Rasipalan 29 July, 2023: மேஷத்திற்கு சிந்தனை.. துலாமுக்கு புரிதல்.. இன்று உங்க ராசிக்கான பலன் என்ன?
RasiPalan Today July 29: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
RasiPalan Today July 29:
நாள்: 29.07.2023 - சனிக்கிழமை
நல்ல நேரம் :
காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை :
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
சூலம் - கிழக்கு
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் ஏற்பட்டு நீங்கும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. அலுவலக பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும்.
ரிஷபம்
தனவரவுகளால் புதிய ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பள்ளிப்பருவ நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். சுபகாரிய விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
மிதுனம்
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தூரத்து உறவினர்களின் வருகை ஏற்படும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ கருத்துகள் வெளிப்படும்.
கடகம்
திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
சிம்மம்
மற்றவர்களால் உங்களிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். செல்வச்சேர்க்கையை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும்.
கன்னி
வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளை கையாளுவீர்கள். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். மாமனார் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.
துலாம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். குடும்பத்தாரின் வழியில் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.
விருச்சிகம்
தனவரவில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றி புரிதல் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். நிதானமான சில காரியங்கள் உங்கள் மீது நன்மதிப்பை மேம்படுத்தும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வேள்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உணவு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும்.
மகரம்
அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம்
உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பிரபலமானவர்களால் ஆதாயம் உண்டாகும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள்.
மீனம்
மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். விவேகமான செயல்பாடுகள் மதிப்பை மேம்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.