![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rasi palan Today : கடகத்துக்கு கவலை...! துலாமுக்கு நிம்மதி..! இந்த நாள் உங்களுக்கு அப்போ எப்படி...?
Rasi palan Today Aug 7: இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
![Rasi palan Today : கடகத்துக்கு கவலை...! துலாமுக்கு நிம்மதி..! இந்த நாள் உங்களுக்கு அப்போ எப்படி...? Rasi palan Today Tamil 7 august 2022 Daily Horoscope Predictions 12 zodiac signs astrology Nalla Neram Panchangam Rasi palan Today : கடகத்துக்கு கவலை...! துலாமுக்கு நிம்மதி..! இந்த நாள் உங்களுக்கு அப்போ எப்படி...?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/06/ccc25ce13e124a4b0d3fec0aa70d42e01659796198_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாள்: 07.08.2022
நல்ல நேரம் :
காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை
இராகு :
மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை
குளிகை :
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சூலம் – மேற்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நிறைந்த நாள் ஆகும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் தொலைபேசி வழி உண்டாகும். பெற்றோர்கள் வழி நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல்கள் தீரும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு தாமதங்களால் அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. சிவபெருமானை வணங்கி சிறப்பு காணலாம்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு மன நிறைவு கிட்டும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் உண்டாகும். குடும்பத்தில் புது உற்சாகம் பிறக்கும். வழக்குகள் சாதகமாக முடிவுக்கு வரும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு சற்று குழப்பம் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை தீர ஆலய வழிபாடு அவசியம். நெடுந்தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடக்கூடாது.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மீக பணிகளால் நன்மைகள் பூர்வ ஜென்ம பாவங்கள் தீரும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் அமைதியுடன் செயல்பட வேண்டும். அடுத்தவர் கூறுவதை கேட்டு உங்களை நீங்கள் குழப்பிக் கொள்ளக்கூடாது. தெளிவான சிந்தனையுடன் இருக்க காசி விஸ்வநாதரை வழிபட வேண்டும். பொறுமையுடன் இருந்தால் நிச்சயம் கைமேல் பலனை அனுபவிக்கலாம்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள். நீண்டநாள் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். வாகன யோகம் உண்டாகும். தனவரவு., பணவரவு உண்டாகும். வீட்டு மனை பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வரும். பிரிந்து சென்ற சொந்தம் மீண்டும் வந்து சேர்வார்கள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வெற்றி கிட்டும். புது சந்தோஷம் உண்டாகும். வாழ்வில் மாற்றம் ஏற்படும். நம்பிக்கை அதிகரிக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் தானாகவே விலகும். புதிய நபர்களின் சந்திப்பு கிட்டும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டில் புதுவரவு உண்டாகும். காதலர்கள் பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வரும். தொழிலில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். மருத்துவ செலவுகள் குறையும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். மறக்க முடியாத சந்தோஷம் ஏற்படும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் சாமர்த்தியமான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். பிரச்சினைகள் குறையும். தைரியமான முடிவுகளுக்காக பாராட்டப்படுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். அடுத்தவர் கடனுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடாது. காதல் விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்களுடன் வார்த்தைகளில் கவனம் தேவை. பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இன்று மிகவும் அமைதியாக செயல்பட வேண்டும். நீண்ட நாள் அலைச்சலில் இருப்பதால் இன்று ஓய்வு கிட்டும். குடும்ப விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். படிப்பில் மாணவர்கள் கவனம் செலுத்துவார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)