Rasi Palan Today: மீனத்துக்கு செல்வாக்கு... ரிஷபத்துக்கு லாபம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today February 25: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 25.02.2023 - சனிக்கிழமை
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை
இராகு :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை :
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
சூலம் – கிழக்கு
மேஷம்
எதிலும் பதற்றமின்றி செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். நண்பர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். புதிய பணி நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மேன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதிற்கு பிடித்தவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் பணியையும் சேர்ந்து பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக நிறைவு பெறும். லாபம் நிறைந்த நாள்.
மிதுனம்
உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குழப்பம் குறையும் நாள்.
கடகம்
சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செய்கின்ற முயற்சியில் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
சிம்மம்
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். தடைபட்ட ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். அசதிகள் குறையும் நாள்.
கன்னி
குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் சார்ந்த நெருக்கடிகள் ஏற்படும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெறும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாகி நிறைவு பெறும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
துலாம்
கணவன், மனைவிக்கிடையே விவாதங்கள் தோன்றி மறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நட்பு வட்டம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இழுபறியான வரவுகள் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் படிப்படியாக குறையும். அமைதி நிறைந்த நாள்.
விருச்சிகம்
எதிர்பாராத தனவரவு உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். உடனிருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபார பணிகளில் நிலுவையில் இருந்த பொருட்கள் விற்பனையாகும். உத்தியோகத்தில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.
தனுசு
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு மேல்நிலை கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் சில சூட்சுமங்களை கற்றுத் தருவார்கள். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உயர்வு நிறைந்த நாள்.
மகரம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெற்றி நிறைந்த நாள்.
கும்பம்
குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபார பணிகளில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த தயக்கங்கள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். வரவுகள் நிறைந்த நாள்.
மீனம்
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதை உறுத்திய கவலைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகளை தகர்த்தெறியும் மனப்பக்குவம் ஏற்படும். செல்வாக்கு மேம்படும் நாள்.