Rasipalan: கடகத்திற்கு புரிதல்... கன்னிக்கு முன்னேற்றம்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் என்னென்ன?
RasiPalan Today April 23: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 23.04.2023 - ஞாயிறு
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
இராகு:
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம்:
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
மனதில் இருந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சிலரின் அறிமுகத்தின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். வாக்கு சாதுரியத்தின் மூலம் அனுகூலம் ஏற்படும்.
ரிஷபம்
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். மனதில் ஏற்பட்ட சிறு சிறு சஞ்சலங்களின் மூலம் குழப்பம் உண்டாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
மிதுனம்
முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை குறைத்து கொள்ளவும். வெளி உணவினை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
கடகம்
உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவமும், மாற்றமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும்.
சிம்மம்
மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். அரசு வழியில் மறைமுகமான ஆதாயம் உண்டாகும். நீதி துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். குழந்தைகளின் வழியில் அனுகூலம் ஏற்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் பிறக்கும்.
கன்னி
கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வீட்டினை மனதிற்கு பிடித்தவாறு மாற்றி அமைப்பீர்கள். செய்யும் முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருக்கும் கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும்.
துலாம்
பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். அஞ்ஞான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும்.
விருச்சிகம்
வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.
தனுசு
சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். மனதை உறுத்தி வந்த பிரச்சனைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.
மகரம்
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு மேம்படும். விவாதங்களின் மூலம் சாதகமான முடிவு கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
கும்பம்
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் அவ்வப்போது சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கால்நடைகளின் மூலம் வருமானமும், முதலீடும் அதிகரிக்கும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.
மீனம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சூழல் படிப்படியாக மறையும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சிறு தூர பயணங்களால் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.