மேலும் அறிய

Sani Peyarchi 2023: தனுசு ராசிக்காரர்களே...! இனி உங்களுக்கான நேரம் ஆரம்பமா..? உங்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இதுதான்..

Sani Peyarchi 2023 to 2026 Dhanusu: இழுபறியான காரியங்கள் சாதகமாக முடிவடையும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும்.

வரும் சுபகிருது ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை 3ஆம் தேதி அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். அதே போல் 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

சனிப்பெயர்ச்சி:

சூரிய பகவானின் புத்திரரான சனி பகவான் நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், தீய செயல்களுக்கு ஏற்றார் போல் நன்மை தீமைகளை வழங்கக்கூடியவர். சனியானவர் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச்செயல்களை இனி வருகின்ற இரண்டரை ஆண்டுகள் அளிக்கவுள்ளார்.

சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான ஜென்ம ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

பொதுநலனுடனும் அனைவரிடமும் அனுசரித்தும் செல்லக்கூடிய தனுசு ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களைப் பார்க்கலாம்!

தனுசு ராசி அன்பர்களே...!

தனுசு ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் மூன்றாம் இடமான சகாய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார்.

பலன்கள்

சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிலும் பற்று இல்லாமல் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் சுப செய்திகளும் மகிழ்ச்சியான சூழ்நிலைகளும் நன்மைகளும் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் குறையும். வாகனம் மாற்றுவது தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும்.

சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதினால் அரசு தொடர்புகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட தூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எண்ணிய முடிவுகள் காலதாமதமாகி கிடைக்கும். தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்பான வர்த்தகத்தில் அரசு விதிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படவும்.

புத்துணர்ச்சி :

சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான போக ஸ்தானத்தை பார்ப்பதினால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் எதிர்பார்த்த சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடிவடையும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும்.

சனி ராசிக்கு மூன்றாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை வெற்றி கொள்வீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிரிகளை வெற்றி கொள்வதற்கான புதிய வியூகங்கள் கைகொடுக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

தன்னம்பிக்கை, மனப்பக்குவம்:

உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உங்களை பற்றிய சில வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், மனப்பக்குவமும் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த சில திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். 

செல்வச்சேர்க்கை சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதலும், உங்களைப் பற்றிய பலம் மற்றும் பலவீனங்களையும் புரிந்து கொள்வீர்கள்.

மாணவர்களுக்கு கல்வி நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். வளர்ப்பு பிராணிகளிடம் கவனத்துடன் இருக்க வேண்டும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு தொடர்பான கல்வி சார்ந்த முயற்சிகளில் சிறு தடைகளும்.

பொருளாதாரம்

தடைபட்ட தனவரவு கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொன், பொருட்களின் மீதான ஆர்வம் மேம்படும். கிடைப்பதில் பேராசை இன்றி செயல்படவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் இன்னல்கள் குறையும். செலவுகளை குறைத்து சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சிறு சிறு உபாதைகள் குறையும். காது, மூக்கு, தொண்டை பகுதியில் சில பிரச்சனைகள் ஏற்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனதளவில் உற்சாகமான சிந்தனைகளும், சூழ்நிலைகளும் உண்டாகும். இதயம் மற்றும் செரிமான பிரச்சனைகள் குறையும். 

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் மனை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். மேலும் மூத்த உடன்பிறப்புகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதை உறுத்திக்கொண்டு இருந்த கவலைகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும்.

கவனம்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் தோன்றி மறையும். மேலும் நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்வது நல்லது. சிந்தனைகளில் சோர்வுமும், செயல்பாடுகளில் ஒருவிதமான கட்டுப்பாடும் ஏற்படும். அரசு பணிகளில் நிதானத்துடன் செயல்படவும்.

வழிபாடு

குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் மனதில் நினைத்த காரியம் ஈடேறும். புதுக்கோட்டை, மலைகோயிலில் அமைந்துள்ள திருவருள் காளீஸ்வரர் மற்றும் சுப்பிரமணிய சுவாமியை வழிபட அதிகாரிகளின் ஒத்துழைப்புமும், மனதில் தெளிவும் ஏற்படும்.

பொதுப்பலன்களான இவற்றில் திசாபுத்திக்கு ஏற்ப மாற்றம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2 Trailer:
Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
Breaking News LIVE: நன்னிலம் நில உடைமைத் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு
Breaking News LIVE: நன்னிலம் நில உடைமைத் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2 Trailer:
Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
Breaking News LIVE: நன்னிலம் நில உடைமைத் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு
Breaking News LIVE: நன்னிலம் நில உடைமைத் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு
"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
Embed widget