மேலும் அறிய

Rasipalan Today Dec 31: தனுசுக்கு சோர்வு... துலாமுக்கு திருப்தி... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை

மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

மற்றவர்கள் மீதான கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். வாக்குவன்மையின் மூலம் பொருளாதார சிக்கல்கள் குறையும். தந்தைவழி உறவுகளிடம் நிதானம் வேண்டும். சகோதரர் வகையில் ஆதரவான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். தனம் நிறைந்த நாள். 

ரிஷபம்

தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

மிதுனம்

தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் தேவைகளை  அறிந்து நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். கால்நடை சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் நிதானம் வேண்டும். செல்வச்சேர்க்கை உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

கடகம்

ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வங்கி தொடர்பான பணிகளில் உதவி கிடைக்கும். அசதி குறையும் நாள். 

சிம்மம்

பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவுகளை எடுக்கவும். எதிர்பாராத சிலரது சந்திப்புகளால் மனதளவில் குழப்பம் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் சோர்வு உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.

கன்னி

வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணிகளில் சாதகமான சூழல் அமையும். குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான  காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திருப்தி நிறைந்த நாள்.

விருச்சிகம்

புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். அன்றாட செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். முன்கோபத்தால் சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்படலாம். நிலுவையில் இருந்துவந்த பணிகளை தொடங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். தகவல் தொடர்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

தனுசு

பணிபுரியும் இடத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது நிமிர்த்தமான சிந்தனைகள் பிறக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல்நிலையில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். சிந்தனைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். சோர்வு நிறைந்த நாள்.

மகரம்

வியாபாரம் சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் முயற்சிகள் ஈடேறும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.

கும்பம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.

மீனம்

வியாபாரத்தில் கூட்டாளிகளை பற்றிய புரிதல் மேம்படும். கடன் பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தொலைந்துபோன  சில பொருட்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத  பயணங்களின் மூலம் புதிய அனுபவம் மேம்படும். நிம்மதி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
Embed widget