கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் பகல் பத்து உற்சவ இரண்டாம் நாள் திருவீதி உலா
’’ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி தங்க ஆபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்’’
![கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் பகல் பத்து உற்சவ இரண்டாம் நாள் திருவீதி உலா The second day of the ten day festival at the Ranganathaswamy Temple in Karur Sri Abhaya Pradhan Ranganatha Swami Temple கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் பகல் பத்து உற்சவ இரண்டாம் நாள் திருவீதி உலா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/04/31744cc8c92dfcdf03ef2e7adf4e8f19_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் மாவட்டம் மேட்டுத்தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி விழாக்கள் தொடர்ந்து முதல் நாள் பகல் பத்து உற்சவம் திருவீதி உலா நேற்று ஆலயத்தில் நடைபெற்றது.
அதை தொடர்ந்து இன்று மேட்டுத்தெரு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியின் திருவீதி உலாவில் பகல் பத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதசுவாமி உற்சவருக்கு பால் தயிர் திரு மஞ்சள் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று வண்ண மாலைகள் அணிவித்து தங்க ஆபரண அலங்காரத்தில் ஆலய மண்டபத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர். பட்டாச்சாரியார்கள் சுவாமிக்கு துளசியால் நாமாவளிகள் கூறி தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
பின்னர் மேளதாளங்கள் முழங்க வைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து இரண்டாம் நாள் உற்சவம் திருவீதி உலா முன்னிட்டு சுவாமியை தோளில் சுமந்தவாறு ஆலயம் வலம் வந்தனர். ஆண்டாள் சன்னதி அருகே பட்டாச்சாரியார்கள் மாலை மாற்றும் நிகழ்ச்சி யில் நடனமாடியபடி பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர்.
பின்னர் ஆலய மண்டபத்திற்கு வந்தடைந்த ஸ்வாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு பகல்பத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது. மேட்டுத்தெரு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியைக் காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகைதந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
அபய பிரதான ரங்கநாதர் ஸ்வாமி ஆலயத்தில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற பகல்பத்து இரண்டாம் நாள் உற்சவ திரு விழா ஏற்பாட்டை கரூர் பழனி முருகன் ஜுவல்லரி சார்பாக அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான முறையில் ஆலய மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.
மன்கீ பாத் நிகழ்ச்சியை வானொலியில் கேட்போர் எண்ணிக்கை அதிகரிப்பு - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)