மேலும் அறிய

Sani Peyarchi 2023: கும்ப ராசிக்காரர்களே எச்சரிக்கை.. இதை கண்டிப்பா செய்யாதீங்க.. சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி...?

Sani Peyarchi 2023 to 2025 Kumbam: வாழ்க்கை துணைவரிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நன்கு பகுத்தறிந்து முடிவு எடுப்பது நல்லது. இன்னல்களை எதிர்கொல்லும் மனோதிடம் உண்டாகும்.

வரும் சுபகிருது ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை 3ஆம் தேதி அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். அதே போல் 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

சனிப்பெயர்ச்சி:

சூரிய பகவானின் புத்திரரான சனி பகவான் நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், தீய செயல்களுக்கு ஏற்றார் போல் நன்மை தீமைகளை வழங்கக்கூடியவர். சனியானவர் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச்செயல்களை இனி வருகின்ற இரண்டரை ஆண்டுகள் அளிக்கவுள்ளார்.

சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான ஜென்ம ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

இந்தச் சூழலில் காரியமே கண்ணாகக் கொண்டு செயல்படும் கும்ப ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களைக் காணலாம்.

கும்ப ராசி அன்பர்களே...!

கும்ப ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் ஜென்ம ராசி ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார்.

பலன்கள் 

சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதினால் மனதில் தன்னம்பிக்கை மேம்படும். செய்கின்ற முயற்சிகளில் உழைப்பும், பொறுப்புகளும் அதிகரிக்கும். புதிய பயணங்களின் மூலம் அனுபவமும், புதுவிதமான கண்ணோட்டங்களும் உண்டாகும்.

மனதளவில் இருந்துவந்த சில குழப்பங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் அவச்சொற்கள் ஏற்பட்டு நீங்கும். இழுபறியாக இருந்துவந்த சொத்து விற்பனை தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். திருமணத்திற்கு வரன் தேடுவோர் பொறுமையுடன் செயல்படவும்.

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதரவானவர்களின் சுயரூபத்தினை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்களும், தடைகளுக்கு பின்பே எதிர்பார்ப்புகளும் நிறைவேறும். கடன் சார்ந்த தொல்லைகள் நீங்கும்.

சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதினால் புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். அரசு தொடர்பான சில உதவிகளை மறைமுகமாக கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட தூரப் பயணங்களால் நன்மை உண்டாகும்.

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தர்ம காரியங்களை செய்வீர்கள். பலதரப்பட்ட அனுபவங்களின் மூலம் மனதளவில் பக்குவம் உண்டாகும்.

சனி ராசியில் அமர்ந்திருப்பதினால் மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். மனதளவில் உணர்ச்சி போராட்டம் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தை விட்டு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமின்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.

எதிலும் கடினமாக உழைத்து திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகளை மறைமுகமாக கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிள்ளைகள் வழியில் சுபகாரியம் கைகூடும். குடும்பத்தில் புதிய உறவுகள் மலரும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.

பெண்களுக்கு வாழ்க்கை துணைவரிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நன்கு பகுத்தறிந்து முடிவு எடுப்பது நல்லது. எதிலும் சுதந்திரமாக சிந்தித்து செயல்படுவீர்கள். இன்னல்களை எதிர்கொல்லும் மனோதிடம் உண்டாகும். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள்.

மாணவர்களின் அடிப்படை கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படவும்.

பொருளாதாரம்

வருமானம் சீராக இருக்கும். உபரி வருமானத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். சேமிப்பில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். வரவுக்காக முதலீடுகளை தவறவிட வேண்டாம். நீண்ட கால வைப்புகளால் ஆதாயம் அதிகரிக்கும். பங்கு சந்தை நிலவரங்களை அறிந்து விவேகத்துடன் செயல்படவும். குறுகிய கால லாபத்தில் எதிர்பார்ப்பதை குறைத்து கொள்ளவும்.

உடல் ஆரோக்கியம் 

அளவுக்கதிகமான கோபம் மற்றும் மன அழுத்தத்தின் மூலம் உடல்நிலையில் பாதிப்புகள் தோன்றக்கூடும். உடலில் ஒருவிதமான சோம்பல் அதிகரிக்கும். குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் குறையும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை எடுத்து கொள்ளவும். உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகளால் சற்று அவதிகள் ஏற்படும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். மேலும் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தந்தை வழியில் சில அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

கவனம்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் வரைமுறைக்குள் பழக்கம் கொள்ளவும். மேலும் வருவாய் தொடர்பான ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நபர்களின் தன்மைகளை அறிந்து நட்பு கொள்ளவும். மறதி தொடர்பான சில பிரச்சனைகளின் மூலம் அவதிப்பட நேரிடலாம். கெளரவ பொறுப்புகளில் காலதாமதம் ஏற்படும்.

வழிபாடு

வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து வர மேன்மை உண்டாகும். அருகம்புல்லால் சித்தி கணபதியை அர்ச்சனை செய்து வழிபட நன்மைகள் நடைபெறும்.

பொதுப்பலன்களான இவற்றில் திசாபுத்திக்கு ஏற்ப மாற்றம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Exam 2025: +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து...
+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து...
Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: அடுத்தடுத்து விருதுகளை அள்ளிய டூன் 2.. ஆஸ்கர் விருதுகள் நேரலை
Oscars 2025 LIVE: அடுத்தடுத்து விருதுகளை அள்ளிய டூன் 2.. ஆஸ்கர் விருதுகள் நேரலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Exam 2025: +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து...
+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து...
Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: அடுத்தடுத்து விருதுகளை அள்ளிய டூன் 2.. ஆஸ்கர் விருதுகள் நேரலை
Oscars 2025 LIVE: அடுத்தடுத்து விருதுகளை அள்ளிய டூன் 2.. ஆஸ்கர் விருதுகள் நேரலை
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
Embed widget