S Name Astrology: உங்கள் பெயர் S எழுத்திலா தொடங்குகிறது? இத்தனை திறமைக்காரரா நீங்கள்!?
ஆங்கில எழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு சக்தி உண்டு . பொதுவாகவே வார்த்தைகளுக்கு மகாசக்தி உண்டு என்று அனைத்து வேதங்களும் கூறுகிறது .
மந்திரங்கள் சொல்லி தவம் இருக்கும் போது தெய்வங்களே மகிழ்ந்து வரங்களை அள்ளிக் கொடுக்கும் என்று புராண கதைகள் கூறுகின்றன. கிறிஸ்தவர்களின் புனித நூலாகிய பைபிளில் கூட ஆதியிலே வார்த்தை இருந்தது என்று வார்த்தையை மையப்படுத்தி பிரபஞ்சம் உருவானதாக கூறப்படுகிறது. ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது அந்த வார்த்தை தான் தேவனாக இருந்தது என்று கூறுகிறது புனித நூலான பைபிள்.
இப்படி வார்த்தை எழுத்துக்களில் ஏற்படும் அதிர்வலையின் காரணமாக நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டினர் சித்தர்கள் என்றும் பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்தர்கள் வைத்தியத்திற்காக செடிகளை பிடிக்கும்போது அதற்கு உரிய மந்திரத்தை கூறி அந்த செடிகளின் வேர்களை பிடுங்குவார்கள் என்று வைத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன . இப்படி எல்லா வேதங்களும் நீங்கள் எழுத்துக்களின் சக்தியை பற்றிய குறிப்பிடுவதாக அது ஆங்கில எழுத்தாக இருந்தாலும் சரி, தமிழ் எழுத்தாக இருந்தாலும் சரி, அந்த ஒலிக்கு என்று மகாசக்தி உள்ளதாக நான் நம்புகிறேன்.
பிரபஞ்சத்தை ஆளும் " S " :
" S " என்ற எழுத்திலிருந்து புறப்படும் ஒலி ஆனது பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்களின் சத்தத்துடன் ஒத்து இருப்பதாக அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு விஞ்ஞானியின் கூறுகின்றனர். அதை " ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் " என்ற சத்தம் எழுப்பப்படுவதால் கிரகங்களின் உள்ள சத்தமும் மனிதர்களுக்கு எஸ் என்ற பெயரில் வைக்கும் அந்த மந்திர ஒலியும் பிரபஞ்சத்தில் அதிர்வலைகளை உருவாக்குவதாக கூறுகின்றன ஆய்வாளர்கள். குறிப்பாக எஸ் என்ற எழுத்தில் வரும் ஒளி குரு கிரகத்துடன் அதிகம் தொடர்பு பெற்றவையாக பார்க்கப்படுகிறது. குரு நவகிரகங்களில் பெரிய சுப கிரகம் . எல்லா கிரகத்திற்கும் இருக்கும் தோஷத்தை குரு பகவான் பார்வையாலேயே அதை நிவர்த்தி செய்வார் .
" S " காண குண நலன்கள் :
அடுத்தவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர். எந்த ஒரு காரியத்தை கற்றுக் கொண்டாலும் அந்த காரியத்தில் புலமைப்போட்டு அதிலிருந்து கற்றுக் கொள்ளும் பாவங்களை வைத்து அடுத்தவர்களுக்கு உருவாக வழிகாட்டியாக விளங்குபவர். 'கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்ற வார்த்தைக்கு ஏற்ப கற்றவற்றை மனதில் வைத்து அதை பிறருக்கும் கற்பிக்கும் எண்ணம் உடையவர்கள். சில சமயங்களில் வாழ்க்கையில் முன்னேறும் போது அல்லது சறுக்கும்போது பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வாழ்க்கை நிலைப்பாட்டை சமமாக பார்க்கவர்கள்.
"S" என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்கள் தலைமை பதவிக்கு சொந்தக்காரர்கள் . வாழ்க்கையில் அடிப்படையாக உண்மையில் அவர்களின் திறமையை வைத்து தலைமை பதவியை அடைவார்கள் . ஒரு காரியத்தை எப்படி செய்ய வேண்டும்? எப்படி செய்தால் சிறப்பாக இருக்கும்? என்பன போன்ற பல விஷயங்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். எடுத்துக்காட்டு ஒரு விழா நடக்கிறது என்றால் அந்த விழா எப்படி நடக்க வேண்டும்? எப்படி முடிய வேண்டும்? என்பதை மிகத் துல்லியமாக ஆறுகளை செய்து அந்த விழாவை வெற்றி விழாவாக மாற்றக் கூடியவர்கள்.
குடும்பத்தில் இவர்கள் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்வார்கள் . குடும்ப பொறுப்புகளை கவனமாக கையாள்வார்கள் . மனைவிக்கு என்ன வேண்டும்? பிள்ளைகளுக்கு என்ன வேண்டும்? கணவனுக்கு என்ன வேண்டும்? என்று பார்த்து பார்த்து குடும்பத்தை கட்டி எழுப்புவார்கள். சமுதாயத்துக்கு மிகவும் முக்கியமான நபராக இருப்பார்கள் . சமூக அக்கறையுடன் செயல்படுபவர்கள் . குறிப்பாக தனக்கு நேர்ந்தால் தானே பிரச்சனை அடுத்தவர்களுக்கு நேர்ந்தால் என்ன என்று விட்டு விடாமல் அடுத்தவர்களின் பிரச்சினைகளையும் தன் பிரச்சனையாய் பாவித்து அதை நீங்களே முன் நின்று தீர்த்து வைப்பீர்கள். பணம் இல்லாதவர்க்கு உதவுவீர்கள் . உங்களிடம் பணம் இல்லை என்றாலும் உங்களின் மனதை கொடுத்து அவர்களை ஆறுதல் படுத்துவீர்கள் .
" S "என்றால் சாதனை !!!
சாதனையாளர்கள் பட்டியலில் எடுத்துப் பார்த்தால் அதில் எஸ் என்ற எழுத்தில் தொடங்கும் உங்கள் பெயர் தான் முதலில் வரும் . பெரிய பெரிய அறிஞர்கள் எழுத்தாளர்கள் மதிப்பிற்குரியவர்களே ஆங்கிலேயர்கள் "Sir" என்ற பட்டம் வழங்கி கௌரவிப்பார்கள். அதேபோல் புனிதர்களை "Saint" என்று அழைப்பார்கள். இப்படி சாதனையாளர்கள், புனிதர்களுக்கு எஸ் என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் Sir அல்லது Saint பட்டங்களை வழங்கி கௌரவித்தார்கள் ஆங்கிலேயர்கள் . இந்துக்களில் முழு முதல் கடவுளான சிவன் என்ற பெயரும் எஸ் என்ற எழுத்தில் தான் ஆரம்பிக்கிறது . இப்படி இந்த எழுத்துக்கு சொந்தக்காரர்கள் மிகப்பெரிய சாதனையாளர்களாகவும் வரலாற்றில் தங்களுக்கென்று தனியிடம் வைத்திருப்பவர்கள் ஆகவும் இருக்கிறார்கள் . பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் பெயர் ஷாருக்கான் . அதுவும் எஸ் தான் . கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாரின் பெயர் சச்சின் . அதுவும் எஸ் தான் .
உங்கள் எழுத்தின் அதிர்ஷ்டம் என்ன :
"S" என்ற எழுத்தில் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் விளங்குகிறது . மஞ்சள் நிற ஆடையை முக்கியமான தருணங்களில் நீங்கள் பயன்படுத்தலாம் . வீட்டிற்கு பூசுகின்ற வண்ணங்களில் மஞ்சள் நிறத்தை தாராளமாக நீங்கள் பயன்படுத்தலாம் . எண்களில் மூன்றாம் எண் உங்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் . வாகனத்தில் பதிவு எண், உங்களின் செல்போன் எண் ஆகியவைகளை மூன்றாம் என்னை பயன்படுத்தலாம் . உங்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான கடவுளாக நவகிரகங்களில் குரு பகவான் பார்க்கப்படுகிறார் . இந்த பெயரை வைத்திருக்கும் நீங்கள் குரு பகவானை மனதார வணங்கினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கைகூடிவரும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.