மேலும் அறிய

திருநகரி ஸ்ரீ கல்யாண ரெங்கநாதர் கோயில் திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம்பிடிப்பு..

சீர்காழி அருகே புகழ் பெற்ற திருநகரி ஸ்ரீ கல்யாண ரெங்கநாதர் கோயில் திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வழிபட்டனர்.

பங்குனி உற்சவ பெருவிழா தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பங்குனி உற்சவ விழாவை யொட்டி இந்துக்களுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை அடுத்து பல்வேறு ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன‌. அதேபோன்று குலதெய்வ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படும் பங்குனி உத்திர விழா இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

திருநகரி ஸ்ரீ கல்யாண ரெங்கநாதர் கோயில் திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம்பிடிப்பு..

ICC Women's World Cup 2022: ஆட்டத்தின்போது களத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ

பங்குனி உத்திரம் அன்று முருக பெருமானை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது இந்துக்களின் ஆழமான நம்பிக்கையாக உள்ளது. இதைத் தொடர்ந்து பங்குனி உத்திர நாளில் முருகன் கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளதை அடுத்து இன்று முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

யூ ட்யூப்.. விமானம்... முன் அனுபவம் இல்லாத வேலைகளை தைரியமாக செய்வது பெண்களா? ஆண்களா? ஆய்வு தகவல் என்ன?

திருநகரி ஸ்ரீ கல்யாண ரெங்கநாதர் கோயில் திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம்பிடிப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநகரி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்யதேசத்தில் 37 வது திவ்ய தேசமான, ஸ்ரீ அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவக் கோயில் இதுவாகும். இக்கோயில் கோயில் மூலவர் பெயர் வேதராஜன், தாயார் பெயர் அமிர்தவள்ளி நாச்சியார், திருநகரி தலம் திருமங்கை ஆழ்வார் பிறந்த இடமாகும். இக்கோயிலின் இராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது.

கோயில் உற்சவரின் பெயர் கல்யாண ரங்கநாதர் ஆகும். இக்கோயில் வேதராஜன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் பங்குனி பெருவிழா கடந்த 9 தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 

திருநகரி ஸ்ரீ கல்யாண ரெங்கநாதர் கோயில் திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம்பிடிப்பு..

டிப்ளமோ முடித்தவர்களா நீங்கள்? தமிழக மருத்துவத்துறையில் 238 காலிப்பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணிடுங்க!

திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கோயிலில் இருந்து ஸ்ரீ அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாதர் ஒரு தேரிலும், ஸ்ரீ குமுதவள்ளி நாச்சியார் சமேத திருமங்கை ஆழ்வார் மற்றொறு தேரிலும் எழுந்தருளினர். தொடர்ந்து அவர்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. முதலில் பெருமாள் தேரையும், அதனை தொடர்ந்து ஆழ்வாரின் தேரையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்திழுத்தனர். அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்தில் ரெங்கநாதா, திருமங்கை மன்னா என்று கோஷம் முழங்க தேரை இழுத்து, தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
Embed widget