மேலும் அறிய

Rasipalan Today Jan 29: கன்னிக்கு பக்தி... துலாமுக்கு நிம்மதி... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் மதியம் 7.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். எண்ணிய சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவுபெறும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.

ரிஷபம்

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பயணங்களில் சாதகமான சூழல் அமையும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். புதிய வேலையின் நிமிர்த்தமாக முயற்சிகள், அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான முடிவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.

மிதுனம்

மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார ரீதியான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

கடகம்

வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த சில எதிர்ப்புகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். தெளிவு நிறைந்த நாள்.

சிம்மம்

நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. மனதிற்குப் பிடித்தவாறு வீட்டில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். திட்டமிட்ட சில செயல்களில் உள்ள இழுபறியான சூழல் நீங்கும். சிக்கல்கள் குறையும் நாள்.

கன்னி

உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆவணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். பக்தி வேண்டிய நாள்.

துலாம்

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் பலவிதமான இலக்குகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.

விருச்சிகம்

உத்தியோகம் சார்ந்த பணிகளில் ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். பணிகளில் இருந்துவந்த அலைச்சல்கள் படிப்படியாகக் குறையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்ற வைப்பீர்கள். அமைதி நிறைந்த நாள்.

தனுசு

பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். இன்பம் நிறைந்த நாள்.

மகரம்

வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பணிகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வாசனை திரவியம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நலம் நிறைந்த நாள்.

கும்பம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் துரிதமும், விவேகமும் வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

மீனம்

பயணங்களின் போது பிறமொழி பேசும் மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். வாக்குவன்மையால் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் புதிய நபர்களின் அறிமுகத்தினால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
HBD MK Stalin: குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?
IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?
காத்திருந்த அமைச்சர்கள், நிர்வாகிகள்; அரசுப்பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் வாழ்த்துப்பெற்ற முதல்வர் ஸ்டாலின்!
காத்திருந்த அமைச்சர்கள், நிர்வாகிகள்; அரசுப்பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் வாழ்த்துப்பெற்ற முதல்வர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman Angry on Vijayalakshmi | PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!Kaliammal in ADMK: அதிமுகவில் காளியம்மாள்? EPS கொடுத்த அதிரடி OFFER.. விஜயபாஸ்கர் பக்கா ஸ்கெட்ச்Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
HBD MK Stalin: குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?
IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?
காத்திருந்த அமைச்சர்கள், நிர்வாகிகள்; அரசுப்பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் வாழ்த்துப்பெற்ற முதல்வர் ஸ்டாலின்!
காத்திருந்த அமைச்சர்கள், நிர்வாகிகள்; அரசுப்பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் வாழ்த்துப்பெற்ற முதல்வர் ஸ்டாலின்!
Gold Rate Today: 4 நாளில் 1000 ரூபாய் சரிவு.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்னும் குறைஞ்சா நல்லாருக்கும்
Gold Rate Today: 4 நாளில் 1000 ரூபாய் சரிவு.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்னும் குறைஞ்சா நல்லாருக்கும்
Zelensky Feels: பேசுறதெல்லாம் பேசிபுட்டு, இப்ப ஃபீல் பண்ணா என்னா அர்த்தம்.? ஜெலன்ஸ்கி கூறுவது என்ன.?
பேசுறதெல்லாம் பேசிபுட்டு, இப்ப ஃபீல் பண்ணா என்னா அர்த்தம்.? ஜெலன்ஸ்கி கூறுவது என்ன.?
TN Weather: சட்டென்று மாறுது வானிலை.. தமிழ்நாட்டில் தொடருதே மழை! கோடையில் குளுகுளு மூடில் மக்கள்!
TN Weather: சட்டென்று மாறுது வானிலை.. தமிழ்நாட்டில் தொடருதே மழை! கோடையில் குளுகுளு மூடில் மக்கள்!
Chennai Corporation: சென்னை மாநகராட்சியில் வந்த மாற்றம், புதிய மண்டலங்கள் சேர்ப்பு- எவ்வளவு? ஏன்?
Chennai Corporation: சென்னை மாநகராட்சியில் வந்த மாற்றம், புதிய மண்டலங்கள் சேர்ப்பு- எவ்வளவு? ஏன்?
Embed widget