Rasipalan 25, June 2023:ரிஷபத்துக்கு அமைதி... கும்பத்துக்கு மாற்றம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today June 25: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 25.06.2023 - ஞாயிற்றுக்கிழமை
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
நண்பகல் 1.30 மணி முதல் நண்பகல் 2.30 மணி வரை
இராகு:
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை:
நண்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம்:
நண்பகல் 12.00 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
கடன் சார்ந்த உதவி கிடைக்கும். அனுபவங்களின் மூலம் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் உள்ள நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். மற்றவர்கள் மீதான கருத்துகளில் கவனம் வேண்டும். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். பெருமை நிறைந்த நாள்.
ரிஷபம்
கடன்களை தீர்ப்பதற்கான உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
மிதுனம்
விருந்தினர்களின் வருகை உண்டாகும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். சமூகப் பணிகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். பாரம்பரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். உழைப்பு நிறைந்த நாள்.
கடகம்
மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். பேச்சுக்களின் மூலம் அனுகூலம் பிறக்கும். பிறமொழி மக்களால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். ஆக்கப்பூர்மான நாள்.
சிம்மம்
கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். அடிப்படை கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். அடமான பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
கன்னி
வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களால் அனுபவம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். கடன் சார்ந்த சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
துலாம்
எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ரகசியமான சில முதலீடுகள் மேம்படும். மறைவான சில பொருட்களை பற்றி அறிந்து கொள்வீர்கள். காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சிகை அலங்கார பணிகளில் லாபம் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிவு நிறைந்த நாள்.
விருச்சிகம்
மூத்த சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். மனதில் எண்ணியிருந்த காரியங்கள் கைகூடும். எதிர்காலத்திற்கான சேமிப்பை உருவாக்குவீர்கள். உயர்பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். சிரமம் குறையும் நாள்.
தனுசு
சொந்த ஊர் தொடர்பான பயண எண்ணங்கள் அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். அந்நிய வர்த்தகத்தில் லாபம் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். விருத்தி நிறைந்த நாள்.
மகரம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும், அனுபவமும் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
கும்பம்
பிள்ளைகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். எதிலும் கோபமின்றி செயல்படவும். மாற்றம் நிறைந்த நாள்.
மீனம்
போட்டி, பந்தயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.