Rasipalan Today, May 30: ரிஷபத்துக்கு லாபம்... தனுசுக்கு உயர்வு.. இன்றைய ராசி பலன்கள் இங்கே!
Rasi Palan Today, May 30: இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 30.05.2022
நல்ல நேரம் :
காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் மதியம் 8.30 மணி வரை
இராகு :
காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
குளிகை :
மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
எமகண்டம் :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
சூலம் – கிழக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, கடின முயற்சிகளின் மூலம் வெற்றி கிடைக்கும். உங்கள் செயல்களில் வளர்ச்சி வெற விரும்பினால் மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்ற வேண்டும். மனச்சோர்வு ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகலாம். உங்கள் கீழ் பணிபுரிவோரிடம் நல்ல முறையில் பழகுங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, தொழிலில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பொறுமையுடன் இருக்க வேண்டும். உங்கள் நேர்மை உங்களுக்கு வெகுமதியை பெற்றுத் தரும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பல்வலி, கண்கள் மற்றும் கால்களில் வலி ஏற்படலாம்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, ஒப்புக்கொண்ட பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற பதட்டம் காணப்படும். சகபணியாளர்களிடம் நல்லுறவைப் பேணுவது பயனளிக்கும். நீங்கள் விரைந்து செயலாற்ற வேண்டும்.உங்களிடம்இருக்கும் புத்திசாலித்தனத்தின் மூலம் எதை செய்யலாம் எதை செய்யக் கூடாது என்று உணர முடியும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இன்று பணத்தை சேமிக்கவும் நிதிநிலையை மேம்படுத்தவும் உகந்த நாள். பணியின் மூலம் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். பணிச் சூழல் இன்று சிறப்பாக காணப்படும். நீங்கள் ஆற்றும் பணிக்காக நற்பெயரை எடுப்பீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, மேலதிகாரிகளின்; ஆதரவு கிடைக்கும். சகபணியாளர்கள் உங்களை பாராட்டுவார்கள்.நிதிநிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் பணவரவை மேம்மபடுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இன்று மகிழ்ச்சியாக இருப்பதன் காரணமாக ஆரோக்கியம் சிறந்த முறையில் காணப்படும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, பணி வளர்ச்சி மந்தமாக இருக்கும். மேலதிகாரியிடம் உங்கள் மதிப்பை நிரூபிக்க கடினமாக உழைக்க வேண்டும். இன்று ஓய்வின்றி வேலையில் மும்மரமாக இருப்பீர்கள். நிதிநிலையில் முன்னேற்றம் குறைந்து காணப்படும். இன்று பணம் செலவு செய்வதை தடுப்பது நல்லது.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, வேலையில் பதட்டம் காணப்படும். உங்கள் கடமைகளை சரியான முறையில் செய்வதற்கு மிகவும் கவனமாக பணிகளைக் கையாள வேண்டும். நிதிநிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்காதீர்கள்.நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமெனில் பதட்டத்தை கைவிடுங்கள். தியானம் மேற்கொள்வதன் மூலம் சிறப்பாக உணர்வீர்கள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாள். ஒப்புக்கொண்ட பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற பதட்டம் காணப்படும். சகபணியாளர்களிடம் நல்லுறவைப் பேணுவது பயனளிக்கும். நிதிநிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். நிதிநிலையைப் பாதுகாக்க திட்டமிடல் அவசியம்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, சிறந்த நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பணியை எளிதாக முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.நிதி வளர்ச்சி நன்கு காணப்படும். ஆன்மீக காரியங்களுக்காக இன்று பணம் செலவு செய்வீர்கள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, மனஅழுத்தம் காரணமாக கவனக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு நிதிவளர்ச்சி இருக்காது. ஆரோக்கியம் சம்பந்தமான செலவுகள் காணப்படுகின்ளது.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, சேவை சார்ந்த ஈடுபாடு காரணமாக பணி மற்றும் பணியிடச் சூழுல் உங்களுக்கு சாதகமாக காணப்படும். பணியில் தவறுகள் நேராவண்ணம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செலவினங்கள் அதிகமாகக் காணப்படும். தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும். எதிர்காலத்திற்காக சிறிது சேமிக்கவும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, வேலையில் அதிக பொறுப்புகளை சுமக்க வேண்டியிருக்கும். உங்கள் வேலையில் இன்னும் கூடுதலாக ஈடுபட முயலுங்கள். உங்கள் ஆர்வத்தை அது மேம்படுத்தும். இன்று நிதிநிலைமை நன்றாக உள்ளது. பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்