மேலும் அறிய

Rasipalan: சிம்மத்துக்கு மாற்றம்... மேஷத்துக்கு லாபம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்..!

RasiPalan Today April 25: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 25.04.2023 - செவ்வாய்கிழமை

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு :

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

எண்ணிய காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நுட்பமான சிந்தனைகளால் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவீர்கள். திடமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். தாமதம் விலகும் நாள்.

மிதுனம்

உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மற்றவர்களின் பணிகளையும் சேர்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். கீர்த்தி நிறைந்த நாள்.

கடகம்

தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களினால் மதிப்பு அதிகரிக்கும். பேச்சுக்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும். கவலைகள் குறையும் நாள்.

சிம்மம்

சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கால் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எண்ணி ஆசைகள் நிறைவேறும். கற்பித்தல் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

கன்னி

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கற்றல் திறனில் மாற்றங்கள் ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உயர் பொறுப்புகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். குருமார்களின் ஆசிகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

துலாம்

கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் உண்டாகும். சகோதரர்களின் வழியில் நன்மை ஏற்படும். வழக்கு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் உள்ள நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

விருச்சிகம்

மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படுவது நல்லது. கால்நடை சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். மாமன்வழி உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடியான சூழல் அமையும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் சிக்கல்களை குறைக்க இயலும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

தனுசு

விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். மதிப்பு மேம்படும் நாள்.

மகரம்

குடும்பத்தினருடன் சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வெளியூர் தொடர்பான பணிகளில் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

கும்பம்

எண்ணிய செயல்பாடுகளில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிறு தூர பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

மீனம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். மனை சார்ந்த விஷயங்களில் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. விரயங்கள் உண்டாகும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget