Rasipalan Today, June 8 : விருச்சிகத்திற்கு புத்துணர்ச்சி.. மீனத்திற்கு செலவு.. உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasipalan Today, June 8 : இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 8.06.2022
நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மதியம் 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
காலை 12 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை
குளிகை :
காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, பாசம் நிறைந்த நாளாக அமையும். உங்களுடைய பாசத்தால் நீங்கள் நினைத்த காரியத்தை சாதித்து கொள்வீர்கள். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. இன்று அதிகரிக்கும் செலவினங்கள் காணப்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, நீங்கள் சாந்தமாக இருந்து காரியத்தை சாதித்துக்கொள்வீர்கள். உங்களுடைய அமைதிக்கான பரிசு உங்களுடைய வெற்றி. எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் நிதானமாக செய்து முடிப்பீர்கள். பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே போவதைக் காண்பீர்கள். பணியில் தவறுகள் நேரலாம். பல தடைகளுக்குப் பின் உங்களுக்கு திருப்தி கிடைக்கும்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களின் வருகையால் நீங்கள் சந்தோசமாக இருப்பீர்கள். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, உங்களுடைய குடும்பத்தில் விருத்தி உண்டாகும். உங்களுடைய குடும்பத்தில் சந்தோஷமான நல்ல விஷயல்கள் நாடாகும். உங்களுக்கு பண விருத்தி உண்டாகும். உங்கள் கடின முயற்சி மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து வியாபாரத்தின் போக்கினை மாற்றி அமைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். அலைச்சல்களால் சோர்வு அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். மனதில் ஆடம்பர எண்ணங்கள் அதிகரிக்கும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, நீங்கள் நல்ல உழைப்பாளிகள். உங்களுடைய உழைப்புக்கு எப்பொழுதுமே வெற்றி உண்டாகும். நீங்கள் கடுமையாக உழைத்து உங்களுடைய காரியத்தை சாதித்து கொள்வீர்கள். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு சிறு சிறு சிக்கல்கள் தரக்கூடிய நாளாக அமையும். நீங்கள் தொடங்கும் காரியத்தில் தடங்கல்கள் வரும். உங்களுக்கு ஏற்படும் சிக்கலை சுலபமாக நீங்கள் தீர்த்து வெற்றி அடைவீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, தொழிற்கல்வி சார்ந்த பணிகளில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்களும், அதற்குண்டான உதவிகளும் கிடைக்கும். காப்பீடு தொடர்பான தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதிலிருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, உங்களுக்கு செலவே உண்டாகும் நாளைய அமைந்துள்ளது. உங்களுக்கு சில எதிர்ப்பாரத செலவுகள் உண்டாகும். செலவுகளை சமாளிக்க அதிகமா உழைக்க வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைந்து புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். வாழ்க்கை துணைவரின் உறவினர்களின் மூலம் நன்மை உண்டாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்