ஆடிப்பெருக்கு திருவிழா:  காவிரி, கொள்ளிடம் ஆற்றில் குவிந்த மக்கள்..!

குறிப்பாக அம்மாமண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். மேலும் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து, தேங்காய், அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு பூஜை செய்து வருகிறார்கள். பின்னர் காவிரி ஆற்றுக்கு தீபாராதனை காட்டி வழிபடுவர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொள்வர். மேலும் திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர்.


ஆடிப்பெருக்கு திருவிழா:  காவிரி, கொள்ளிடம் ஆற்றில் குவிந்த மக்கள்..!

மேலும் கணவருக்கு நீண்ட ஆயுளும், நீடித்த செல்வமும் வழங்க வேண்டும் என்று சுமங்கலி பெண்கள் அனைவரும் காவிரித்தாயை பிரார்த்தித்து, தங்களது தாலியை பிரித்து புதுத்தாலியை கட்டுவர். இளைய பெண்களுக்கும் கட்டிவிடுவர். தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடும் ஆடிப்பெருக்கு விழா, காவிரியாற்று வெள்ளம் போலவே, காவிரி கரையோர மக்களிடம் மகிழ்ச்சியை கரை புரண்டோட வைத்துள்ளது. இதுபோல், ஆடிப்பெருக்கான இன்று, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் படித்துறை உள்ளிட்ட, காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் ஏராளமாக கூடியுள்ளனர்.


ஆடிப்பெருக்கு திருவிழா:  காவிரி, கொள்ளிடம் ஆற்றில் குவிந்த மக்கள்..!

இதைத்தவிர, ஆங்காங்கே உள்ள காவிரி, கொள்ளிடக் கரைகளில் பெண்கள் திரண்டுள்ளனர். கொரானா பரவல் காரணமாக, ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்துறைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாண்டு தடைக்கு பின்னர் ஆடிப்பெருக்கு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து பாதுக்காப்பு குறித்து அறிவுறுத்தபட்டு வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget