Sani Vakra Nivarthi: வருகிறது சனி வக்கிர நிவர்த்தி! ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
Sani Vakra Nivarthi Peyarchi 2023: சனி வக்கிர நிவர்த்தியை முன்னிட்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
கடக ராசி :
சனி வக்கிர நிவர்த்தி வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 20ஆம் தேதி நிகழ்வு இருக்கிறது. இதில் கடக ராசியான உங்களுக்கு சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து மறைவான தொல்லைகளையும் அவமானங்களையும் சிறு சிறு குறைகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. சனியின் சுற்று ஒவ்வொரு முப்பது வருடங்களுக்கு ஒரு முறை வந்து செல்லும் அதில் முதல் முப்பது வருடம் பெரிய தொந்தரவு ஒன்றும் செய்யாது. இரண்டாவது 30 வருடம் எப்படி இருக்கும் என்றால் கடினமான வேலைகளையும் வாழ்க்கை சுமைகளையும் குடும்ப பொறுப்புகளையும் ஏற்று நடத்த வேண்டி வரும். கடக ராசிக்கு ஏற்கனவே கடந்த ஒன்றை வருடங்களாக தொழிற் ஸ்தானத்தில் ராகு அமர்ந்து சில ஏற்றமான பலன்களையும் சில சங்கடமான பலன்களையும் மாறி மாறி உங்களுக்கு வழங்கி இருப்பார்.
எட்டாம் பாவம் என்பது பெண்களாக இருந்தால் மாங்கல்ய ஸ்தானமாக வரும். எட்டாம் பாவத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கும் பொழுது கடக ராசி பெண்களுக்கு குறிப்பாக திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு சற்று தாமத திருமணத்தையும், திருமணத்தில் சிக்கல்களையும் தர சனிபகவான் காத்திருந்தாலும் கூட, உங்களின் சுய ஜாதகத்தை பொறுத்துதான் திருமண பாக்கியங்கள் அமையும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்று கூறுவார்கள். நீங்கள் தவறே செய்யவில்லை என்றாலும் கூட தவறு செய்தது போல் ஒரு பிம்பத்தை சனி பகவான் ஏற்படுத்துவான் காரணம், அவர் நீதிமான். உங்களுடைய சிறு, சிறு கவனக்குறைவையும் கூட பெரிதாக மற்றவர்களுக்கு காண்பிப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார். ஆனால் கவலை வேண்டாம் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய போகும் குரு பகவான் உங்களுக்கு மிகப்பெரிய மேன்மையை வெற்றியை கொண்டு வந்து உங்கள் மடியில் கொடுக்கப் போகிறார்.
விருச்சக ராசி :
அன்பார்ந்த விருச்சிக ராசியினர்களே உங்களுக்கு அர்த்தஷ்டம் சனி நடப்பதால் நான்காம் பாவத்தில் சனி பகவான் அமர்ந்து பல நல்ல செயல்பாடுகளையும் சிறு, சிறு சிக்கல்களையும் கொடுக்கக்கூடும். ஏற்கனவே விருச்சிக ராசிக்கு ஓரளவு பிரச்சினையில் இருந்து மீண்டு வரக் கூடிய காலகட்டமாக தான் 2024 இருக்கப் போகிறது. அப்படி இருக்க சனி பகவான் நான்கில் அமர்ந்து வாகனம் இடம் மனை போன்றவற்றில் உங்களுக்கு மேன்மையான பலன்களை வாரி வழங்கப் போகிறார்.
சனிபகவான் இயந்திரத்திற்கு சொந்தக்காரர் நான்காம் பாவத்தில் அமர்ந்த சனி ஏற்கனவே வாங்கிய கார்களை மீண்டும் நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். ஏற்கனவே வாங்கிய மனையில் வீடு கட்டி குடி பெயர எல்லாம் இதுபோன்ற சிறப்பான பலன்கள் உங்களுக்கு நடக்கப் போகிறது. உடல் உபாதைகள் என்றால் கழுத்து தலை மார்பு அடி வயிறு முழங்கால் போன்றவற்றில் சிறு சிறு உடல் உபாதைகள் வந்து செல்லலாம். நான்காம் இடத்தில் இருக்கும் சனி பகவான் உங்களை இருக்கும் இடத்திலிருந்து வேறு நாடு, வேறு தேசம் என்று வேலை நிமித்தமாக கொண்டு செல்ல நேரிடும். குறிப்பாக நீண்ட காலமாக அயல்நாடு செல்ல வேண்டும் என்று இருக்கும் உங்களுக்கு நான்காம் இடத்தில் இருக்கும் சனி பகவான் வெளிநாட்டிற்கு உங்களை நகர்த்தி செல்லப் போகிறார். நான்காம் இடத்தில் இருக்கும் சனி பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலகட்டத்தில் உங்களுக்கு மேன்மையான பலன்களை நடைபெறப் போகிறது.
ராசி அதிபதியின் செவ்வாயின் நட்சத்திரத்தில் சனி பிரவேசிக்கும் போது கேட்ட இடத்தில் மிகப் பெரிய தொகை கடனாக கிடைக்கும். கைக்கு வரவேண்டிய பணம் வந்து மிகப்பெரிய கடன் தொகை அடக்க போகிறீர்கள். வீடு அடமானத்தில் இருந்தால் அந்த வீட்டை மீட்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரப்போகிறது. எத்தனையோ இடங்களை பார்த்து விட்டேன். சரியான வீடு அமையவில்லை என்று வருத்தத்தோடு காத்திருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே வீடு மனை வாங்கி பத்திரப்பதிவு செய்து உங்களுக்கு அந்த நிலத்தையும் அல்லது வீட்டையும் சொந்தமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் போகிறது. ஆனால் அப்படி சொந்தமாக்கி கொள்ளுகின்ற வீட்டையும் அல்லது நிலத்தையோ சரி பார்க்காமல் பத்திரப்பதிவு செய்யக்கூடாது.
கும்ப ராசி :
பாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 20ஆம் தேதி கும்ப ராசியில் தான் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார் அப்படி என்றால் உங்களுக்கு ஜென்ம சனி ஆரம்பமாகியுள்ளது. எதிலும் சற்று மந்தமான தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் ஒரு வேலையை செய்யப் போனால் அதை செய்து முடிப்பதற்கு சற்று காலதாமதம் ஏற்படலாம். அப்படி காலதாமதமாக முடிக்கும் வேலைகளை மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் .அப்படி மேல் அதிகாரிகள் உங்கள் வேலைகள் குறித்து சற்று உங்களை தாழ்வாக நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே அது போன்று சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஜென்ம சனி உடல் ரீதியாகவே சில உபாதைகளை கொண்டு வருவார் குறிப்பாக தலைவலி, மந்தத்தன்மை, வேலையில் சோம்பேறித்தனம் போன்றவற்றை உங்களுக்கு ஏற்படுத்தி மற்றவர்களிடத்தில் அவர் கெட்ட பெயரை வாங்க வைப்பார். இருப்பினும் கவலை வேண்டாம் கும்ப ராசிக்கு அதிபதி சனிபகவான் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்வதால் எதிலும் வெற்றியைத் தான் தருவாரே தவிர மிகப் பெரிய தோல்விகளில் உங்களை மாற்ற விடமாட்டார் என்பதை நிதர்சனமான உண்மை.