மேலும் அறிய

Rasi Palan, Apr 29: கன்னிக்கு சாதகமான நாள்... மீனத்திற்கு பதட்டம்.. எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள்?

Rasi Palan Today, April 29: இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2022: இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள்?

நாள்: 29.04.2022

நல்ல நேரம் :

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 12.30 மணி முதல் 1.30 மணி வரை 

மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை

இராகு :

காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

குளிகை :

காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம் :

மதியம் 3.00 மணி முதல் 4.30 மணி வரை 

சூலம் –மேற்கு 

ராசி பலன்கள் 

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். நீங்கள் இதில் முழு ஆற்றலையும் செலுத்த வேண்டியிருக்கும். பொழுதுபோக்கிற்கென சிறிது நேரமே ஒதுக்க வேண்டியிருக்கும். நீங்கள் இன்று அமைதியாக இருக்கவேண்டும். உங்களின் அஜாக்கிரதை காரணமாக இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, இன்று நீங்கள் சௌகரியமாக உணர்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் நீங்கள் பலனடைவீர்கள். இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளரும். இன்று நிதியில் ஸ்திரத்தன்மை காணப்படும். உங்கள் சொத்து அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. முக்கிய முதலீடுகளில் பங்கு கொள்வதன் மூலம் லாபம் பெறலாம்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இன்று உங்கள் மனதில் தெளிவு காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக ஆற்றுவீர்கள். பொருத்தமான செயல்களை செய்து உங்கள் நிலையை மேம்படுத்துவீர்கள். இனிமையான வார்த்தைகள் உங்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும். பணியிடத்தில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு பதவி உயர்வு கிடைக்கும்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் அமைதியை உணர்வீர்கள். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு கவலை அளிக்கும். இரவில் தூக்கமின்மை காணப்படும். நீங்கள் சிறந்த பலனைக் காண மிகக் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் பணியில் வெற்றி பெற நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த அனுபவம் திருப்தி அளிக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இன்று அதிருப்தியான நிலை காணப்படும். அனுசரணையான போக்கு உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். சிறந்த பலன் காண உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் திட்டமிட வேண்டும்.சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். பணியில் கவனமாக இருப்பதன் மூலம் தவறுகள் நேராமல் தவிர்க்கலாம். தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் கவனமாக பணியாற்றவும்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாள். பல வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நாளின் பலன்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கும்.உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பேசுவீர்கள். இது உங்கள் துணையை மகிழ்விக்கும். இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.இன்று நிதிநிலைமை சீராக இருக்கும். பணத்தை நீங்கள் பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். மொத்ததில் உங்கள் செயல்திறனில் திருப்தி காணப்படும். நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாகவும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள போதுமானதாகவும் இருக்கும். உங்களால் சேமிப்பு நிலையை உயர்த்த இயலும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இன்று செயல்கள் சீராக நடக்க சாதகமாக இருக்காது. இன்று அதிக பொறுப்புகள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.இன்று உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. கூடுதல் பணிகள் காரணமாக திட்டமிட்டபடி பணிகளை செய்வது கடினமாக இருக்கும்.இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும். உங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படும். எனவே பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. நீங்கள் சமநிலை இழப்பீர்கள். நற்பலன்கள் காண எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் இன்று சிறந்த பலன் அளிக்காது.இன்று அதிக செலவுகள் செய்ய நேரலாம். இது உங்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும்.

மகரம் :

மகர ராசி நேயர்களே, இன்று சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய இலக்குகளை அடைய திட்டமிடலாம். நீங்கள் எதிர்பார்த்ததை விட இன்று அதிகம் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.பணியிடத்தில் அதிக வாய்ப்புகள் காணப்படும். நீங்கள் பணிகளை திறமையாகவும் விரைவாகவும் ஆற்றுவீர்கள். உங்கள் அணுகுமுறையில் உறுதி காணப்படும். உங்களின் சேமிப்பு ஆற்றல் சிறந்த முறையில் அதிகரிக்கும். லாபம் தரும் புதிய முதலீடுகளில் நீங்கள் பங்கு பெறலாம்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. அஜாக்கிரதை மற்றும் கவனமின்மை காரணமாக உங்களுக்கு வளர்ச்சி அளிக்கும் சில மதிப்பு மிக்க வாய்ப்புகளை இழப்பீர்கள்.பணியிடத்தில் வெற்றிகள் அதிக அளவில் காணப்படாது. இதனால் பணிகள் தேங்கிக் கிடைக்கும். என்றாலும் திட்டமிட்டு பணியாற்றினால் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்கலாம். இன்று வீணான செலவுகள் காணப்படும். உங்கள் செலவுகளை கட்டுபடுத்த இயலாது. சிக்கனம் கடைபிடிக்க வேண்டும்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. பதட்டமான சூழ்நிலை கவலை அளிக்கும். நீங்கள் சில தடைகளை சந்திப்பீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். சிறந்த வளர்ச்சி காண திட்டமிட்டு செயல்பட வேண்டும். மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் மேலதிகாரியுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அதிகப் பணிகளால் மகிழ்ச்சி குறையும். உங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இன்று நிதிக் கட்டுப்பாடு காணப்படும். இன்று கூடுதல் செலவுகள் செய்ய நேரும். அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக செலவுகள் அதிகாரிக்கும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget