Muslims In Temple Ritual : கோவில் கும்பாபிஷேகம்.. தட்டுடன் வந்து நட்பை வெளிப்படுத்திய இஸ்லாமியர்கள்.. நல்லிணக்கம் கொண்டாடும் புதுக்கோட்டை
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கல்யாணராமர் ஆலயத்தில் இருந்து கும்பாபிஷேகம் நடைபெறும், கோயிலுக்கு இஸ்லாமியர்கள் தட்டு எடுத்து வந்த சம்பவம் கவனத்தை பெற்றிருக்கிறது.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கல்யாணராமர் ஆலயத்தில் இருந்து கும்பாபிஷேகம் நடைபெறும், கோயிலுக்கு இஸ்லாமியர்கள் தட்டு எடுத்து வந்த சம்பவம் கவனத்தை பெற்றிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஆர்.புதுபட்டினம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்திவிநாயகர், வள்ளி தேவசே சமேத, சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் ஆறுகால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, புனித நீரை தலையில் சுமந்து கோயிலை பக்தர்கள் வலம் வந்தனர். தொடர்ந்து கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு, மலர்கள் தூவப்பட்டு கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே, ஸ்ரீ சித்தி விநாயகர், அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா.
— Krishna Kumar (@k_for_krish) February 21, 2022
வரவேற்பு வளைவுகள் அமைத்து, தட்டு எடுத்துவந்து, கும்பாபிசேக விழாவில் கலந்து கொண்ட ஜாமாத் அமைப்பினர்..
#ThisIsTamilnadu #pudukkottai @SRajaJourno pic.twitter.com/OVzGy5DxfL
அதனைத்தொடர்ந்து, கலசத்திற்கு புனித நீரை ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்பு அந்த புனித நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. மேலும் கருவறையில் உள்ள தெய்வங்களுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண வந்த சுற்றுவட்டார பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டை ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே, ஸ்ரீ சித்தி விநாயகர், சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிசேக விழாவில் ஜமாத் அமைப்பினர் கலந்து கொண்டனர். pic.twitter.com/RDc7RmV6RZ
— S.Kalyani Pandiyan (@Kalyaniabp) February 21, 2022
முன்னதாக, நேற்று மாலை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்கள், கல்யாணராமர் ஆலயத்தில் இருந்து கும்பாபிஷேகம் நடைபெறும் கோவிலுக்கு தட்டு எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்