Rasi Palan Today: மீனத்துக்கு கனிவு...ரிஷபத்துக்கு விரயம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!
RasiPalan Today February 27: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 27.02.2023 - திங்கள் கிழமை
நல்ல நேரம் :
காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை
இராகு :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
குளிகை :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
எமகண்டம் :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோக பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
ரிஷபம்
சிறு தூர பயணங்களால் மனதில் மாற்றங்கள் ஏற்படும். அவசரமின்றி எதிலும் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். பணி நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். விரயம் நிறைந்த நாள்.
மிதுனம்
பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தினரை பற்றிய கவலைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். திடீர் பயணங்களால் விரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் சுமாரான வரவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.
கடகம்
மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். வெளியூர் பயணங்களால் சாதகமான சூழல் அமையும். பணி நிமிர்த்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உதவிகள் நிறைந்த நாள்.
சிம்மம்
மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். திடீர் முடிவுகளால் சில மாற்றங்கள் ஏற்படும். சமூக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். ஆர்வம் நிறைந்த நாள்.
கன்னி
மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நன்மை உண்டாகும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
துலாம்
பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். வியாபாரம் நிமிர்த்தமான விஷயங்களில் விவேகம் வேண்டும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிக்கல்கள் நிறைந்த நாள்.
விருச்சிகம்
குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
தனுசு
மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தடைபட்ட பணிகளை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை விட சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.
மகரம்
குடும்பத்தில் ஒத்துழைப்பும், ஆதரவும் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சிந்தனைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நம்பிக்கை நிறைந்த நாள்.
கும்பம்
முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.
மீனம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார போட்டிகளை சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். கடினமான பணிகளை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். மனதளவில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். திறமைக்கு ஏற்ப மதிப்பு அதிகரிக்கும். கனிவு நிறைந்த நாள்.