RasiPalan Today March 29: ரிஷபத்திற்கு அலைச்சல்.. தனுசுக்கு மதிப்பு.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today March 29: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 29.03.2023 - புதன் கிழமை
நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
மாலை 10.30 மணி முதல் மாலை 11.00 மணி வரை
குளிகை :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
இழுபறியான பாகப்பிரிவினைகள் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். மனதளவில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் அமையும்.
ரிஷபம்
எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் ஏற்படும். நெருக்கமான உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தனவரவிற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.
மிதுனம்
மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் விவேகத்துடன் இருக்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். சமூக பணிகளில் லாபம் உண்டாகும். கால்நடை மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும்.
கடகம்
உலகியல் வாழ்க்கையை பற்றி புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். மனதிற்கு விரும்பிய செயல்களை செய்வீர்கள். எதிர்பாலின மக்கள் சார்ந்த விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய உணவு உண்பதில் ஆர்வம் ஏற்படும்.
சிம்மம்
தனவரவில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். மறுமணம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த இழுபறிகள் மறையும். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். இணைய வர்த்தகத்தில் மேன்மை ஏற்படும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
கன்னி
செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். மனதில் எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். சுபகாரிய பணிகளை முன் நின்று செய்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஆதரவு மேம்படும்.
துலாம்
வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாற்றமான சில விஷயங்களின் மூலம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
விருச்சிகம்
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளால் மனதில் கோபம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் விட்டுக்கொடுத்து செல்லவும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும்.
தனுசு
உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
மகரம்
நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சமூக பணிகளில் ஆதரவு மேம்படும். உத்தியோக பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்
பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தந்தை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மேல்நிலை கல்வியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும்.
மீனம்
தாயாரின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். உறவினர்களிடத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும்.