Rasi Palan Today, June 3: தனுசுக்கு காதல் கைகூடும்...! கும்பத்துக்கு கடன் வசூலாகும்..! உங்களுக்கு இந்த நாள் எப்படி..?
Rasi Palan Today, June 3: இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 03.06.2022
நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம்
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
குளிகை :
காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
எமகண்டம் :
மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை
சூலம் – தெற்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு தேவையற்ற சிக்கல் ஏற்படும். இதனால், அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் கவனம் தேவை. வீண்வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. ஆலய வழிபாடு அமைதி தரும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன் தொகை வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவு அளிப்பார்கள். பெற்றோர்கள் வழியில் நன்மை வந்து சேரும். திருமண யோகம் உண்டாகும். காதலர்கள் இடையே அன்பு அதிகரிக்கும்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் மிகவும் அமைதியாக காணப்படுவீர்கள். தொழில் புரியும் இடங்களில் உங்கள் பணிவுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இந்த நாள் தேவையற்ற எதிர்பார்ப்புடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த கடன் தொகை, நற்செய்திகள் வருவதில் தடங்கல் ஏற்பட்டு இந்த நாள் ஏமாற்றத்தில் முடியலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை ஒத்திவைப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு அமோகமான நாளாக அமையும். கடன் வசூலாகும். பணவரவு, தனவரவு உண்டாகும். குடும்பத்தில் நீண்டநாட்களாக நீடித்து வந்த சிக்கல் தீரும். பெண்களின் உடல்நலக்குறைவுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். நன்மைகள் அதிகரிக்கும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு சுபச்செலவுகள் உண்டாகலாம். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். இடமாற்றம் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். உங்களது பொறுமையின் பலன் உங்களுக்கு கிட்டும். சிவபெருமான் வழிபாடு சிறப்பான நாளாக மாற்றும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இந்த நாள் யோகமான நாளாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடு நீங்கும். தொழில் போட்டி நீங்கி வியாபாரம் விருத்தியடையும். வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, வீண் கவலை மனதில் குடிகொள்ளும். அம்மன் வழிபாடு செய்து அமைதி காணலாம். அடுத்தவர் கடனுக்கு வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. வீண் விவாதங்களில் பங்கேற்பதை தவிர்ப்பதால் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். சுற்றத்தாரிடம் கூடுதல் கவனம் தேவை.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். விளையாட்டுத்துறையினருக்கு அமோகமான நாளாகும். பெற்றோர் வழியில் நற்செய்தி வந்ததடையும். காதல் கைகூடும். கூட்டுத்தொழிலில் நல்ல லாபம் கிட்டும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இந்த நாள் புதிய முயற்சியை மேற்கொள்வீர்கள். புதிய முயற்சி வெற்றியை அளிக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் நல்ல ஒத்துழைப்பு அளிப்பார்கள். தொழிலில் முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். வெற்றி பெற வேலவன் வழிபாடு கைகொடுக்கும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இந்த நாள் நன்மைகள் பல ஏற்படும். நீண்ட நாள் வசூலாகாத கடன் தொகை வசூலாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை. காதலர்கள் இடையே நிலவிய சிக்கல் தீரும். குடும்பத்தில் நிலவி வந்த மனக்கசப்பு அகலும். எம்பெருமான் வழிபாடு நிம்மதி தரும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, கடந்த கால கசப்பான நிகழ்வுகளால் தேவையற்ற பயம் உண்டாகும். அம்மனை வழிபட்டு மன சாந்தி அடையுங்கள். கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பெரியவர்களின் உடல்நலனில் அக்கறை தேவை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்