Rasipalan: கடகத்துக்கு நிதானம்... சிம்மத்துக்கு வரவு.... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today April 06: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 06.04.2023 - வியாழன்கிழமை
நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
இராகு:
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
மேஷம்
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். அரசு பணிகளில் உள்ள இழுபறியான சூழல் மறையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷபம்
செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உதவிகள் கிடைக்கும் நாள்.
மிதுனம்
உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் உண்டாகும். உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பொருளாதாரம் ஏற்ற, இறக்கமாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். உறவினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பக்தி நிறைந்த நாள்.
கடகம்
பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த இன்னல்கள் விலகும். புதிய முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிதானம் வேண்டிய நாள்.
சிம்மம்
மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் பிறக்கும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய சிந்தனைகள் மேம்படும். தாயாரின் உடல் நிலை சீராகும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். வரவுகள் நிறைந்த நாள்.
கன்னி
முன்கோபத்தால் தர்மசங்கடமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். பொது இடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
துலாம்
விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பிறமொழி சார்ந்த மக்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் மேம்படும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். எதிர்பாராத திடீர் பயணங்களின் மூலம் நெருக்கடிகள் தோன்றி மறையும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். அனுபவப் பூர்வமான பேச்சுக்களின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பழைய பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.
தனுசு
நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயமான பலன்கள் கிடைக்கும். செலவுகள் நிறைந்த நாள்.
மகரம்
புதிய விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். விவசாய பணிகளில் கவனம் வேண்டும். பயணங்களால் புத்துணர்ச்சியான சூழல் அமையும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.
கும்பம்
வியாபார பணிகளில் எண்ணிய பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். அவ்வப்போது மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். புதிய மின்னணு மின்சார சாதனங்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். விவேகம் வேண்டிய நாள்.
மீனம்
உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குழந்தைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். புதிய வியாபாரம் சார்ந்த அறிமுகம் உண்டாகும். நிறைவான நாள்.